Saturday, February 27, 2010

சிலிர்த்த சில பொழுதுகள்

தலைப்பை பார்த்து ரொம்ப சுவாரசியமா ஏதாவது ரொமேன்ஸு மேட்டரு கிடைக்குமோன்னு தேடி வந்த அன்பு உள்ளங்களுக்கு ரொம்ப சாரி... கிடைக்கும்ம்ம்ம்..... ஆனா கிடைக்காது....

என்னடா இது இப்டி குழப்புரானேனு ஒரு மார்க்கமா லுக்கு விடும் லேடிஸ் & ஜென்டில் மென்க்கு.... அதொண்ணும் இல்லீங்க வருங்காலத்துல போடும் பதிவுல வரும் ஆனா இப்போ இந்த பதிவுல வராதுங்குரத தான் அப்டி சிம்பாலிக்கா சொன்னேன்....

சரி!!!! ஒடனே கோவப்பட்டு இந்த சின்னவிஷயத்துக்குலாமா அரைகல்ல எடுக்கிறது.... எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாதான் இருக்கனும் ஆமா.....

ஒகே வள வளன்னு பேசாம விஷயத்துக்கு வரேன்.... சொந்தமா யோசுச்சு ஏதாவது போட சோம்பேறித்தனம்.... அதான் இம்புட்டு நாளா இந்த பக்கம் வரவே இல்ல.... அதுக்காக அப்டியே விட்டுப்புட்டா மறந்துடுவீங்கலோனு ஒரு சின்ன பயம்.... அதான் சோம்பேறித்தனத்த கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு.... வலைகுடும்பத்திற்குள் நுழையும்போது எடுத்துக்கொண்ட உறுதி மொழிய மீராம... (அதாங்க எதாதும் உருப்படியா சொல்லுவேன்னு சொன்னேனே) அந்த வேலைய பாக்க வந்துட்டேன்ன்ன்!!!!!!

என்னை சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைத்த சில விடியோக்கள் இதோ....

நான் இந்தியா



அருகில் இருப்பவைகளின் மதிப்பை என்றுமே அறியாதவர்கள் தானே நாம்... நம்மை விட வெளிநாட்டவர்கள் நம் நாட்டை அணு அணுவாக அனுபவிக்கிறார்கள் என்பதில் சற்று பொறமை தான் வந்தது இந்த வீடியோ பார்த்து



குறை கூறுவதை விட்டு விட்டு குறையை நிவர்த்தி செய்ய முயற்சி எடுப்போம்... இச்சிறுவனை போல்... நெகில்தேன் இதை கண்டு...



நம் தேசத்தை நாம் மதிக்க கற்று கொள்வோம்... கற்றும் கொடுப்போம்... சொல்ல வார்த்தை இல்லை ... இதை கண்டதும்....



நம் தேசத்தின் ஒருமைப்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்போம்... இச்சிறுவனின் வாக்குறுதி நம் அனைவருக்கும் தான்....




ஸ்டார்டிங் ஒரு மாத்ரி இருந்தாலும் மேட்டரு ரொம்ப சீரியஸா போச்சோ.... அதொண்ணும் இல்ல சொந்தங்களா நாட்டு நியாபகம் வந்துருச்சு அதான்.....


(எவனோ எடுத்த விடியோவ பதிவா போட என்னவோ சொந்த பதிவு போடுற மாதுரி பில்டப்பு குடுத்து, என்னாதிதுனு நீங்கல்லாம் என்ன பாத்து கேள்வி கேட்குற மாதுறியே ஒரு பீலிங்கு.... எதுவா இருந்தா என்ன பங்காளிங்களா சொல்ற மேட்டரு தானே முக்கியம்.... ஹி ஹி... வர்டா)



Sunday, February 14, 2010

பின்னூட்டத்திற்கான பதிலே பதிவாகியது




//இப்படித்தான் பெரியவங்களுக்கு ஏதாவது ஒண்ணோட ரொம்ப செண்டிமென்அல் அட்டாச்மெண்ட் இருக்கும். அதை நம் சௌகரியத்துக்காக துறக்கணுன்னா ரொம்ப வருத்தமாத்தான் இருக்கும்.//

ஹுஸைனம்மாவோட இந்த பின்னூட்டத்தை இப்போ தான் பார்த்தேன்... இதை அவர்கள் சொல்லும்போது சில நாட்களுக்கு முன் படித்த ஒரு விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது....

விஷயம் சற்று பெரியதாக இருப்பதால் பதிலாக போடுவதைவிட பதிவாக போடுவது தான் உகந்தது என்பதால் பதிகிறேன்...

நாட்கள் நொடிகளாய் மாறி நம்மை விட்டு கடந்து சென்று கொண்டிருப்பதற்கு நேற்று வந்த வார விடுமுறையே சாட்சி... இன்னும் மூன்றே நாளில் இந்த வாரம் முடிய போவதும், அட இப்போ தான் வந்துச்சு அதுக்குள்ள ஒருவாரம் ஓடிபோச்சா என்று நாம் நம் நட்பு வட்டத்தில் அடிக்கடி சொல்லிக்கொள்வதும், இரண்டாம் குழந்தை பருவத்தை நோக்கி காலம் நம்மை விரைவாக இழுத்துச்செல்வதை உணர்ந்த ஒவ்வொருவரும் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கின்றோமோ என்று ஒருமுறையாவது எண்ணி பார்த்திருப்பர்...


