ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொது சுகாதாரத் துறை பேராசிரியர் சைமன் சாப்மேன். பன்றியின் ரத்தம் பயன்படும் பொருட்கள் குறித்து அவர் விரிவான ஆய்வு நடத்தினார். அதில் பல்வேறு வகையான 185 தொழில்களில் பன்றியின் ரத்தம் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.
பில்டர்(filter) சிகரெட்டில் உள்ள வடிகட்டும் (filter) பகுதியில் புகையிலை துகள்களை பஞ்சு வழியாக எளிதாக வடிகட்ட பன்றி ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் பயன்படுத்தப்படக் கூடும் என்று சைமன் கருத்து தெரிவித்துள்ளார்.
சிகரெட் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பட்டியலை நிறுவனங்கள் வெளியிடுவதில்லை. சில நிறுவனங்கள் இணைய தளத்தில் வெளியிட்டாலும், ‘பதப்படுத்தும் பொருட்கள்’ என சிலவற்றை பெயர் குறிப்பிடாமல் அறிவிக்கின்றன.
கிரீஸ் நாட்டின் ஒரு நிறுவனம் பன்றி ரத்தத்தின் ஹீமோகுளோபினை பில்டர்(filter) சிகரெட்டில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு...
பன்றி இறைச்சியை இறைவன் எவ்வாறு தடை (ஹராம்) செய்துள்ளானோ அது போல் பன்றி ரத்தத்தினால் செய்யப்பட்ட பில்ட்டர் சிகரட்டுக்களும் கூடாது தானே... பன்றியை விடுங்கள்... புகைப்பது உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடல்லாமல் உங்களை சுற்றி உள்ள அனைவரையும் அதுவும் உங்களை விட பன்மடங்கு அதிகம் பாதிப்பை உண்டாக்கும் என்கிறார்கள்... இந்த வெள்ளை விஷம் உங்களுக்கு தேவையா... உங்கள் உடலுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யா விட்டாலும் சரி..... அதற்க்கு தீங்கு விளைவித்தமைக்கு படைத்தவனிடம் என்ன பதில் கூறப்போகிறீர்கள்.... சிறப்பான உடலை உனக்கு தந்தேனே... இப்படி சல்லடையாகிப்போன நுரை ஈரலுடனும், புற்று நோயுடனும் கொண்டு வந்திருக்கிறாயே என்று உங்களிடம் கேட்கப்படும்போது என்ன சொல்வீர்கள்....
சொந்தங்களே.... வாழ்வின் 7 நிமிடத்தை புகையாக்கி விட்டு கொண்டிருக்கும் நாம் எத்தனை ஏழு நிமிடங்களை துளைத்துள்ளோம் என சற்று சிந்தித்து பாருங்கள்... அதில் ஒரு நிமிடத்தை இவ்வுலகில் உள்ள சர்வ பலம் பொருந்திய அத்துணை பேரும் சேர்ந்து முயற்சித்தாலும் மீட்டு தர முடியுமா? இதெற்கெல்லாம் பதில் சொல்ல போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணருமா உள்ளம்...???
நீங்கள் கரியாக்கும் காசு ஒரு ஏழை குழந்தையின் பசியை ஆற்றக்கூடும்..... ஒரு வேலை உணவுக்கு நாயாக உழைக்கும் எத்துனை எத்துனை மக்களை கடந்து செல்கிறீர்கள்.... உங்களின் வாயிலிருந்து ஊதப்படம் புகை அவர்களின் வயிற்று பசிக்கு உணவு....
புகைக்காமல் எவரும் உயிரை விட்டதாக சரித்திரம் இல்லை.... பசியால் நொடிக்கு நொடி உலகெங்கிலும் மரணங்கள் நிகழ்ந்த வண்ணமே இருப்பதை அறிந்தும் புகைத்துக்கொண்டே அடுத்ததை எடுத்து பற்றவைத்து புகைக்கும் அரக்க குணம் எங்கிருந்து வந்தது...???
என்னை எந்த விதத்திலும் இப்பதிவை இட தயார் படுத்தி கொள்ளாத காரணத்தினால்... அதிர்ச்சி தரும் பல புள்ளி விவரங்களை என்னால் சேகரித்து இங்கு தர இயலவில்லை என்பது வருத்தமே... விருப்பம் உள்ள நம் பதிவர்கள் யாராகிலும் இதை பற்றிய இன்னும் பல தகவல்களுடன் தொடரலாமே....
