Sunday, January 31, 2010

வரலாற்றில் நான் (எப்புடி டைட்டில்!!!!! ஹி ஹி)

ஒரு பதிவ போட்டுட்டு அடுத்து என்ன போடறதுன்னு யோசிக்ரதுகுள்ள சுறு சுறுன்னு ஒரு வாரம் ஒடிபோயிடுச்சு.... உண்மைய சொல்னும்னா இந்த பொழப்புக்கு வர்றதுக்கு முன்னாடி...(அதாங்க பிளாக்கர் ஆகறதுக்கு முன்னாடி) அட ப்ளாக் தானே..... அது வெட்டி பேச்சு பேசற எடம்னு (கோச்சுக்கபடாது பங்காளிங்க்லா) நெசமா அப்டி தான் நெனச்சுட்டு இருந்தேன் ....
ஆனா இப்போ தான் புரியுது.... இங்க இருக்ற ஒரு ஒரு பதிவும் ஒரு ஒருத்தவங்க்ளோட மனசு..... அதன் பிரதிபலிப்பு... அவங்கவன்ளோட வாழ்கை... எண்ணம்... எழுத்தாற்றல் இப்டி எல்லாம்.... ஒரு ஒரு ப்ளாகும் இப்போ ஏன் கண்ணனுக்கு ஏதோ ஒரு உயிருள்ள ஜீவன நேர்லயே சந்திச்சு பேசற மாத்ரி இருக்கு(போதும் மிதகாதீங்க சில மொக்கையும் இருக்கத்தான் செய்யுது ஹி ஹி....)
சரி... இப்போ மேட்டருக்கு வரேன்.. அதொண்ணும் இல்லே.... இந்த கூட்டத்துல திருஞ்சு நான் கண்ட பல முகங்கள்.... தங்களோட அனுபவங்கள சொல்றதும்..... அத ரசிச்சு படிக்றதும் பாத்தது கை அரிக்க ஆரம்பிச்சுடுச்சு... அதான்... சில காலங்களுக்கு முன் jeddah வை உலுக்கி போட்ட வரலாறு காணாத வெல்ல பெருக்கு அன்னிக்கி... நான் கொஞ்சம் கடமை உணர்ச்சில office கெளம்பி போயிட்டு... இறைவன் பேரருளால்... மறுபடி பத்திரமா உயிரோட வீடு வந்து சேந்து இப்போ உங்க கூட பேசிக்கிட்டு இருக்கும் இந்த gapla naasiyaa ஸ்டைல்ல சொல்னும்னா கொஞ்சம் கொசுவத்தி சுருள் சுத்தி பாக்றேன் அந்த பயங்கரத்த...
வழக்கம் போல அரை தூக்கத்தில தலைமாட்டில வெச்சுருந்த மொபைல் எடுத்து ஒத்த கண்ண லேசா தொறந்து டைம் பாத்தது தான் தாமதம்... ஆஆஹா... மணி 7.... அவசர கெதில அடிச்சு புடிச்சு எழுந்து balcony கதவ தொறந்தேன, காலைல சில்லுனு வீசுற அந்த காத்து வாங்கறது எனக்கு ரொம்ப புடிக்கும்... அன்னிக்கும் அதே மாத்ரி தொறந்த சில நொடிகள் என் கண்ண என்னாலேயே நம்ப முடில... இது கனவா இல்லலல...(அதுக்காக தமிழ் படம் ரேஞ்சுக்கு கில்லிலாம் பாக்கள)....
ஏதோ ஒரு புது உணர்வு... இதுவர அப்டி ஒரு வானம் நா பாத்ததே இல்ல... கடைசியா சென்னை விட்டு வந்ததோட சரி.. ஆனா கார் இருள் மெல்ல சூழ்ந்து கொல்வத மட்டும் கவனிச்சேன்... கடமை அழைக்க... அரக்க பறக்க office கெளம்பிட்டேன்... அன்று நான் கண்ட அந்த காட்சி இதோ...
மேகங்கள் மெல்ல மூல்கடிதுகொண்டிருந்தன வானத்தை..