அப்படி இருக்க நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா.... அப்படியானால் இதை கடைப்புடியுங்கள் என்று சொல்ல பட்டிருந்தது அக்கட்டுரையில்...


அது என்னவென்றால் யார் தங்களுடைய முதுமை காலங்களில் (அதாவது ரிடைர்மன்ட்டிர்க்கு பிறகும்), ரிடைர் ஆகிவிட்டோம் எல்லாம் முடிந்தது என்று முடங்கி விடாமல் தங்களுக்கு விருப்பமான ஒன்றை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நீண்ட ஆயுள் வாழ்வதாக ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக்கிறார்களாம்....

அவை தங்களுக்கு விருப்பமான தொழிலாகவோ செயலாகவோ எதுவாகவும் இருக்கலாம்......

(ஒடனே வேலை வெட்டி இல்லாதவன் கூட தான் ரொம்ப நாள் வாழ்ரானு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க புடாது, படிச்சத சொல்றேன் அவ்ளோ தான்)

ஆக ரிடைர் ஆகிட்டோம்னு சும்மா இருக்காம எதையாது செஞ்சுட்டு இருக்க சொல்லி விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள்....


அது தங்கள் விருப்பமான மனதிற்கு உகந்த செயலாக இருக்கும் பட்ச்சத்தில் உடலையும் மனதையும் அது சோர்வடையாமல் வைத்துகொள்ள உதவுவதாகவும். இப்படி தொடர்பவர்கள் தங்களுக்கு வயதாவதையும் மறந்து புத்துணர்ச்சியுடன் வாழ்வதாகவும் சொல்கிறார்கள்......

இதோ இவரை போல


அதுவே retirementku பிறகு தங்களுக்கு தெரியாத விஷயங்களை செய்கிறவர்களுக்கு எதிர்மறை விழைவுகள் உண்டாகி சீக்கிரமே போயி சேர்ந்து விடுவதாகவும் சொல்கிறார்கள்....

கஷ்டப்பட்டு உழைத்த காசை ரிஸ்க் எடுத்துவிட்ட கட்டாயத்தினாலும், தொடங்கிய அந்த செயலோ தொழிலோ வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதால் அதிக உழைப்பும் கவனமும் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடுவதாலும்... மன அழுத்தம் உண்டாகி எதிர்மறை விழைவுகளையே உண்டாக்குவதால் அவை ஆயுளை குறைப்பதாகவும் சொல்கிறார்கள்...

ஆகவே சொந்தகார பங்களிங்களா..... நமக்கு பிடித்த பழக்கப்பட்ட விஷயங்களை இளமையிலும் சரி முதுமையிலும் சரி சந்தோசமாக முழு மனதுடன் தொடர்ந்து செய்வோம்.... நீடூழி வாழ்வோம்....


Happy Old Age

Thursday, February 11, 2010

ரயில் பயண பாடம்

இது மெயிலில் வந்தது தான் இருந்தும் என் மனசை தொட்டதால் நமக்கேற்ற சில மாசாக்களை தூவி பகிர்ந்துகொள்கிறேன்...


பச்சை விளக்கு வண்டிக்கு உத்தரவிட... குபுக் குபுக் என்ற அதற்கே உரிய பாஷையில் நன்றி சொல்லி புறப்பட்டது ரயில்... ஆடவரும் பெண்களும் அடங்கிய கலவையாக கிளம்பிய ரயிலில், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக கலை கட்ட தொடங்கியது.... அந்த compartmentil காலேஜ் கும்பலும் உண்டென்பதால் அவர்களுக்கே உரிய கருத்துமிக்க சில பாடல்களை பாடிக்கொண்டும், கோரஸ் போட்டுக்கொண்டும் ஆரவாரத்துடன் தொடங்கியது பயணம்....

அந்த compartmentil ஜன்னலோரத்தில் ஒரு முதியவரும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அமர்திருந்தனர்...

அது வரை அமைதியாக இருந்த அந்த ஆண் முகத்தில் ரயில் செல்ல செல்ல ஒரு இனம் புரியாத பரவசம்....



"அப்பா பாருப்பா.... மரம்லாம் பின்னாடி போது பாரு.... எவ்ளோ அழகா இருக்குல.... "



அப்பா அத பாரேன் அப்பா இத பாரேன் என்று அந்த ஆண் பரவசத்தோடு சொல்லி மகிழ்வதை பார்த்த அனைவருக்கும் முப்பது வயதை கடந்துவிட்ட ஒருவனின் செயலாக அது படவில்லை என்பதால் அனைவருமே சற்று முகம் சுழித்தனர்.... சிலர் அவர்களின் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் முனு முனுக்கவும் கூட செய்தனர்....



"சரியான லூசு போல அணு.... " புதிதாக திருமணமான சுரேஷ் தன் மனைவி அனுவிடம் சொன்னான்....





திடீரென வெளியில் மழை கொட்ட தொடங்கின.... மழைச்சாரல் திறந்து வைக்கப்பட்டிருக்கும் சன்னலின் வழியாக பட்டு தெறிக்க தொடங்கியது.... அனைவரும் அவசர அவசரமாக சன்னல்களை மூடிக்கொண்டிருந்தார்கள் அந்த compartmentil.... ஆனால்... அந்த இளைஞன் தற்போது மேலும் உற்சாகமடைந்தவனாய்.... சன்னலின் வெளியில் கையை நீட்டி மழை துளியின் மெல்லிய ஸ்பரிசத்தை தொட்டு ரசித்து கொண்டே..... கண்களில் பிரமிப்புடன்....



