Sunday, May 23, 2010

GOOOOOOOOOOOOOOOOOGLE

ஹலோ... சொந்த கார பங்காளிங்களா.... ரொம்ப நாளா கடை திறக்கவே இல்ல.... எல்லோரும் நலமா இருப்பீங்கன்னு நம்பறேன்.... பெருசா வேலைய ஒன்னும் வெட்டி முறிக்கல.... இருந்தும் சோம்பேறித்தனம் தான் வேற ஒன்னும் இல்ல....

எது எப்டியோ... உங்க பதிவுகள் அனைத்தும் ஒன்னு விடாம படிச்சுட்டு இருக்கேன்... ரொம்ப சிறப்பா தொடர்ந்துட்டு இருக்கீங்க.... சரி நம்ம மேட்டருக்கு வருவோம்....

புதுசா எதுவும் சொல்ல போறதில்ல.... இருந்தும் வந்ததுக்காக ஏதாது சொல்லிட்டு போனுமே அதான்...

எல்லாம் தெரிஞ்ச மேதாவி கேள்வி பட்டுருப்பீங்க..... யாரவது ஓவரா டகுல்பாசு வேலை காமிச்சா அவங்கள இப்புடி தான் சொல்வோம்.... ஆனா இந்த பட்டம் நம்ம கூகுளுக்கு தான் சரியா பொருந்தும்னு நினைக்கிறேன்.... இப்போலாம் யாருக்காவது ஏதாவது தெரிலனா போதும் ஒடனே கூக்ளிங் தான்.... சரி நாம தான் அப்டி இருக்கோம்னா எங்க வீட்டு வாண்டுங்க கூட ரைம்ஸ் தேடுறதுக்கு கூகுல் தான் முதல்ல ஓபன் பண்ணுறாங்க.... இப்போ தான் அஞ்சு வயசு.... ஆனா கேம்ஸ், ரைம்சுனு கூக்ளிங் விளாட்ட ஆரம்பிச்சுருச்சுங்க.....

இப்புடி எதுக்கெடுத்தாலும் கூகுளின் உதவியை நாடும் நாம.... பெரும்பாலும் கூகுல் உபயோகிப்பது வெறும் வெப் பேஜஸ் தேடுவதற்கு தான்.... ஆனால் கூகுளில் இன்னும் பல அறிய பயன்பாடுகள் புதைந்து கிடப்பதை சமீபத்திலே தான் கண்டேன்... அவற்றுள் சில....

மண்டைய உடைச்சுகிட்டு நின்னு கணக்கு வாத்தி கிட்ட மண்டைல நாலு குட்டு வாங்கி போட்ட கணக்கு பார்முலா முதல்... எப்பேர்பட்ட சிக்கலான கணக்குகளுக்கும் போர்முலாவுக்கும் உடனடி விடை.... மேலும் உங்களின் விமானம் குறித்த நேரத்தில் புறப்படுமா (On Schedule) என்பது உங்கள் விமான எண்ணை வைத்து தெரிந்து கொள்ளலாம்... அதுமட்டுமில்லாது அவற்றின் arrival நேரமும் தெரிந்து கொள்ளலாம்....

இது தவிர வெளிநாடுகளில் இருக்கும் நீங்கள் அன்றைய தேதியின் நம் நாட்டின் கரன்சி ரேட்டை உதாரணத்துக்கு நீங்கள் ஊருக்கு அனுப்ப விருக்கும் தொகை 50o ரியலாக இருந்தால் நம் நாட்டு பணத்தின் மொத்த மதிப்பை நொடியில் அறியலாம்... இது மட்டுமல்லாது..... கிலோ மீட்டரிலிருந்து மைலுக்கும்.... மீட்டரை சென்ட்டி மீட்டராக மாற்றவும் இதை உபயோகிக்கலாம்.....

மேல் சொன்ன அனைத்து பயன்பாடுகளும் உங்களில் பலருக்கோ அல்லது சிலருக்கோ இதற்கு முன்னரே தெரிந்திருக்கக்கூடும்.... இருந்தும் இதை எப்படி உபயோகிப்பது என்று சமீபத்தில் அறிந்து கொண்ட என்னை போன்றவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கக்கூடும்... சரி கீழே உள்ள வீடியோ செய்முறை விளக்கம் மூலம் உபயோகிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்....











