Wednesday, March 31, 2010

ORIGINAL தூக்க மாத்திரை PLS?????

எனக்கு இப்போ வரும் கோவத்துக்கு தூக்க மாத்திரைய சாப்புட்டு கொஞ்ச நேரமாவது நிம்மதியா எல்லா எழவையும் மறந்துட்டு தூங்கனும் போல இருக்குங்க.... அது கூட எந்த கடைல வாங்கினா ஒரிஜினலா மாத்திரை கிடைக்கும்னு தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா..... :-(((

ஏன் இந்த கொல வெறின்னு புருவத்த தூக்கிட்டு கேட்குற எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்குறேன்... உங்களுக்கும் இந்த உண்மைகளெல்லாம் தெரிஞ்சப்புரம்... எட்றா அருவாள... கட்டுறா வண்டியனு சொல்வீங்க... இல்ல என்ன மாதுரி புலம்புவீங்க...ஏனா நாம எல்லாம் அநியாயத்தை பாத்து பொங்கி எழும் சூடான சேம் ப்ளட்டு...

போன பதிவுல இயற்கையின் அருட்கொடைகள் பல பிரச்சனைக்கு தீர்வா இருக்குனு முடிவுரை சொல்லி என்னோட பதிவ முடிச்சேன்... அதுக்கப்புறம் இப்போ நான் கண்ட காட்சிகள் அதிர்ச்சி தரும் பல தகல்வல்கள பாத்து மனசு பத பதைக்க உங்க கிட்ட மறுபடி ஓடோடி வந்துருக்கேன் காரணம் பாலு விஷமாகுதாம், பயிறு விஷமாகுதாம், விளைச்சல் நிலம் மலடாகுதாம்,அப்புடியே விளைவிச்சாலும் அத சாப்பிடும் மனித இனம் மலடாகுதாம் இப்புடி எதை எடுத்தாலும் விஷம்னா என்னத்த தான் துன்னுறது....

இந்த பதிவும் வழக்கம் போல நம்ம இயற்கைய பத்தி அமைந்தது எதேச்சையாக தான்.... இப்புடியே போய்ட்டு இருந்தா நானும் இயற்கை ஆர்வலராகி அப்புறம் தீவிரவாதியா ஆய்டுவேணு நினைக்கிறேன்.... தீவிரவாதினா இயற்கைய வளங்களை காக்கும் பணியில் தீவிர வாதிப்பா எக்குத்தப்பா புரிஞ்சுகிட்டு என்கவுண்டர் வர இழுத்து விட்டுறாதீங்க பங்காளிங்களா.... எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...

நம் முன்னோர்கள் இயற்கையோட ஒன்றிய வாழ்கை நெறியை கடைபுடிச்சதாலும்... இயற்கை வளங்களுக்கு பாதிப்பில்லாத அழகான வாழ்கை முறையை அமைத்து கொண்டதாலும் ரொம்ப காலம் ஆரோகியமா வாழ்ந்தாங்க.... ஆனா அதுலாம் இப்போ STD(history) ஆகிபோச்சு.... வளரும் நம் குழந்தைங்க கிட்ட உங்க பாட்டி 100 வருஷம் வாழ்ந்தாங்கனு சொன்னா இதென்ன சக்திமான் பார்ட் 10 னு கேப்பாங்க போல...


அப்போ
இருந்த விளை நிலங்கள் இப்போ நாம வசிக்கும் அடுக்கு மாடிகுடியிருப்புகளாகி... அப்போ இருந்த நிதான உலகம் இப்போ அவசர உலகமாக மாறிப்போய்.... instant நூடுல்ஸ் மாதுரி இப்போ instant அரிசி கண்டு புடிக்கும் அளவுக்கு இழுத்துகிட்டு வந்துருக்கு.... அட ஆமாங்க இனிமே சோறு உன்ன அடுப்பே தேவை இல்லையாம்.... தண்ணில அரிசிய போட்டா சோறு ரெடி... (அப்போ ஆனம்னு (குழம்புன்னு) ஆர்வமா கேக்கும் மக்களுக்கு... கடைல வாங்கிக்கொள்ளவாம்... எப்புடி எல்லாம் சோம்பேரியாக்குரானுகப்பா ....)