"அப்பா.... இது எவ்ளோ அழகா இருக்குல...." தன் மகிழ்ச்சியை தன் தந்தையிடம் சொல்லிப்பகிர்ந்து கொண்டான்.....



தொடர்ந்து வெளியில் கை நீட்டி மலையில் கையை ஆட்டி விளையாடிகொண்டிருந்தான் அவன், மழைச்சாரல் வண்டியின் உள்ளே அடித்துகொண்டிருக்க..... எதிரில் அமர்ந்திருந்த அணுவின் மேல் பட்டு அவளின் உடைகள் நனையவே சீற்றத்துடன் சுரேஷ் அந்த முதியவரை பார்த்து....




"யோ கெழவா, உன் பையனுக்கு தான் அறிவில்லனா உனக்குமா.. வெளில மழை பேயுறது உன் கண்ணனுக்கு தெரில...

உன் பையன் லூசுனா ஏதாது மெண்டல் ஆஸ்பத்திரில போய் சேத்துவிடு.... அத விட்டுட்டு இப்டி publicla கூட்டிட்டு வந்து எல்லார் உயிரையும் வாங்காத..."



கோவத்தை கொட்டி முடித்த சுரேஷிடம் தயங்கி மெல்லிய குரலில் முதியவர் பேசத்தொடங்கினார்...




"மன்னிச்சுடுங்க தம்பி..... ஆஸ்பத்திரிலேந்து தான் வந்துட்டு இருக்கோம்.... அவனுக்கு பிறவிலேந்தே பார்வை தெரியாதுப்பா... இப்போதான் அறுவை சிகிச்ச முடிஞ்சு பார்வை கெடச்சு ஊர் திரும்பிட்டு இருக்கோம்... இந்த இயற்கைலாம் இவனுக்கு புதுசு அதான் இப்டி நடந்துக்கறான் மன்னிச்சுடு..." என்றார்...


Matter:

The things we see may be right from our perspective until we know the truth. But when we know the truth our reaction to that will hurt even us. So try to understand the problem better before taking a harsh action.






Tuesday, February 9, 2010

மேட்டர் மாணிக்கம் (முதல் உதவி = First Help)

ஹ்ம்ம்.... வர வர ரொம்பத்தான் வெட்டிபேச்சு பேசுரோமோனு நேத்துலாம் ஒரே யோசனை..... பேசறதும் தான் பேசறோம் எதுக்கு STD (History) இசட் பத்தி பேசிக்கிட்டு.... எதுனா உருபடியா பேசுனா. மக்களோட டைம் கொஞ்சம் உபயோகமா இருக்குமேன்னு தான்.... உசுர காக்கும் முதலுதவி பத்தின மேட்டர் தான் இப்போ சொல்ல போறேன்.... இது என் முன்னால் கம்பெனில சொல்லிகுடுத்தது....

அதாவது....

If you have ever been faced with an injury, no matter how small, you will probably know the value of first aid. By fine tuning your first aid skills, you can react more calmly and confidently when assistance is needed.

முதல் பத்தில இன்னா சொல்லிக்ராங்கோனா..... காயம் பெர்சு சின்னதுன்றது முக்கியம் இல்ல.... எதுவா இருந்தா இன்னாபா காயம் காயம் தானே (எப்டி நம்ம தத்துவம்).... ok மேட்டருக்கு வருவோம், காயத்துக்கு தேவையான முதலுதவி மட்டும் தெரிஞ்சு வெச்சுக்நீங்கோனு வெச்சுகோங்க.... அப்பால ஒன்னியும் problem இல்ல.....

Applying first aid can range from cleaning a simple cut on a finger to performing CPR (Cardiopulmonary Resuscitation) for a heart attack victim. First aid is the initial assistance given to a person until medical help arrives.


முதலுதவின்றது தம்மாத்துண்டு வெட்டு காயத்துலேந்து ஆர்ட்டு அடைச்சுக்ற வரைக்கும் ஊட்டாண்டகீற டாக்டர் வர்ர வரைக்கும் உபயோகமா இருக்கும்ன்றாங்கோ....

First aid for burns: நெர்ப்புல சுட்டுகினா

Call for help. - கத்தி ஊர கூட்டு...

Take off any clothes or jewellery around the burned part of the body. - துணி கினி எதுனா இருந்தா கல்டிட்னும்ட்ராங்கோ (சில வில்லங்கமான ஆட்களுக்கு பி. கு : சுட்ட எடத்தாண்ட புண்ல பட்ரத மட்டும் தான்)....

Use cold running water to cool the burn for 20 minutes. - சில்லுனு ஓடினுக்குற தண்ணில 20 நிம்சம் கழுவுனும்....

Do not use ice. - சோக்காகீதுனு ஐஸ் ல கண்டி வெச்சேன்னு வெச்சுக்கோ அப்பால அவ்ளோ தான்

Do not break blisters. - பல்பு ஓடைகர மாத்ரி பல்ப ஓடைக்கப்டாது

Putting cool wet cloths on is okay - சில்லுனுக்கீர தண்ணில முக்கின துணில வேணா வெச்சுக்லாம்பா....


