- சகோதரத்துவம்
- அனுபவம்
- படிப்பினை
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... என்னோட முதல் பதிவின் தொடர்ச்சியாக இத எழுதுறேன்.
அன்று முழுவதும் வெட்டி தான். இதுக்கு வீட்லயே இருந்த்ருக்லாமோ... ஹ்ம்ம்... முடிஞ்சுது முடிஞ்சு போச்சு முடியாதது முக்கிட்டு போச்சுன்னு வழக்கமாய் என் நண்பர்கள் சொல்லும் ஆறுதலை எனக்கு நானே சொல்லி கொண்டு அவசரமாய் அலுவலகத்திலிருந்து கிளம்பினேன்.. சற்றுநேரம் மெயின் ரோடு வந்தடைந்தது, பேருந்தின் வருகைக்காய் வழிமேல் விழி வைத்து காத்துட்டு இருந்து அரை மணி நேரம் ஒரு மணி நேரம் இப்படி நேரம் கண்டந்துகொண்டே செல்ல..... பேருந்து வருவதற்கான அறிகுறி ஒன்றைமே கானுவதர்கில்லை..... சரி... டாக்ஸி பிடித்தாவது செல்லலாம் என்ற முயற்ச்சியில் அங்கு காத்துகிடந்த கும்பலுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
கை நீட்டி நிறுத்தப்பட்ட 16 வது டாக்ஸி காரனும் கை விரித்து சென்று விட்டான்... காரணம் புரியாமல் காசு கூடுதலாக தருவதாக பேசிய 20 வது டாக்ஸி காரனும் சென்றுவிட... கோவத்தில் அடுத்து வருபவனும் நிக்கவில்லை என்றால், அரை கல் எடுத்து அவன் மண்டையை உடைக்க வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு கபாலம் கப கப என்றாகி கொண்டிருந்தது... அவசரமாய் போன் எடுத்து " ஹலோ மச்சான்... என்னதான் பிரச்சன... ஒருத்தனும் வர மாட்டேன்க்ரானு " அவரிடம் புலம்ப.... நீ வீட்டுக்கு வரவேணா , அங்கயே ஏதாது friends ரூம் இருந்தா தங்கிட்டு காலையில் வா... நாங்க வந்த கார் தண்ணீர் புகுந்து நடுவழியில் காலை வாரிவிட்டதால் நடராஜா சர்வீஸ் கூட செய்ய முடியாமல் தவழ்ந்து செல்வதாக சொல்லி போன் வெச்சுட்டார்.
எரிச்சல் எகிறிக்கொண்டே போக... அடுத்து கை காண்பித்தும் நிறுத்தாமல் சென்ற சில டாக்ஸிகள் நடுவில் நிறுத்தினார் ஒரு முதியவர். எப்படியும் இவரை விட்டால் இன்று வீடு போய் சேருவது இயலாத காரியம் என்பதால் அவரை அமுக்குவதாகவே இருந்தது என் பேச்சு... ஒரு வழியாய் 40 ரியாலுக்கு ஒத்துகொண்டார் அவர், கிளம்ப எத்தனித்த பொழுது, சற்று தொலைவில் ஒரு குடும்பம் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் என நால்வரும் டாக்ஸிக்காக தவிப்பது தெரிந்தது... கொஞ்சம் அப்டி நிருந்த்துங்க என்று சொல்லி கண்ணாடியை இறக்கி எவ்வடே போனும்னு (தம்மலையாலதுல) கேக்க நினைச்ச மாத்திரத்தில், 4 வயது நிரம்பிய குட்டி பொண்ணு வாய் திறந்து நம் தாய் தமிழில் பேசிகொண்டிருப்பதை பாத்து " அட தமிழா? எங்க போனும்னு கேட்க, நான் போகும் வழிதான் என்று தெரிந்ததும் ஏறுங்க நானும் அந்த வழியாதான் போறேன்னு சொல்ல உயிர் வந்தவர்களாய் ஏறி கொண்டார்கள்...
கிழவனுக்கு இதுதான் சந்தர்பம் என்று மண்டைக்கு மேல் மணி அடித்திருக்க வேண்டும்... மொத்தம் 80 ரியால் தரவேண்டும்னு ஒரே புடியாக புடித்து கொண்டவரிடம் ... (குல்லு சவ சவ) "நாங்கள் அனைவரும் ஒருகுடும்பம் தான்" என்று எனக்கு தெரிந்த அரைகுறை அரபியில் அடித்துவிட்டேன்... முடியாதுனு முரண்டு புடித்த கிழவனிடம்... பர்வாலங்க நான் 40 தருகிறேன் என்றார் அந்த குடும்பஸ்தன்... ஹ்ம்ம்... கெழவா உனக்கு வந்த வாழ்வா என்று முதியவரை ஒரு முறை முறைத்துக்கொண்டு தொடங்கியது எங்கள் பயணம்.... வடிவேல் தொனியில் சொல்லவேண்டும் என்றால் நல்லாதானே போய்க்ருந்துச்சுன்னு சொல்வது போல... பொசுக்குனு ஊர்ந்து செல்ல தொடங்கியது கார்...