போற போக்க பாத்தா பத்து மாசம் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தை செல்வங்களை கூட instantaa பெத்துபாங்க போல... இப்போவும் instant குழந்தைங்க பொறக்குது அது instant messengerla.... நிஜத்தில் பெற்றடுக்கும் காலம் ரொம்ப தொலைவில்இல்லைங்குறது வேதனையான விபரீதம்... இப்புடி வேகம் வேகம்னு எல்லாத்துலையும் வேகத்த கூட்டி கடைசில என்னாச்சு தெரியுமா.... இதுக்கு மேலநான் பேசினா சரியா வராது.... நீங்களே பாத்து நொந்துக்கோங்க....













நிலைமை இப்புடி இருந்தா வருங்காலத்துல formality க்கு கூட first night பால் வைக்க மாட்டாங்க போல.... ஹ்ம்ம்... ஏன் கவலை எனக்கு :-(((.... என்னத்தசொல்ல...

Videos Courtesy: Techsatish.net

18 comments:

  1. அமெரிக்கா கோடு போட்டா, ரோடே போட்டுருவாங்க போல...... இங்கே, பல inspected and controlled procedures படி கொடுக்கப்படும் மருந்தினை, ஏதோ சாதாரண புல்லு போடுறது மாதிரி, மாட்டுக்கு கொடுப்பதை யார் தடுக்கப் போகிறார்கள்? பணம் இன்று பாலில் விஷம் கலக்க வைத்து விட்டது. இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் இனி அல்ல. இன்னைக்கு பால்னா, நாளைக்கு சங்குதான் - மாட்டுக்கும் சேர்த்து.....!

    ReplyDelete
  2. //ஹ்ம்ம்... ஏன் கவலை எனக்கு :-(((.... என்னத்தசொல்ல... //

    அதுக்குதான் காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணணும்னு சொல்றது.இல்லாட்டி இப்படிதான் பொலம்பனும்

    ReplyDelete
  3. நிஜத்தில் பெற்றடுக்கும் காலம் ரொம்ப தொலைவில்இல்லைங்குறது வேதனையான விபரீதம்...

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல..என்ன நடக்குதுன்னே தெரியலை

    ReplyDelete
  4. Chitra said... //இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் இனி அல்ல. இன்னைக்கு பால்னா, நாளைக்கு சங்குதான் - மாட்டுக்கும் சேர்த்து//

    என்ன கொடும சார் இது....??? :-(

    ReplyDelete
  5. ஜெய்லானி said... //அதுக்குதான் காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணணும்னு சொல்றது.இல்லாட்டி இப்படிதான் பொலம்பனும்//

    இதுக்கும் கம்மியான வயசுல எனக்கு திருமணம் பன்னிருக்கனும்னா... கை குழந்தைகள் திருமண தடைசட்டத்துல உங்கள கைது பன்னிருபாங்க ;-)... ஹி ஹி... காப்பாத்திருக்கோம்னு நினச்சு பெரும படுங்க பிரதர்...? நீங்க சொல்ற படி கல்யாணம் பண்ண அப்போ எனக்கு 1 வயசு.. ஹி ஹி...;-)

    ReplyDelete
  6. தமிழரசி said...//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல..என்ன நடக்குதுன்னே தெரியலை//

    நல்லதா போச்சு..... தெரிஞ்சுகிட்டா அப்புறம் நிம்மதி போய்டும்... இதுக்கு அப்டியே தத்தியா இருக்கிறதே மேல்... ;-)

    ReplyDelete
  7. சாரி இன்ஸ்டெண்ட்டா வர முடியல, ஆமா இப்படியே போனா எங்கெ போய் முடியப்போவுதோ...Any way no worries, be happy!!

    ReplyDelete
  8. SUFFIX said...
    //சாரி இன்ஸ்டெண்ட்டா வர முடியல, ஆமா இப்படியே போனா எங்கெ போய் முடியப்போவுதோ...Any way no worries, be happy!!//

    Instanta வரலேனாலும் நீங்க வந்ததே சந்தோஷம்.... ஹ்ம்ம்... வேறென்ன பண்றது... :-( cheeers ... :-)

    ReplyDelete
  9. //தண்ணில அரிசிய போட்டா சோறு ரெடி...//


    எந்த "தண்ணின்னு" கடைசி வரை சொல்லவே இல்ல.....

    ReplyDelete
  10. //அஹமது இர்ஷாத் said...
    //தண்ணில அரிசிய போட்டா சோறு ரெடி...//
    எந்த "தண்ணின்னு" கடைசி வரை சொல்லவே இல்ல.....//

    எவ்வளவு சீரியஸாப் பேசிக்கிட்டிருக்காரு... உங்க கவலை உங்களுக்கு!!

    விருது வாங்கின கையோட ஓவர் பொறுப்பு வந்துடுச்சு போல!!