See a doctor or health professional of the burn is bigger than a large coin. - ஒர்ருபா காய்ன கண்டியும் காயம் பெர்சாந்துதுனு வை.... ஒட்னே ஒரு எட்டு ஊட்டாண்ட கீற டாக்டர பாத்துன்னு வந்துரு....

It is important to cool the burn for at least 20 minutes to stop damage to the tissue under the skin - ரொம்ப முக்கியம்.... சுட்ட எடத்துல தோளுக்கு உள்ளகீரதுக்கு ஒன்னியும் ஆகபுடாதுனா, அட்லீஸ்ட் இருவது நிம்ச்சமாது சில்லுனுகீர தண்ணில வெக்கணும்...


First aid for Cuts: வெட்டிகினா

Minor cuts and scrapes usually don't require a trip to the emergency room. Yet proper care is essential to avoid infection or other complications. These guidelines can help you care for simple wounds:

சின்ன வெட்டுகுத்துகுலாம் டாக்டராண்ட போவேனா.... இருந்தும் கொஞ்சம் கவனமாகீறது உசுருக்கு நல்லதுன்றாங்கோ.... கீழ சொல்லிகிற மேட்டரு சின்ன காயத்துக்கு use ஆவுமாம்.....


Stop the bleeding. Minor cuts and scrapes usually stop bleeding on their own. If they don't, apply gentle pressure with a clean cloth or bandage. Hold the pressure continuously for 20 to 30 minutes.

முதல்ல நிர்த்துனும்.... எல்லாத்தையும் நிர்த்துனும்.... சிகப்பா உள்ளேந்து வர்து பாரு ரத்தம் அத நிர்த்னும்... சிராய்ப்பு.... சின்ன வெட்டு.... இதலாம் அதுவா ரத்தம் நின்னுடும்.... நிக்லேனா இருபதுலேந்து முப்பது நிம்ச்சம் வர அமுக்கி புட்ச்சுனுக்னும்....


Clean the wound. Rinse out the wound with clear water. Soap can irritate the wound, so try to keep it out of the actual wound. If debris remains embedded in the wound after cleaning, see your doctor.


காயம் பட்ட எடத்த நல்லா சுத்தம் செய்னும்... சோப் போட்டேனா சுர்ருன்னு இர்க்கும் அதனால சோப் காயத்துலேந்து அப்பாலவே இருக்கட்டும்.... உள்ள எதுனா சிக்கினுக்குதுனா டாக்டர போய் பாத்துட்னும்.....

Thorough wound cleaning reduces the risk of infection.Apply an antibiotic. After you clean the wound, apply a thin layer of an antibiotic cream or ointment to keep the surface moist. The products don't make the wound heal faster, but they can discourage infection and allow your body's healing process to close the wound more efficiently. If a rash appears, stop using the ointment.

நல்லா சுத்தம் பண்றது, இன்பக்க்ஷன்லேந்து காக்க உதவும்... antibiotico இல்ல டாக்டர் குட்த்த கிரீமோ அவசியம் போட்டுக்கணும்.... இதனால காயம் ஒன்னியும் சீக்ரம் ஆரபோறதில்ல.... இர்ந்தும்.... காசுகுட்த்து வாங்கிட்டோம்ல.... அதுகாண்டி மட்டும் இல்ல இன்பக்க்ஷன் ஆகாதுருக்கும்ல.... அதுக்குதான்... கிரீமால அரிப்பு கிரிப்பு எட்த்தா ஒட்னே க்ரீம் use பண்றத நித்திட்னும்.....

Cover the wound. Bandages can help keep the wound clean and keep harmful bacteria out.
Change the dressing. Change the dressing at least daily or whenever it becomes wet or dirty.
Get stitches for deep wounds. A wound that is more than 1/4 inch (6 millimeters) deep usually requires stitches. Proper closure within a few hours reduces the risk of infection.


காய்த்த சுத்தமா வெச்சுக்க மூடிவெச்சுக்னும்... பிளாஸ்திரி அந்த வேலைய சோக்கா செய்யும்பா....

ஈரம் ஆயட்டாலோ, அல்க்கு புட்ச்சாலோ ஒரு நாளைக்கு ஒருதபாவதும் டிரஸ் மாத்தனும்.... (பி.கு காயத்துக்கு போட்டிகிற கட்ட சொல்லிக்ராங்கோ ).... கால் இன்ச், அதாவது... ஆறு மில்லி (குடிமகன்கள் தெளிவாக படிக்கவும்) மீட்டர் ஆழத்துக்கு வெட்டுக்காயம் இருந்தா டாக்டராண்ட போய் தச்சுகினு வந்துரணும்....

Watch for signs of infection. See your doctor if the wound isn't healing or you notice any redness, increasing pain, warmth or swelling.


மேல சொல்லிகிற எல்லாத்தையும் ஒழுங்கா கடபுட்ச்சும், வலியோ , வெதனமோ அல்லது வீக்கமோ இருந்துகினு காயம் ஆர்லேன்னு வெச்சுகோங்க.... மவனே ஒட்னே டாக்டர பாத்து, இன்னாயா மர்ந்து குத்தணு அவசியம் போய் பாத்து கேக்னும்....