கடைசியாக ஒரு படத்துடன் இப்பாடத்தை முடிக்கிறேன்.....
புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒன்று..மற்றும் நாமும் நம் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு இது குறித்து எச்சரித்தல் நலம்....
ReplyDeleteஎல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்தான், இதைக் கொண்டு எத்துனை பேர் படிப்பினை பெற போகிறார்கள்??? இதில் உள்ள அத்துனை கேடுகளையும் தெரிந்தும் சிகெரட் பிடிப்பவர் இதைப் படித்தும் திருந்தவில்லையென்றால் வாழ்ந்தே வேஸ்ட்!!! செத்தாலும் வேஸ்ட்தான் அங்கே! நல்ல பதிவு மச்சான், வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteதமிழரசி said... //நாமும் நம் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு இது குறித்து எச்சரித்தல் நலம்//
ReplyDeleteவாங்க தமிழ்... கையால் தடுக்க சக்தியற்றமையால் சொல்லால் செய்தேன்... ஆனால் உங்களின் கவிதை இன்னும் அழுத்தமாக சொல்லக்கூடியவை... விரைவில் எச்சரிக்கை மணியொன்று அடிப்பீர்களா???
M.A.K said... /படித்தும் திருந்தவில்லையென்றால் வாழ்ந்தே வேஸ்ட்!!! செத்தாலும் வேஸ்ட்தான் அங்கே/
ReplyDeleteசரியா சொன்னே மச்சான்... சும்மா புண்ணியம் எதுவும் செய்யாம இருந்தா, அதுவே ஒரு பாவம்.... இதுல பாவம் வேற செஞ்சா???
சிகரெட் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பட்டியலை நிறுவனங்கள் வெளியிடுவதில்லை. சில நிறுவனங்கள் இணைய தளத்தில் வெளியிட்டாலும், ‘பதப்படுத்தும் பொருட்கள்’ என சிலவற்றை பெயர் குறிப்பிடாமல் அறிவிக்கின்றன.
ReplyDelete.... SMOKING IS HAZARDOUS TO YOUR HEALTH.
Be alert! very nice write-up.
சின்ன வயசிலிருந்தே எனக்கு இந்த பழக்கம் இல்லை . யாராவது புகை பிடித்தால் பக்கத்திலேயே இருப்பதில்லை ஓடிவிடுவேன். அப்படி என்னதான் சாதித்தாங்க இதை பிடிச்சி...............
ReplyDeleteமிக.....மிக....நல்ல பதிவு..
Chitra said... //very nice write-up//
ReplyDeleteThankss...
ஜெய்லானி said... //மிக.....மிக....நல்ல பதிவு//
ReplyDeleteநன்றி... யாரூ!!! அண்ணன் ஜெய்லானியா??? ;-) அட மெய்யாலுமே நீங்களும் நம்ம கோஷ்டியா?!?!? அதுசெரி...
Chitra said... //SMOKING IS HAZARDOUS TO YOUR HEALTH//
ReplyDeleteNot only injurious to their health but also for others around them.... avvvvv..... :-(
புகை கட்டுரை ஒகே ஒகே...
ReplyDeleteஅருமை.
அஹமது இர்ஷாத் said... /அருமை/
ReplyDeleteThanks
ரொம்ப நல்ல பதிவு, சரியாக சொல்லி இருக்கீங்க, நல்ல வேலை, உயர் ஊதியத்தில் இருக்கும் பெரிய பொறுப்பான பதவியில் உள்ளவர், சின்ன வயகாரர், இந்த சிக்ரெட்டினால், கேன்சர் வந்து இரண்டு மாதம் முன் உயிர் துறந்து விட்டார்/ அவர் பெண்டாட்டி பிள்ளைகள் இப்போது ஆதரவில்லாமல்
ReplyDeleteஅவர் எப்படியாவது அதை சிக்ரேட் குடிப்பதை குறைக்க முயற்சித்து இருக்கலாம்..