வெல்லத்தின் சுவடு தெரியாமல் அரை தூரம் கடந்து விட்ட திருப்த்தியில்... பின்னால் இருந்தா குட்டி தேவதையிடம் விளையாட்டாய் சிரித்து பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் வந்தோம்... தனக்கு தன் தாய் தந்த வேபர் பிஸ்கட்டை எடுத்து நீட்டினாள் அவள்... வேணாமா நீ சாப்டுனு பசியை மறைத்து அவளிடம் சொல்ல... இல்ல நீங்க சாப்டுங்கனு அடம் புடித்தாள்... மாமா சின்ன வயசுல இது நெறைய சாப்டேன் அதான் இப்டி வளந்துட்டேன்... நீயும் சாப்டேனா என்ன மாத்ரி பெருசா ஆயடுவேணு அவளுக்கு அறிவுரை சொல்லி கொண்டிருக்க.... பரவால வாங்கிகொங்கனு அவளின் தாய் தந்தையர் வற்புறுத்த... நன்றி சொல்லி கடித்துக்கொண்டு விளையாட தொடங்கினோம்...
பாலஸ்தீன் பாலத்தின் மேல் ஊர்திகலனைதும் ஊர்ந்துகொண்டிருக்க... டமார்... நான் அமர்ந்திருந்த பக்கத்தில் அவசரத்துக்கு பிறந்த ஒருவன் வந்து இடிக்க நசுங்கியது டோர்... ஹார்ன் சத்தங்கள் காதை கிழிக்க.. கிழவர் அடி பலமா என்று கேட்டார் எனகில்ல டோருக்கு... ஹ்ம்ம்...... இருந்தும் கெழவனுக்கு குசும்பு தான்... ஆமாம் என்று பதில் அளித்தேன்... இறைவன் பார்த்து கொள்வான் என்று கூறி தொடர்ந்து செழுத்தி கொண்டிருந்தார் வண்டியை... இறை நம்பிக்கையின் உண்மையான பிரதிபலிப்பாக இருந்தது கிழவனின் சொல்லும் செயலும்... வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்டுகொண்டிருந்த நேரம்.... சில வாகனங்கள் டிவைடர் மேல் ஒய்யாரமாய் உக்கார்ந்து கொண்டிருந்தது பார்த்து அதிர்தேன்... அடுத்து வரப்போகும் ஆபத்தை எதிர்கொள்ள தைரியம் இல்லாத சிலர் வந்த வழியே சென்று விட டிவைடர் தாண்ட முற்பட்ட பொது சிக்கிகொண்ட வாகனங்கள் தான் அவை....
நத்தை போன்று ஊர்ந்து கொண்டிருந்தோம் நாங்கள்... சில வண்டிகள் ஆகாங்கே நிற்க அதன் உரிமையாளர்கள் பதற்றத்துடன் அவற்றுக்கு முதலுதவி செய்துகொண்டிருந்தனர்... பாலத்திலிருந்து இறங்க தொடங்கிய நாங்கள் கீழ் நோக்கி வந்தோம்.... வாகனங்கள் அனைத்தும் நீச்சல் பழகிகொண்டிருப்பதாகவே தோன்றியது... எண்களின் காரும் களத்தில் குதிக்க... டைடானிக் படத்தை நியாபக படுத்தி கொண்டிருந்தது.... சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டு ஊர்ந்துகொண்டிருந்தோம் நாங்கள் அனைவரும்... கிழவரின் வாய் இறைவனை பிரார்த்தித்து கொண்டே தொடர்ந்தது எங்கள் பயணம்.... அணைக்கப்பட்ட தெருவிழக்குகள், ஆங்காங்கே நின்றிருந்த வாகனங்கள் அதனுள் குழந்தைகளின் அலறல்கள் இவை அனைத்தும் வீடு போய் சேருவோம் என்ற நம்பிக்கையை உலுக்கி பார்பதாகவே இருந்தது....