If you learn first aid, you may have the opportunity to save a life one day - maybe even your own.

இதுபோல சில மேட்டர மண்டைல வெச்சுக்கினா.... நாலுபேருக்கு நல்லது பன்லாம்ல... ஏன் நமக்கே கூட பண்ணிகினு சீக்ரம் நல்லான நல்லது தானே..... இன்னா நான்ஜொர்றது.....


நான் கண்ட சில கோமெடிகள்



idhe smileoda irunga
next meet panren..... he he.....

Monday, February 8, 2010

நீங்களுமா?

பாசம் பொதுவானது, அது சில சமயம் நம்மள லூசா கூட காட்டும் மத்தவங்க கண்ணுக்கு ...
உயிரற்ற சிலதுக மேல உள்ள பாசத்த பத்தி தாங்க பேசுறேன்....


சின்ன வயசுல முதல் முதல்ல வாங்கின சைக்கிள், அது நம்மள சுமந்துட்டு ஊரு பூரா சுத்தினதும், அதுல உக்காந்து போறப்ப ஏதோ ரோல்ஸ் ராய்ஸ்ல போற மாத்ரி நடந்து போறவங்கள அப்டியே ஒரு ரேஞ்சா லுக் விட்டுட்டு... என்னவோ சைக்கிளுக்கு லைசென்ஸ் வாங்க போற மாத்ரி ரோட்ல S போட ட்ரை பண்ணி, விழுந்து சில்ற வார்னாலும் கூட அடங்காம வேற யாரும் பாக்ளயேனு சுத்தி முத்தி பாத்துட்டு ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சுட்டு மறுபடி அதே கெத்தோட ஏறி போறதும்.... என்ன பொறுத்த வர என்னோட சைக்கிள என்கூட சேந்து பல அடிவாங்கினதாலையோ என்னவோ அது ஒரு தோழனாக தெரிஞ்சுச்சு எனக்கு...



போதும்பா... வண்டி ரொம்ப பலசாகிடுச்சு.... இத வித்ரலாம்னு வீட்ல சொன்னா கூட... இல்ல வேணா இதுவே இருக்கட்டும்னு சொல்றதன் பின்னாடி ஏதோ ஒரு உணர்வு... அப்டியே மல்லுகட்டி அத வித்துட்டாலும் அதுக்கப்றம் அத எங்க பாத்தாலும் மனசுக்குள்ள ஒரு பத பதைப்பு நம்ம வண்டிய யாரோ சுட்டு ஓட்டிக்கிட்டு போற மாத்ரி இருக்கும் ...


ஏ!!! அங்க பாத்தியா, அது ஏன் வண்டி தெர்யுமானு வண்டி வாங்கினவனுக்கு வெளங்காத அளவுக்கு பக்கத்துல இருக்றவங்க்கிட்ட சொல்லிகாட்டுரதுண்டு...

இது சைக்கில் தாண்டி எல்லாத்துக்கும் பொருந்தும்...


காலேஜ் படிக்ரப்போலேந்து வெச்ருந்த மொபைல பல வருஷம் கழிச்சு விக்ரபோ கூட same feeling.... நாம தங்கிருந்த வீடு, ஊரு, தெரு, ஸ்கூல் , கிளாஸ், கிளாஸ் பெஞ்ச் இப்டி உயிரில்லாத எதுமேளையும் பாசம் வெக்ர லூசு நாமட்டும் இல்லேன்னு நெனக்றேன்...

ஒரு தடவ நா ஆச ஆசையா வளத்த செடிக்கு தண்ணி ஊத்தாம அதன் இளைலாம் காய தொடங்கிருப்பத பாத்துட்டு ஊருக்கு போய்ட்டு வந்த அதே வேகத்துல வீட்ல எல்லார்கிட்டயும் ஆய் ஊய்ன்னு குதிச்சது இன்னிக்கும் பசுமையான நினைவுகள் தான்...




ரோட்ல கெடந்த குட்டி பூனைய நாய் கடிச்ரும்னு எங்க வீட்டு கொள்ள புறத்துல வெச்சு, அட்டைல அதுக்கு வீடு கட்டிகொடுத்து... பால் ஊட்டி... அது போன உச்சாலாம் கிளீன் பண்ணி... பத்து நாள் கழிச்சு அதுவா செத்து போனதும்... ஏதோ பெரிய கொல பண்ணிட்ட மாத்ரி அதுக்காக அழாத கொறையா feel பன்னதுலாம் நாம என்ன அம்புட்டு வெள்ளந்தியாவா இருந்தோம்னு நெனச்சு பாக்ரதுண்டு

( அட நம்புங்கப்பா நா இப்பவும் அப்டி தான் ஹி ஹி)...


இந்த பொலம்பல்ஸ் of indiaku காரணம் வேற ஒன்னும் இல்ல பங்களிங்க்லா.... சமீபத்துல அடிச்சுட்டு வந்த ஒரு விசிட் தான்... பக்கத்து ஊராண்ட ஏன் வயசு கடைய ஒன்னு வெச்சுட்டு அமைதியா இருந்தாங்க ஏன் அப்பா... கடைக்கு ரெண்டு பக்கமும் கடைக்கு வாசல்ன்க்ராதாள, பாவிங்க ஏதோ சாமான் வாங்க போற மாதரியே வந்து டாட்டா காமிச்சுட்டு இந்த பக்கம் ஏறி அந்த பக்கம் போறானுங்கனு பாதி கடைய குடுத்துட சொல்லி நாங்கல்லாம் சேந்து வற்புறுத்தி குடுக்க வெச்சோம்....