Jaleela said... //சிக்ரேட் குடிப்பதை குறைக்க முயற்சித்து இருக்கலாம்//
ReplyDeleteஅட... எங்க போனீங்க ஜலீலாக்கா ஆளையே காணோம் இந்த பக்கம்... ஆமா என்ன நீங்க... இதையே விட்டொழிக்க சொல்லி பதிவு போட்டா... அவரு குறைக்க முயற்சித்திருக்கலாம்ன்குறீங்க.... ஒ.. அட்லீஸ்ட் அதாவது செஞ்சுருக்கலாமேனு சொல்றீங்களோ.... ஹ்ம்ம்.. பாவம் அந்த குடும்பம்... அப்டி என்னதான் இருக்கோ தெரில அதுல.... இத விட கொடும முன்னலாம் பசங்க தான் தம் அடிப்பாங்க... இப்போ ஊருல நான் வேலை பார்த்த ஐ டி பார்க்குல பசங்களுக்கு ஈகுவலா பொண்ணுங்களும் ஊதுதுங்க... எங்க போயி முடியுமோ தெரில....
நேற்று இங்கு(தோஹா) நான் டிராஃபிக் சிக்னலில் வண்டியில் இருக்கும்போது பக்கத்து வண்டியில் டிரைவிங் சீட்டில் அரபி லேடி!? நல்லா புகையை" விட்டுக்கொண்டிருந்தார் அதுவும் புர்காவோடு.. உடையில் இஸ்லாம், நடைமுறையில் காஃபிர் . இதுதான் "அரப்ஸ் வேர்ல்டு" இப்பொழுது..
ReplyDeleteஇவ்வளவு நாள் புகையிலையினால் மட்டும் தான் கேடு என அறிந்திருந்தோம், இப்போது அதன் ஃபில்டரினாலும் கேடு என ஆதரத்துடன் விளக்கியுள்ளீர்கள். நல்ல பகிர்வு.
ReplyDeleteSUFFIX said...//ஃபில்டரினாலும் கேடு என ஆதரத்துடன் விளக்கியுள்ளீர்கள். நல்ல பகிர்வு//
ReplyDeleteஇந்த சுப்ஜெச்டுக்கு இன்னும் பல திடுக்கிடும் ஆதாரங்கள் குடுக்கலாம்... ஆனால் தயார் படுத்தி கொள்ளாமல் இட்ட இடுகையினால் மேலும் பல தகவல் தர இயலவில்லை... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...
அன்புதோழன் சார், படத்த எடுத்துட்டேன் , இப்ப போய் பாருங்க , ரொம்ப நன்றி
ReplyDeleteபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
ReplyDeleteMatangi Mawley said...
ReplyDelete//பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!//
அட புது சொந்தம்... வாங்க வாங்க... :-)
மங்குனி அமைச்சர் said...
ReplyDelete/அன்புதோழன் சார், படத்த எடுத்துட்டேன் , இப்ப போய் பாருங்க , ரொம்ப நன்றி /
சார் கீருலாம் வேணா... என் வார்த்தைக்கு மதிப்பு குடுத்து உடனடியாக செயலாற்றியமைக்கு ரொம்ப நன்றி... பின்னூட்டம் போட்ருக்கேன் போய் பாருங்க...
அஹமது இர்ஷாத் said...
ReplyDelete//நேற்று இங்கு(தோஹா) நான் டிராஃபிக் சிக்னலில் வண்டியில் இருக்கும்போது பக்கத்து வண்டியில் டிரைவிங் சீட்டில் அரபி லேடி!? நல்லா புகையை" விட்டுக்கொண்டிருந்தார் அதுவும் புர்காவோடு..//
என்ன கொடும சார் இது...?
//உடையில் இஸ்லாம், நடைமுறையில் காஃபிர் . இதுதான் "அரப்ஸ் வேர்ல்டு" இப்பொழுது.. //
வறுத்தமான விஷயம் தான்...
நல்ல தகவல் சொல்லும் பதிவு. புதுசா சில விசயம் தெரிஞ்சுகிட்டேன். நன்றி
ReplyDeleteஅப்பாவி தங்கமணி said... //நல்ல தகவல் சொல்லும் பதிவு.// Thanks....
ReplyDelete//புதுசா சில விசயம் தெரிஞ்சுகிட்டேன்.// Apdiyaa...
//நன்றி// Idhukedhuku iwlo periyavaarthailaam.. :-)