இறைவனின் வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று.... கூகுளை உலகிற்கு முதலில் தந்த மகத்தான மனிதர்களான Sergey M. Brin , Lawrence E. Page இவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு... கூகுளின் சேவையை மேலும் செம்மை படுத்திய பல மூளை கார பயபுல்லைகளுக்கும் இது மூலம் நன்றி தெருவித்து கொள்வதோடு அப்பீட்டு ஆகிகொல்வது உங்கள் அன்புத்தோழன்...


HAPPY GOOGLING....

Tin Tin Ti Din.... :-)

22 comments:

  1. பரவாயில்லை மொக்கை போட வழி இல்லாட்டி இப்படியும் போடலாமொரு பதிவு . நடத்துங்க...நடத்துங்க...

    ReplyDelete
  2. எல்லாரும் உங்கள மாதுரி மேதாவியா இருக்கணும்னு இல்ல பாஸ்.... எங்கள மாதுரி இந்த விஷயங்கள இது வர தெரிஞ்சுக்காதவங்களுக்காக தான் இந்த பதிவுன்னு எழுதிருக்கேனே படிக்கலையோ...

    //மேல் சொன்ன அனைத்து பயன்பாடுகளும் உங்களில் பலருக்கோ அல்லது சிலருக்கோ இதற்கு முன்னரே தெரிந்திருக்கக்கூடும்.... இருந்தும் இதை எப்படி உபயோகிப்பது என்று சமீபத்தில் அறிந்து கொண்ட என்னை போன்றவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கக்கூடும்... //

    எதையுமே முழுசா உருப்படியா படிக்குற பழக்கம் இல்ல போல... ;-)

    ReplyDelete
  3. //எதையுமே முழுசா உருப்படியா படிக்குற பழக்கம் இல்ல போல... ;-) //

    நீங்களும் என் கணக்கு வாத்தியாரும் ஒன்னுங்க . எப்படி கரெக்டா கண்டுப் பிடிக்கிறீங்க ..ஹி..ஹி..
    :-))))))

    ReplyDelete
  4. //நீங்களும் என் கணக்கு வாத்தியாரும் ஒன்னுங்க . எப்படி கரெக்டா கண்டுப் பிடிக்கிறீங்க ..ஹி..ஹி..//

    Idhenna periya UN Top Secreta.... Ulagathuke theryum neenga evlo periya bulb nu... he he... Neenga eppodhume ipdi dhaana illa ipdi dhaan eppodhumevaa.... ;-)

    ReplyDelete
  5. கூகிள் இல்லாட்டி அவ்ளோதான், சமீபத்தில் ட்ரான்ஸிலேட்டர் (அரபி - ஆங்கிலம்) உப்யோகித்து சில ஸ்லைடுகள் செய்தேன், 80% மிகவும் சரியாக இருப்பதாக சொன்னார்கள்.

    ReplyDelete
  6. கூகுள் தயவுலதான் என்னை மாதிரிச் சிலர், மெத்தப் படிச்ச மேதாவிங்க மாதிரி பதிவுகள் எழுதி ஸீன் போட்டுகிட்டிருக்கோம்!! தாங்க்ஸ் டு கூகுள்!!

    நேத்து ஒரு வார இதழில் இன்னொரு கட்டுரையும் படிச்சேன். இணையம், கூகுள் போன்றவற்றின் மீது அதிகமாகச் சார்ந்திருப்பதனால் நம் அறிவு வளராமல் நுனிப்புல் மேய்பவர்களாக மட்டுமே இருக்கிறோம் என்று விவரித்திருக்கிறது.

    ReplyDelete
  7. அப்புறம், முக்கியமான விஷயம்:

    //ஹலோ... சொந்த கார பங்காளிங்களா//

    சொத்துல (மட்டும்) பங்கு கரெக்டா வந்துடணும் சொல்லிட்டேன்!! பங்காளிச் சண்டைக்குக் காரணமாகிடாதீங்க!!