நாலு பொண்ணுங்கள கட்டி குடுத்து கற சேத்தது, உங்கள இப்டி படிக்க வெச்சு ஒரு ஆளாக்கினது எல்லாமே அந்த ஒரு கடைய வெச்சு தான்.... அது எனக்கு மூத்த புள்ள மாத்ரின்னு அடிகடி சொல்வாரு... இப்போ பாதிய குடுத்தப்றம்... போன வாரம் நா போயிருந்தப்போ.... கட இப்டி ஆய்டுச்சுன்னு அவர் சொல்றபோ கண் கலங்கினத பாத்ததும்.... என்ன சொல்ல.... என் அப்பா மனசு எனக்கு தெரியாத என்ன...


"வயசாகிட்டே இருக்குல.... டெண்சன கொறைக்க வேணா... ரெஸ்ட் எடுங்க.... டைம் பாசுக்கு பிசினஸ் பாத்தா போதும்.... "அதான் குடுக்க சொன்னேன்னு சொல்லி ஒரு மாத்ரி ஆறுதல் சொல்லிட்டு வந்த்ருகேன்..... வந்ததுலேந்து அதே போல நா feel பண்ணின சில கனா கண்ட காலங்கள ரிவைண்ட் பண்ணி பாத்துட்டு.... ஹ்ம்ம்... எல்லாருமே அப்டிதானோன்னு யோசுசுட்டே இருந்தேனா.... சரி அதையே பதிவா போட்டு கேட்டு தான் பாத்ருவோமே காசா பணமானு தான் இந்த பதிவு... ஏங்க நீங்களும் அப்டியா.....?

(எனனவோ போங்க மக்கா வர வர ரொம்ப வெள்ளந்தியா ஆகிற்றுக்கேனோ....? அட என்னாதிது, அப்படியெல்லாம் பாக்கப்டாது ஹி ஹி...)





Friday, February 5, 2010

அன்றைய தினம்...

கற நல்லதுன்ற மாத்ரி சில நேரங்களில் இயற்கை சீற்றங்களும் சில நல்லதுகளை விட்டுவிட்டு தான் செல்கிறது. அவற்றுள் சில...
  • சகோதரத்துவம்
  • அனுபவம்
  • படிப்பினை

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... என்னோட முதல் பதிவின் தொடர்ச்சியாக இத எழுதுறேன்.

அன்று முழுவதும் வெட்டி தான். இதுக்கு வீட்லயே இருந்த்ருக்லாமோ... ஹ்ம்ம்... முடிஞ்சுது முடிஞ்சு போச்சு முடியாதது முக்கிட்டு போச்சுன்னு வழக்கமாய் என் நண்பர்கள் சொல்லும் ஆறுதலை எனக்கு நானே சொல்லி கொண்டு அவசரமாய் அலுவலகத்திலிருந்து கிளம்பினேன்.. சற்றுநேரம் மெயின் ரோடு வந்தடைந்தது, பேருந்தின் வருகைக்காய் வழிமேல் விழி வைத்து காத்துட்டு இருந்து அரை மணி நேரம் ஒரு மணி நேரம் இப்படி நேரம் கண்டந்துகொண்டே செல்ல..... பேருந்து வருவதற்கான அறிகுறி ஒன்றைமே கானுவதர்கில்லை..... சரி... டாக்ஸி பிடித்தாவது செல்லலாம் என்ற முயற்ச்சியில் அங்கு காத்துகிடந்த கும்பலுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

கை நீட்டி நிறுத்தப்பட்ட 16 வது டாக்ஸி காரனும் கை விரித்து சென்று விட்டான்... காரணம் புரியாமல் காசு கூடுதலாக தருவதாக பேசிய 20 வது டாக்ஸி காரனும் சென்றுவிட... கோவத்தில் அடுத்து வருபவனும் நிக்கவில்லை என்றால், அரை கல் எடுத்து அவன் மண்டையை உடைக்க வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு கபாலம் கப கப என்றாகி கொண்டிருந்தது... அவசரமாய் போன் எடுத்து " ஹலோ மச்சான்... என்னதான் பிரச்சன... ஒருத்தனும் வர மாட்டேன்க்ரானு " அவரிடம் புலம்ப.... நீ வீட்டுக்கு வரவேணா , அங்கயே ஏதாது friends ரூம் இருந்தா தங்கிட்டு காலையில் வா... நாங்க வந்த கார் தண்ணீர் புகுந்து நடுவழியில் காலை வாரிவிட்டதால் நடராஜா சர்வீஸ் கூட செய்ய முடியாமல் தவழ்ந்து செல்வதாக சொல்லி போன் வெச்சுட்டார்.