viru virunu lift pudichu erangi konja dhooram nadandhen... சாரல் மழை வந்து நெனைக்க.... மொபைல் எடுத்து ஒடனே எங்க மேனேஜர்கு போன் போட்டு... சார்... நெலம மோசமாகிட்டு இருக்கு.... என்னால வர முடியுமான்னு தெரிலன்னு சொல்லான்னு தான் பண்ணேன்.... பட் சொல்லல....
"சார் நா வர கொஞ்சம் லேட் ஆகலாம்" சொல்லி போன் வெச்சுட்டேன்.. (again கடமை உணர்ச்சி ஹா ஹா no no அழப்டாது )
ஹான் சொல்ல மறந்துட்டேன் பாருங்க... இதுல மேட்டர் என்னன்னா.... நா பஸ்ல தான் டெய்லி ஆபீஸ் போவேன்... எப்டியும் 1 hour ஆகும் நா போயி சேர... சோ வீட்ல தூங்க வேண்டிய தூக்கத்த பஸ்ல compensate பண்ணிடுவோம்ல...
அதே மாத்ரி அன்னிக்கும் ஏறி கொஞ்ச நேரத்துல கனவு காண ஆரம்பிச்சுட்டேன்.... நல்லா டூயட் பாடிட்டு இருந்த ஏன் கனவு கரெக்டா ஆபீஸ் நெருங்க்ரபோ ஸ்டாப்... அதென்னவோ தெரில யாரோ எழுப்பி விடற மாதரியே ஒரு பீலிங்கு, திடீர்னு கண் முழிச்சு பாத்தேன்.... ஆபீஸ் விட்டு வீட்டுக்கு போற மாத்றி இருந்துச்சு... இதுவும் கனவோனு கண்ண கசக்கி பாத்தேன்... அது நிஜம் தான்... நெஜமாவே தான்...
ஆம் அப்டி ஒரு மை இருட்டு சூல்ந்துட்டு இருந்தத கண்டு அரண்டு போய்டேன்... ஈவினிங் வீட்டுக்கு வர்றபோ இருக்ற மாதரியே தெருவிழக்குலாம் பளிச்சுன்னு எரிய... கடைகளோட boardum ஜோடி சேந்து திகுலூட்டியது... ஏதோ உலக அழிவின் அடையாளத்த காண்பது போல, எனக்கு mattum தான் இப்டியோனு கொஞ்சம் திரும்பி பாத்தா பஸ்ல இருந்தவன் எல்லாம் பேயறஞ்ச மாத்ரி வெறிச்சு வெளியவே பாத்துட்டு இருந்தாய்ங்க... வந்து சேர வேண்டிய இடம் வந்தது... வானத்தையே வெறிச்சு பாத்தவன வெளில எறங்கினேன்... கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க... இருள் கவ்விக்கொள்ள... எடுத்தேன் சில படங்கள்... அவை இதோ...


இவ்ளோ பெரிய இந்த ரோட டெய்லி கடந்து போறதுக்குள்ள ஒரு கணம் மொத்த குடும்பமே கண் முன்னாடி தோன்றி மறையும்... பாத்து போப்பான்னு சொல்ற மாத்ரி இருக்கும்.


அசுர வேகத்துல வர்ற வண்டிய வெறிச்சு பாத்து... இதுல ஒரு வண்டிக்கு பிரேக் failure ஆனாலோ அல்லது நான் சற்று கிராஸ் பண்ண தாமதிச்சாலோ.... நொடி பொழுதில் முடிந்து விடும் அனைத்தும்... நிரந்தரம் இல்லா இவ்வாழ்க்கையை நித்தம் உணர்த்தும் நெடுஞ்சாலை இது...

(ஐ, நல்லாருகுல, ப்ளாக் எழுத ஆரம்பிச்சாலே இப்டி தான் punchaa வருமோ )
வெது வெதுப்பான வெயில் வெளுத்து கட்ட துவங்கும் காலை 8.30 மணின்னு சொன்னா நம்ப முடியுதா... இன்னும் பல நம்ப முடியாத கதைகளை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.....

அழிவின் சுவடுகளுடன்....