    ReplyDelete
  8. SUFFIX said...
    //கூகிள் இல்லாட்டி அவ்ளோதான், சமீபத்தில் ட்ரான்ஸிலேட்டர் (அரபி - ஆங்கிலம்) உப்யோகித்து சில ஸ்லைடுகள் செய்தேன், 80% மிகவும் சரியாக இருப்பதாக சொன்னார்கள்//

    ஆமா கூகுல் இல்லாட்டி வாழ்க்கை இப்போ ரோம்பச்செரமமா போய்டும்.... transliteration 80% கரெக்டா... தகவலுக்கு நன்றி... இன்னும் சொல்லப்போன நம்ம இந்த பதிவுலகமும் கூட கூகுளின் வரப்பிரசாதம் தானே... இப்போ யூ டியூபும் கூகுல் வசம்.... இன்னும் எத்தனை எத்தனை...

    ReplyDelete
  9. //ஹுஸைனம்மா said... கூகுள் தயவுலதான் என்னை மாதிரிச் சிலர், மெத்தப் படிச்ச மேதாவிங்க மாதிரி பதிவுகள் எழுதி ஸீன் போட்டுகிட்டிருக்கோம்!!//

    அடடா.... இப்புடி பப்ளிக்கா உண்மைய உலரிட்டீன்களே ஹுஸைனம்மா.... ஹி ஹி :-)...

    ReplyDelete
  10. //ஹுஸைனம்மா said... இணையம், கூகுள் போன்றவற்றின் மீது அதிகமாகச் சார்ந்திருப்பதனால் நம் அறிவு வளராமல் நுனிப்புல் மேய்பவர்களாக மட்டுமே இருக்கிறோம் என்று விவரித்திருக்கிறது. //

    ஆமா நானும் படிச்சுருக்கேன்... இருந்தும் என்னால அதை முழுசா எதுக்க முடில.... காரணம் தேடல் இருக்கும் வரை தான் மண்டைல சரக்கு வளரும்.... எல்லாருக்கும் எல்லாமும் சொந்தமா தெரிஞ்சுருக்கனும்னு அவசியம் இல்ல... கூகுல் இல்லாத காலத்துல கூட இதே தேடல் புத்தகங்கள் வாயிலாக இருந்தது.... லைப்ரரி லைப்லரிகளா நீங்க கூட மேஞ்சுருப்பீங்கனு நினைக்குறேன்... ஆனா இப்போ அந்த தேடல் எளிதாக அமைய பெற்றதில் சோம்பேறிகளாக்க படுவதென்னவோ உண்மை தான்.... ஆனால் மூளை மலுகுதுங்கிறது தான் ஏத்துக்கிற மாதுரி இல்ல.... ஏனா தேடல் அன்றும் இன்றும் ஒன்று தானே....

    ReplyDelete
  11. /ஆனால் மூளை மலுகுதுங்கிறது தான் ஏத்துக்கிற மாதுரி இல்ல.... ஏனா தேடல் அன்றும் இன்றும் ஒன்று தானே//

    தோழரே, கரெக்ட்தான். ஆனா பாருங்க, இணையம் இல்லாதப்போ, அலைஞ்சு திரிஞ்சு தேடவேண்டியிருந்ததால நாம தேடுறதும், கூடுதலா கிடைச்சதும் நம்ம மனசுல ஆழமாப் பதிஞ்சுது. பல பேர் நடமாடும் அறிவுக் களஞ்சியமாவே இருந்தாங்க.

    ஆனா, இப்ப விடைகள் சுலபமா கிடைச்சுடறதால, நாம ரொம்ப அலட்சியமா ஆகிடுறோம். எதுன்னாலும், இதோ ஒரு கிளிக்ல கிடைச்சுடப்போகுதுன்ற அலட்சியம். பணம் ஈஸியா கிடைக்கிறதால, இந்தக் காலத்து குழந்தைங்ககிட்ட இருக்கிற மாதிரி ஒரு அலட்சியம்.

    Of course, it differs from person to person. Thanks for a good discussion!

    ReplyDelete
  12. ஹுஸைனம்மா said...
    அப்புறம், முக்கியமான விஷயம்:

    //ஹலோ... சொந்த கார பங்காளிங்களா//

    சொத்துல (மட்டும்) பங்கு கரெக்டா வந்துடணும் சொல்லிட்டேன்!! பங்காளிச் சண்டைக்குக் காரணமாகிடாதீங்க!!