    ReplyDelete
  11. அஹமது இர்ஷாத் said... //எந்த "தண்ணின்னு" கடைசி வரை சொல்லவே இல்ல//

    அதொண்ணும் இல்ல பங்காளி... கடல் தண்ணில தான் ... ;-) ஏனா உப்பு அதுலயே இருக்கும் பாருங்க... ஹி ஹி ;-)....

    (என்னா ஒரு வில்லங்கத்தனம்... எப்பா...)

    ReplyDelete
  12. ஹுஸைனம்மா said... //எவ்வளவு சீரியஸாப் பேசிக்கிட்டிருக்காரு... உங்க கவலை உங்களுக்கு!!//

    ஹ ஹ வாங்க வாங்க... எங்கடா ஆள காணோமேனு பாத்தேன்... சப்போர்ட்டுக்கு ஆள் இல்ல கலாய்க்கலாம்னு நெனச்சீங்களா இர்ஷாத்..??? வந்துட்டாங்க பாருங்க எங்க பெண் சிங்கம்.... ஹி ஹி... அடுத்த பதிவுல உங்கள டேமேஜு பண்ணிருவாங்க சாக்கிரதை....

    (ஹுசைனம்மா எப்புடி நம்ம விளம்பரம்..??? ha ha:-)

    ReplyDelete
  13. ஹுஸைனம்மா said... //விருது வாங்கின கையோட ஓவர் பொறுப்பு வந்துடுச்சு போல//

    :-)அப்டின்னு இல்ல... எப்போதுமே இருக்கு... ஆனா இப்போலாம் அதிகம் அதிகமா வெளிப்படுத்துறேனு நினைக்குறேன்... :-) Thanks anyway...

    ReplyDelete
  14. ஹுஸைனம்மா said...
    //எவ்வளவு சீரியஸாப் பேசிக்கிட்டிருக்காரு... உங்க கவலை உங்களுக்கு!!//

    விடு ஜீட்...

    ReplyDelete
  15. அட இதுக்காகவா தூக்க மாத்திரை, ரொம்ப புலப்பமா இருக்கே/

    //அதொண்ணும் இல்ல பங்காளி... கடல் தண்ணில தான் ... ;-) ஏனா உப்பு அதுலயே இருக்கும் பாருங்க... ஹி ஹி ;-).... //

    நல்ல பதில்

    ReplyDelete
  16. eela said...//அட இதுக்காகவா தூக்க மாத்திரை, ரொம்ப புலப்பமா இருக்கே//

    இதுக்காகவான்னு இப்புடி கேட்டுபுட்டீங்க... வருங்காலத்தை பத்தின கவலை தான்... நாளைக்கு நம் சமுதாயம் நல்லா இருக்கனுமேன்னு ஒரு சின்ன ஆதங்கம் பெருசா fuss out ஆகி பதிவா வந்துருச்சு....

    ReplyDelete
  17. அன்பின் அன்புத் தோழன்

    ஆதங்கத்துடன் எழுதப்பட்ட இயல்பான இடுகை. என்ன செய்வது - ...... காலம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கும் - நாமும் அதனுடன் செல்ல வேண்டியது தான். இயற்கைகு எதிராகச் செல்ல வேண்டிய நிலை. அரசின் கொள்கைகள் - பெருகும் மக்கட்தொகை - அதிகத் தேவையினால் அழியும் வளங்கள் - காலம் பதில் சொல்லாது - இயலாமை - நாம் இடுகை போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் செல்கிறோம். நம்மால் ஆக்கபூர்வமாக என்ன செய்ய இயலுகிறது.

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    நல்ல சிந்தனையில் - நல்ல நோக்கத்தில் எழுதப்பட்ட நல்லதொரு இடுகை. நல்வாழ்த்துகள் அன்புத் தோழன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. //cheena (சீனா) said... நல்ல சிந்தனையில் - நல்ல நோக்கத்தில் எழுதப்பட்ட நல்லதொரு இடுகை//

    நன்றி சீனா அய்யா.... ஏதோ ஆதங்கத்தை கொட்ட ஒரு இடம், அதையும் கனிவோடு கேட்கும் முகம் தெரியாத பல சொந்தம்.... இதுக்காகவே வலையுலக பயணம்னு போகும் வழியில் உங்களை போன்ற பெரியோர்களின் அங்கீகாரமும், பாராட்டும் இச்சிறியோனை நெகிழ வைக்கிறது.... நன்றிகளுடன அன்புத்தோழன்...

    ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...