Monday, July 5, 2010

புதையல் செய்தி!!!!

ஆப்கானில் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் கனிம புதையல் பற்றி போன பதிவு போட்டு மிக குறுகிய காலத்துக்குள் இன்னொரு புதையல் செய்தி...

ஆனால் இம்முறை இது கைக்கு எட்டும் தொலைவில் இருப்பது என்பது கூடுதல் சுவையான செய்தி.... விஷயம் உறுதி ஆகிருச்சு.... இந்த புதையல் வேற எங்கயும் இல்ல நம்ம நாட்டுல அதுவும் நம் தமிழ் நாட்டுல.... இந்த ரகசியம் நமகுல்லையே இருக்கட்டும் சொந்தகார பங்காளிங்களா.... வெளில சொல்லிராதீங்க... ;-)


இந்தியாவிலேயே முதல் முறையாக பிளாட்டினம் கனிமப்படிவங்கள் தமிழகத்தின் கோவை, நாமக்கல் மாவட்டங்களில் அபரிமிதமான அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுடன் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று சென்னையில் கையெழுத்தானது.

சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவரது அறையில் நடைபெற்ற இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கொல்கத்தாவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுத்துறை டைரக்டர் ஜெனரல் என்.கே.தத்தா, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் க.மணிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அப்போது, சட்ட அமைச்சர் துரைமுருகன், சுரங்கத் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் பொதுமேலாளர் வி.மனோகரன் தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தங்க கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் இதுகுறித்து சாந்த ஷீலா நாயர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் கடந்த 2,3 ஆண்டுகளாக பிளாட்டினம் கனிமத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு, இந்திய புவியியல் துறை இப்பணியில் உதவி வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியிலும், மேட்டுப்பாளையத்திலும் பிளாட்டினம் படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிக அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

சத்தம்பூண்டி பகுதியில் 27 சதுர கி.மீ. பரப்புக்கு பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் 5 சதுர கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது. ஆனால், இன்னும் 150 கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.

தற்போது, 30 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டியுள்ளோம். இன்னும் 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தோண்டும்போது மிக அதிக அளவில் பிளாட்டினம் கிடைக்கக்கூடும். உலகில் தற்போது, தென்னாப்பிரிக்காவில்தான் அதிக அளவில் பிளாட்டினம் வெட்டியெடுக்கப்படுகிறது. உலகில் கிடைக்கும் 100 சதவீத பிளாட்டினத்தில் 70 சதவீதம் தென்னாப்பிரிக்காவில்தான் கிடைக்கிறது.

இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே சேரும்.

மத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும். பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான் முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது. இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை என்றார்.
Courtesy: தட்ஸ்தமிழ்

அப்போ கோவை ஜில்லா அதுவும் நாமக்கலை சேர்ந்த சொந்த கார பங்காளிங்க எல்லாம் இந்த செய்தி தெரிஞ்சு படு குஷில இருப்பீங்க.... நிலத்தொட விலை எங்கையோ போ போது...

ஆனால் இதற்காக விவசாய விலை நிலங்கள் கையாக படுத்தப்பட்டால் வேளாண்மைக்கு பங்கம் வந்து உணவு உற்பத்தி பாதிக்க படுமே என்கிற கவலை இப்போதே எழுந்துவிட்டது.... ஒன்றை பெற இன்னொன்றை இழக்கவேண்டும் என்ற நியதிக்கு மாற்று நியதியே இல்லையா.... கோடி கோடியாய் பணம் கொட்டினாலும் காய்ந்து கிடந்தாள் கால் வயிற்றுக்கென்னவோ தேவை கஞ்சி மட்டும் தான்...

பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல்.... அரசு அனைத்தையும் கவனத்தில் கொண்டால் நலம்....

6 comments:

  1. ஆனால் இதற்காக விவசாய விலை நிலங்கள் கையாக படுத்தப்பட்டால் வேளாண்மைக்கு பங்கம் வந்து உணவு உற்பத்தி பாதிக்க படுமே என்கிற கவலை இப்போதே எழுந்துவிட்டது.... ஒன்றை பெற இன்னொன்றை இழக்கவேண்டும் என்ற நியதிக்கு மாற்று நியதியே இல்லையா.... கோடி கோடியாய் பணம் கொட்டினாலும் காய்ந்து கிடந்தாள் கால் வயிற்றுக்கென்னவோ தேவை கஞ்சி மட்டும் தான்...


    .... There is a good news and there is a (very) bad news! mmmmmmmmm......

    ReplyDelete
  2. //Chitra said...
    There is a good news and there is a (very) bad news! mmmmmmmmm...... ///

    Yes indeed... lets jus hope for the best and leave the rest with God...

    ReplyDelete
  3. இனி பசித்தால் அள்ளப்போகும் கனிமத்தை பார்த்தே உயிர்காத்துக் கொள்ளலாம் !

    ReplyDelete
  4. இப்படிப்பட்ட புதையல்கள் புதைந்து கிடக்கும் பூமிக்கு சொந்தக்கார நாடுகளின் அரசியல் அமைப்பும்,சட்டதிட்டங்களும்,படிப்பறிவின்மையும் அந்த நாடுகளை முன்னேறவிடாமல் தடுக்கின்றது என்பதும் வருத்தத்தக்க விடயம்.

    ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...