    ஆஹா... எத்துண பேரு கிளம்பிருக்கீங்க இப்புடி...? :-)... பங்களிங்கனா ஏன் சொத்துக்கு மாத்திரம் இது பொருந்தாது... உங்க சொத்துல எனக்கும் பங்கிருக்குனு அர்த்தம்... ;-) இதெப்பூடி.....? இப்போ சொல்லுங்க டீலா நோ டீலா... ஹி ஹி...

    ReplyDelete
  13. //உங்க சொத்துல எனக்கும் பங்கிருக்குனு அர்த்தம்..//

    அவ்வ்வ்வ்... நானா உங்கள பங்காளின்னு சொன்னேன்? நீங்கதானே என்னைச் சொன்னீங்க?

    அதனால இது செல்லாது...

    ;-)))

    ReplyDelete
  14. ஹுஸைனம்மா said... //ஆனா பாருங்க, இணையம் இல்லாதப்போ, அலைஞ்சு திரிஞ்சு தேடவேண்டியிருந்ததால நாம தேடுறதும், கூடுதலா கிடைச்சதும் நம்ம மனசுல ஆழமாப் பதிஞ்சுது. பல பேர் நடமாடும் அறிவுக் களஞ்சியமாவே இருந்தாங்க//

    அதென்னவோ உண்மை தான்... தேடல்களின் சுவாரசியங்கள் குறைஞ்சு போச்சுங்கிரத மறுக்கவே முடியாது....

    //விடைகள் சுலபமா கிடைச்சுடறதால, நாம ரொம்ப அலட்சியமா ஆகிடுறோம். எதுன்னாலும், இதோ ஒரு கிளிக்ல கிடைச்சுடப்போகுதுன்ற அலட்சியம்//

    தாலி கட்டியாச்சு இனிமே யோசிச்சு என்ன பிரயோஜனம்... வருங்காலம் இனி கூகுளின் வசம் தான்... வாழ்க வளமுடன்... :-)

    ReplyDelete
  15. ஹுஸைனம்மா said...
    //உங்க சொத்துல எனக்கும் பங்கிருக்குனு அர்த்தம்..//
    அவ்வ்வ்வ்... நானா உங்கள பங்காளின்னு சொன்னேன்? நீங்கதானே என்னைச் சொன்னீங்க?
    அதனால இது செல்லாது... ;-)))

    ஐ... இது கல்லாட்டம்... அதெப்புடி நான் சொன்னத ஏத்துகிட்டு தானே டீல் பேசவே வந்தீங்க... இப்போ இப்புடி பின் வாங்கினா....? இது ஒருதலை பட்சமானது.... ஆகவே யுவர் ஆனர்.... தீர்ப்ப மாத்தி சொல்லுங்க... ஹி ஹி...

    ReplyDelete
  16. April 5 , அப்புறம் ஏன் இவ்வளோ கேப் ?

    ReplyDelete
  17. //மங்குனி அமைச்சர் said... April 5 , அப்புறம் ஏன் இவ்வளோ கேப் ? //

    Summaa dhaan.. tired aairuchu... ;-)

    ReplyDelete
  18. GOOGLE IS GOD! athula sandehamey illa! :)

    ReplyDelete
  19. Vangikittadhu late dhan.. but romba sandhosam..... nandri irshaath....

    ReplyDelete
  20. //Matangi Mawley said...
    GOOGLE IS GOD! athula sandehamey illa! :)//

    God padaicha jujubi manushan ivlo panraana, appo God???? Oh my God.... Varugaikum commentkum thanksnga....

    ReplyDelete
  21. http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_13.html

    :-) Best wishes!

    ReplyDelete
  22. சித்ரா சிஸ்டர்... நன்றி நன்றி நன்றி... என்னதான் வலை பக்கம் பதிவெழுதாம ஓபி அடிச்சாலும், உங்க பாசத்துக்கு அளவே இல்ல... என்னை மறக்காமல் மைண்ட்ல வைத்திருந்ததுக்கு முதல் நன்றி.. பிரமாதமா ஒன்னும் இல்லனாலும் வரிசைல கோத்துவிட்டதுக்கு ரெண்டாவது நன்றி.... எனக்கொரு டைட்டில் குடுத்தீங்க பாருங்க.... நன்றியோ நன்றி... ஹ ஹ :-)

    ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...