எரிச்சல் எகிறிக்கொண்டே போக... அடுத்து கை காண்பித்தும் நிறுத்தாமல் சென்ற சில டாக்ஸிகள் நடுவில் நிறுத்தினார் ஒரு முதியவர். எப்படியும் இவரை விட்டால் இன்று வீடு போய் சேருவது இயலாத காரியம் என்பதால் அவரை அமுக்குவதாகவே இருந்தது என் பேச்சு... ஒரு வழியாய் 40 ரியாலுக்கு ஒத்துகொண்டார் அவர், கிளம்ப எத்தனித்த பொழுது, சற்று தொலைவில் ஒரு குடும்பம் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் என நால்வரும் டாக்ஸிக்காக தவிப்பது தெரிந்தது... கொஞ்சம் அப்டி நிருந்த்துங்க என்று சொல்லி கண்ணாடியை இறக்கி எவ்வடே போனும்னு (தம்மலையாலதுல) கேக்க நினைச்ச மாத்திரத்தில், 4 வயது நிரம்பிய குட்டி பொண்ணு வாய் திறந்து நம் தாய் தமிழில் பேசிகொண்டிருப்பதை பாத்து " அட தமிழா? எங்க போனும்னு கேட்க, நான் போகும் வழிதான் என்று தெரிந்ததும் ஏறுங்க நானும் அந்த வழியாதான் போறேன்னு சொல்ல உயிர் வந்தவர்களாய் ஏறி கொண்டார்கள்...

கிழவனுக்கு இதுதான் சந்தர்பம் என்று மண்டைக்கு மேல் மணி அடித்திருக்க வேண்டும்... மொத்தம் 80 ரியால் தரவேண்டும்னு ஒரே புடியாக புடித்து கொண்டவரிடம் ... (குல்லு சவ சவ) "நாங்கள் அனைவரும் ஒருகுடும்பம் தான்" என்று எனக்கு தெரிந்த அரைகுறை அரபியில் அடித்துவிட்டேன்... முடியாதுனு முரண்டு புடித்த கிழவனிடம்... பர்வாலங்க நான் 40 தருகிறேன் என்றார் அந்த குடும்பஸ்தன்... ஹ்ம்ம்... கெழவா உனக்கு வந்த வாழ்வா என்று முதியவரை ஒரு முறை முறைத்துக்கொண்டு தொடங்கியது எங்கள் பயணம்.... வடிவேல் தொனியில் சொல்லவேண்டும் என்றால் நல்லாதானே போய்க்ருந்துச்சுன்னு சொல்வது போல... பொசுக்குனு ஊர்ந்து செல்ல தொடங்கியது கார்...

வெல்லத்தின் சுவடு தெரியாமல் அரை தூரம் கடந்து விட்ட திருப்த்தியில்... பின்னால் இருந்தா குட்டி தேவதையிடம் விளையாட்டாய் சிரித்து பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் வந்தோம்... தனக்கு தன் தாய் தந்த வேபர் பிஸ்கட்டை எடுத்து நீட்டினாள் அவள்... வேணாமா நீ சாப்டுனு பசியை மறைத்து அவளிடம் சொல்ல... இல்ல நீங்க சாப்டுங்கனு அடம் புடித்தாள்... மாமா சின்ன வயசுல இது நெறைய சாப்டேன் அதான் இப்டி வளந்துட்டேன்... நீயும் சாப்டேனா என்ன மாத்ரி பெருசா ஆயடுவேணு அவளுக்கு அறிவுரை சொல்லி கொண்டிருக்க.... பரவால வாங்கிகொங்கனு அவளின் தாய் தந்தையர் வற்புறுத்த... நன்றி சொல்லி கடித்துக்கொண்டு விளையாட தொடங்கினோம்...

பாலஸ்தீன் பாலத்தின் மேல் ஊர்திகலனைதும் ஊர்ந்துகொண்டிருக்க... டமார்... நான் அமர்ந்திருந்த பக்கத்தில் அவசரத்துக்கு பிறந்த ஒருவன் வந்து இடிக்க நசுங்கியது டோர்... ஹார்ன் சத்தங்கள் காதை கிழிக்க.. கிழவர் அடி பலமா என்று கேட்டார் எனகில்ல டோருக்கு... ஹ்ம்ம்...... இருந்தும் கெழவனுக்கு குசும்பு தான்... ஆமாம் என்று பதில் அளித்தேன்... இறைவன் பார்த்து கொள்வான் என்று கூறி தொடர்ந்து செழுத்தி கொண்டிருந்தார் வண்டியை... இறை நம்பிக்கையின் உண்மையான பிரதிபலிப்பாக இருந்தது கிழவனின் சொல்லும் செயலும்... வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்டுகொண்டிருந்த நேரம்.... சில வாகனங்கள் டிவைடர் மேல் ஒய்யாரமாய் உக்கார்ந்து கொண்டிருந்தது பார்த்து அதிர்தேன்... அடுத்து வரப்போகும் ஆபத்தை எதிர்கொள்ள தைரியம் இல்லாத சிலர் வந்த வழியே சென்று விட டிவைடர் தாண்ட முற்பட்ட பொது சிக்கிகொண்ட வாகனங்கள் தான் அவை....