11 comments:

 1. ஓஹ். அன்னைக்கு நீங்களும் ஜித்தாஹ்லதான் இருந்தீங்களா. சரிதான். அந்த நாள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது. ஆஃபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. ஜித்தாவில் 14 வருட வாழ்க்கையில் எனக்கும் மறக்க முடியாத நாள் அது.

  ReplyDelete
 2. /நீங்களும் ஜித்தாஹ்லதான் இருந்தீங்களா//

  அட ஆமாம் தோழரே.... நல்லபடியா வீடு வந்து சேர்ந்த நாமல்லாம் பாக்ய சாலிகள் தான்.... ஆனால் வண்டி வைத்திருந்த பலபேருக்கு படு செலவுன்னு சொல்லி பொலம்பினாங்க... அந்தவகையில் நான் டபுள் பாக்யசாளியாக்கும் ... ஹி ஹி... நடராஜா செர்வீசில் கூட பல நன்மைகள் தான்....

  ReplyDelete
 3. நல்ல வேளை எனக்கு அன்னைக்கு விடுமுறை, வீட்டை விட்டு வெளியில வரலை.

  ReplyDelete
 4. அப்ப நீங்க ஜித்தாவில இருக்கீங்களா? அது சரி.

  //ப்ளாக் எழுத ஆரம்பிச்சாலே இப்டி தான் punchaa வருமோ )//

  பஞ்ச் எங்க பக்கம் இருந்தும் வரும்!!

  படங்கள் பயங்காட்டுது. நேரில பாத்த உங்களுக்கெல்லாம் எப்படியிருந்திருக்கும்??

  ReplyDelete
 5. //நல்ல வேளை எனக்கு அன்னைக்கு விடுமுறை//

  இந்த மேட்டர சொல்லவே இல்ல.... ஆனாலும் அது ஒரு த்ரில்லிங் எக்ஸ்பீரிஎன்ஸ் தான் (வீட்டுக்கு போனப்றம் ம்மா வாப்பா கிட்ட வாங்கி கட்டிகிட்டது வேற விஷயம்)...

  ReplyDelete
 6. //பஞ்ச் எங்க பக்கம் இருந்தும் வரும்//

  பஞ்சர் ஆக்காம விட்ற வர சந்தோஷம்.... இப்டிலாம் பயமுருதப்டாது புள்ளைய... ஹா ஹா

  ReplyDelete
 7. /அப்ப நீங்க ஜித்தாவில இருக்கீங்களா?/

  அடிக்க ஆள் ரெடி பண்ற மாதிரியே கேக்றீங்க... கொஞ்சம் உஷாராத்தான் இருக்கனும்....

  ReplyDelete
 8. photos ரொம்ப அழகா இருக்கு... உங்க எழுத்துக்களும்!!!

  ReplyDelete
 9. /ரொம்ப அழகா இருக்கு... உங்க எழுத்துக்களும்/

  இப்டியே உசுபேத்தி உசுபேத்தி தான், ரணகளம் ஆகிட்ருக்கு ப்ளாகே... இருந்தும் நீங்கல்லாம் சொல்ற பொய் கூட ரொம்ப அழகா இருக்குங்க ஹி ஹி...

  ஒன்னு மட்டும் சொல்றேன் ப்ரியா... உங்க நேர்மை ரொம்ப புடிச்ருக்கு ஹா ஹா
  (நா இத சொன்னத டைரக்டர் சசிகுமார் கிட்ட சொல்லிராதீங்கம்னியோ)

  ReplyDelete
 10. அருமையான க்ளிக்ஸ்....
  ஜித்தா நல்லா இருக்கு

  ReplyDelete
 11. /அருமையான க்ளிக்ஸ்/

  தேங்க்ஸ் போர் யுவர் அப்ப்ரெகிஅதிஒந்ஸ....

  (அய்யய்யோ... என்னங்க இது கொடும... thanks for your appreciationu type பண்ணது இப்டி வந்தருக்கு ஹா ஹா....

  உங்க பாட்டுக்கு எச பாட்டு பாட லைட்டா delay ஆகி போச்சு.... சாரி...

  ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...