அம்மா தண்ணி... அம்மா... அம்மா... அலறினாள் அந்த குட்டி தேவதை.... திரும்பி பார்த்த பொழுது அவள் காரின் பின் கண்ணாடியின் இடைவெளியில் புகுந்து விட முயற்சி செய்துகொண்டிருந்தால்... ஈரம் எனது கால்களை பட்டு நெனைக்க... அப்போது தான் புரிந்தது எனக்கு தண்ணீர் உட்புகுந்து விட்டிருந்தது.... கிழவனின் முகம் பயத்தினால் தொடர்ந்து இறைவனின் நாமத்தை உச்சரித்து கொண்டிருந்தது...
க்ரர்ர்ர்ர்..... வண்டி சற்று ஓய்வு எடுப்பதாய் நின்று கொண்டது... கிழவனின் கண்களில் தண்ணீர் சுரக்க தன்னை தானே ஏசிக்கொண்டு.... தட்டி எழுப்பினார் வண்டியை... சற்று தூரம் சென்று மறுபடி படுத்து கொள்ள அழத்தொடங்கி விட்டார் கிழவன்....
"குல்லு செய்யார கற்பான்..." "ஏன் வண்டி போச்சு... ஏன் வண்டி போச்சு" என்று கூறி கொண்டு அவர் அழ.... அதுவரை இல்லாத இறக்கம் கெழவனை பார்த்ததும் வந்தது.... ஆறுதல் சொல்ல கூட வார்த்தை இல்லாமல்... அவரையே வெறிச்சு பாத்துட்டு இருந்தேன்... "இப்போ என்ன செய்றதுன்னு பின்னிருந்த அவர்கள் கேட்க.... வேறென்ன செய்ய முடியும்... இதுக்கு மேல் போக முடியாது... நீங்கள் இறங்கி கொள்ளலாம் என்றார் அவர்...
கையிலிருந்த காசை கொடுத்துவிட்டு... நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லாமல்... எங்களை சுமந்து வந்த காரையும் கிழவனையும் ஒரு எட்டு திரும்பி பார்த்தவனாய்.... சில்லுனு இருந்த தண்ணீரில் கால் நெனைக்க..... குட்டி தேவதை தந்தையை கவ்வி கொண்டு தோள்மேல் அமர... நடை பயணம் தொடர்ந்தது..... எங்கு பார்த்தாலும் பழுதாகி போன வண்டிகளும்....
குழந்தைய வேணா குடுங்க நா தூக்கிட்டு வரேன்னு கேட்க, பர்வாளிங்கனு சொன்னார் அந்த குடும்பஸ்தர்... இடுப்பு வரை வந்து விட்ட தண்ணீரால் பர்ஸ் நனைந்துவிடுமோ என்று அதை எடுத்து சட்டை பையில் வைத்து தொடர்ந்து நடந்தேன்.... அவர் தனது மனைவி குழந்தைகளை வழி நடத்தி மெதுவாக அழைத்து கொண்டு வந்தார்... நீங்க வேணுனா கெளம்புங்க தம்பி நா பாதுக்றேனு சொன்ன அவர் வார்த்தையை ஏற்று நடையை கட்டினேன்.... ஆங்காங்கே ட்சுனாமி நினைவு படுத்தும் வகையில் காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டு ஓடிகொண்டிருந்தது தண்ணீர்ர்.... வீடு போய் சேரும் என்னத்தை விடாமல் செயல் படுத்தி கொண்டிருந்தேன்... டிவைடர் மேல் ஏறி நடந்து கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து கொள்ள..... ஒருகணம் எதிர்பாரதவனாய் கரன்ட் கம்பத்தின் இடுக்கில் கால் நுழைந்து கொள்ள தடுமாறி விழப்போன என்னை தாங்கி பிடித்த கரங்கள் சில பாகிஸ்தானி... சவுதி... யமனி... பங்காலி என சகோதரத்துவத்தின் அடையாளம் அன்று தான் புரிந்தது எனக்கு....
வரும் வழியில் நான் கடந்து வந்த பாதை நோக்கி செல்ல முற்பட்டு கொண்டிரந்த வாகன ஓட்டிகளிடம்.... செல்ல வேண்டாம் அந்த பக்கம் செல்ல வேண்டாம் என்று சொல்லி கொண்டே சென்றேன்.... எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்திருக்க சராசரியாக ஒரு மணி நேரத்தில் அடைய வேண்டிய என் வீட்டை ஒரு வழியாய் வந்தடைந்தேன்.... ஆறு மணிக்கு கிளம்பிய நான் பனிரெண்டு மணியளவில்...
ஒரு வழியா நல்லபடியா போய் வீடு சேர்ந்த வரைக்கும் ரொம்ப சந்தோசம்.