நத்தை போன்று ஊர்ந்து கொண்டிருந்தோம் நாங்கள்... சில வண்டிகள் ஆகாங்கே நிற்க அதன் உரிமையாளர்கள் பதற்றத்துடன் அவற்றுக்கு முதலுதவி செய்துகொண்டிருந்தனர்... பாலத்திலிருந்து இறங்க தொடங்கிய நாங்கள் கீழ் நோக்கி வந்தோம்.... வாகனங்கள் அனைத்தும் நீச்சல் பழகிகொண்டிருப்பதாகவே தோன்றியது... எண்களின் காரும் களத்தில் குதிக்க... டைடானிக் படத்தை நியாபக படுத்தி கொண்டிருந்தது.... சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டு ஊர்ந்துகொண்டிருந்தோம் நாங்கள் அனைவரும்... கிழவரின் வாய் இறைவனை பிரார்த்தித்து கொண்டே தொடர்ந்தது எங்கள் பயணம்.... அணைக்கப்பட்ட தெருவிழக்குகள், ஆங்காங்கே நின்றிருந்த வாகனங்கள் அதனுள் குழந்தைகளின் அலறல்கள் இவை அனைத்தும் வீடு போய் சேருவோம் என்ற நம்பிக்கையை உலுக்கி பார்பதாகவே இருந்தது....

அம்மா தண்ணி... அம்மா... அம்மா... அலறினாள் அந்த குட்டி தேவதை.... திரும்பி பார்த்த பொழுது அவள் காரின் பின் கண்ணாடியின் இடைவெளியில் புகுந்து விட முயற்சி செய்துகொண்டிருந்தால்... ஈரம் எனது கால்களை பட்டு நெனைக்க... அப்போது தான் புரிந்தது எனக்கு தண்ணீர் உட்புகுந்து விட்டிருந்தது.... கிழவனின் முகம் பயத்தினால் தொடர்ந்து இறைவனின் நாமத்தை உச்சரித்து கொண்டிருந்தது...

க்ரர்ர்ர்ர்..... வண்டி சற்று ஓய்வு எடுப்பதாய் நின்று கொண்டது... கிழவனின் கண்களில் தண்ணீர் சுரக்க தன்னை தானே ஏசிக்கொண்டு.... தட்டி எழுப்பினார் வண்டியை... சற்று தூரம் சென்று மறுபடி படுத்து கொள்ள அழத்தொடங்கி விட்டார் கிழவன்....

"குல்லு செய்யார கற்பான்..." "ஏன் வண்டி போச்சு... ஏன் வண்டி போச்சு" என்று கூறி கொண்டு அவர் அழ.... அதுவரை இல்லாத இறக்கம் கெழவனை பார்த்ததும் வந்தது.... ஆறுதல் சொல்ல கூட வார்த்தை இல்லாமல்... அவரையே வெறிச்சு பாத்துட்டு இருந்தேன்... "இப்போ என்ன செய்றதுன்னு பின்னிருந்த அவர்கள் கேட்க.... வேறென்ன செய்ய முடியும்... இதுக்கு மேல் போக முடியாது... நீங்கள் இறங்கி கொள்ளலாம் என்றார் அவர்...

கையிலிருந்த காசை கொடுத்துவிட்டு... நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லாமல்... எங்களை சுமந்து வந்த காரையும் கிழவனையும் ஒரு எட்டு திரும்பி பார்த்தவனாய்.... சில்லுனு இருந்த தண்ணீரில் கால் நெனைக்க..... குட்டி தேவதை தந்தையை கவ்வி கொண்டு தோள்மேல் அமர... நடை பயணம் தொடர்ந்தது..... எங்கு பார்த்தாலும் பழுதாகி போன வண்டிகளும்....

குழந்தைய வேணா குடுங்க நா தூக்கிட்டு வரேன்னு கேட்க, பர்வாளிங்கனு சொன்னார் அந்த குடும்பஸ்தர்... இடுப்பு வரை வந்து விட்ட தண்ணீரால் பர்ஸ் நனைந்துவிடுமோ என்று அதை எடுத்து சட்டை பையில் வைத்து தொடர்ந்து நடந்தேன்.... அவர் தனது மனைவி குழந்தைகளை வழி நடத்தி மெதுவாக அழைத்து கொண்டு வந்தார்... நீங்க வேணுனா கெளம்புங்க தம்பி நா பாதுக்றேனு சொன்ன அவர் வார்த்தையை ஏற்று நடையை கட்டினேன்.... ஆங்காங்கே ட்சுனாமி நினைவு படுத்தும் வகையில் காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டு ஓடிகொண்டிருந்தது தண்ணீர்ர்.... வீடு போய் சேரும் என்னத்தை விடாமல் செயல் படுத்தி கொண்டிருந்தேன்... டிவைடர் மேல் ஏறி நடந்து கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து கொள்ள..... ஒருகணம் எதிர்பாரதவனாய் கரன்ட் கம்பத்தின் இடுக்கில் கால் நுழைந்து கொள்ள தடுமாறி விழப்போன என்னை தாங்கி பிடித்த கரங்கள் சில பாகிஸ்தானி... சவுதி... யமனி... பங்காலி என சகோதரத்துவத்தின் அடையாளம் அன்று தான் புரிந்தது எனக்கு....

வரும் வழியில் நான் கடந்து வந்த பாதை நோக்கி செல்ல முற்பட்டு கொண்டிரந்த வாகன ஓட்டிகளிடம்.... செல்ல வேண்டாம் அந்த பக்கம் செல்ல வேண்டாம் என்று சொல்லி கொண்டே சென்றேன்.... எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்திருக்க சராசரியாக ஒரு மணி நேரத்தில் அடைய வேண்டிய என் வீட்டை ஒரு வழியாய் வந்தடைந்தேன்.... ஆறு மணிக்கு கிளம்பிய நான் பனிரெண்டு மணியளவில்...