ReplyDelete//ஒரு வழியா நல்லபடியா போய் வீடு சேர்ந்த வரைக்கும் ரொம்ப சந்தோசம்.//
ReplyDeleteஎல்லாம் தங்களை போன்ற நல்ல உள்ளங்களின் வேண்டுதல் தான்...
//சகோதரத்துவம்
ReplyDeleteஅனுபவம்
படிப்பினை//
அடிக்கடி இவைகளை நினைவுட்டவே இது போன்ற நிகழ்வுகளின் மூலம் இயறகை நமக்கு பாடம் புகட்டுறதோ?
//இயறகை நமக்கு பாடம் புகட்டுறதோ//
ReplyDeleteசமீபத்திய ஹைத்தி பூகம்பங்களும் கூட இதையே உணர்தியதாக உணர்கிறேன் சகோ... கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஒரு தீவு... வல்லரசின் பக்கத்தில் இருந்தும் பஞ்சத்தின் பிடியில் இருந்ததாக சொல்ல படும் ஹைத்தி... ஒரே நாளில் உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த அதிர்வலைகள்... திருந்துமா சமுதாயம்... பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....
தோழா உங்களுக்கும் இந்த கதிதான, அப்படியே எனக்கு நடந்த மாதிரி உங்களுக்கும் நடந்திருக்கு, என்ன ஆபிசுக்கும் போகும் போது ஒரு உற்சாகதுடந்தான் போனேன் அனால் வீடு திரும்பும்போது, விழி பிதுங்கி போய்வந்தேன்,
ReplyDeleteகற நல்லதுன்ற மாத்ரி சில நேரங்களில் இயற்கை சீற்றங்களும் சில நல்லதுகளை விட்டுவிட்டு தான் செல்கிறது.
ReplyDelete.................உண்மைதான். எல்லாம் நன்மைக்கே. பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததும் கூட, இறை அருள்.
//அப்படியே எனக்கு நடந்த மாதிரி உங்களுக்கும் நடந்திருக்கு//
ReplyDeleteநமக்கு மட்டும் இந்த நெலம இல்ல பங்காளி.... mercedes benzla மெடுக்கா உக்காந்த்ருந்தவிங்க எல்லாம் நடராஜா சர்விஸ்க்கு மாறினார்கள் அன்று....
அனைவரும் சமமென உணர்த்தியது மழை....
//பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததும் கூட, இறை அருள்//
ReplyDeleteஇத காட்டத்தான் அடிகடி இப்டியோ....? அந்த அருள் நம் அனைவருக்கும் அமையட்டுமாக.... அமீன்..
நல்ல விவரிச்சுருக்கீங்க, ஆனா எழுத்துப் பிழைகள் அதிகம். எழுதுன பிறகு ஒரு ரெண்டுதரமாவது வாசிச்சுட்டு பதிவிடுங்க.
ReplyDelete//ஒரு ரெண்டுதரமாவது வாசிச்சுட்டு பதிவிடுங்க//
ReplyDeleteஅவ்ளோதான் அப்றம் நீ வீட்டுக்கு கெலம்புன்றுவாங்க ஆபீஸ்ல...
தோழமைக்கு பிழை தெரியாதுங்கர அசட்டு துணிச்சல் தான் டீச்சரம்மா..... ஹா ஹா...
நா முன்னாடியே சொன்னேன்ல உங்க கிட்ட... எனக்கு தமிழ் சரியா வராதுன்னு.....வேணுனா இப்டி செய்யலாமா இனிமே... நா எழுதி உங்களுக்கு அனுப்றேன்... உங்க correction முடிஞ்சதும் போஸ்ட் பண்றேன்.... எப்பூடி....?
போடா போக்கத்தவனே நீ ஆணியே புடுங்க வேனாங்க்ரீங்க்லா... ஹி ஹி....
//ஆனா எழுத்துப் பிழைகள் அதிகம்//
ReplyDeleteவீடுனா அலங்கோலமா கெடந்தா தான் அழகு.... அது மாத்ரி ஜுய ஜரிதை எழுதறப்போ எழுத்து பிழைகள் இருந்தாதான் அழகு... (ஸ்ஸ்சப்பா... நாம செஞ்ச தப்ப மறைக்க என்னலாம் பிட்டு போட வேண்டி இருக்கு...)
இருந்தும் ஹுசைனம்மா.... நீங்க சொன்னத செய்ய முயர்ச்சிக்றேன்.... அதுவரை தாய் தமிழை படுத்தும் இவனை தயவு செஞ்சு மன்னிச்சுகோங்க... (தாய தானப்பா படுத்த முடியும் ஹி ஹி)