நானும் கைய கட்டிட்டு அப்டியே வேடிக்க பாத்துட்டு காலத்த ஓட்டலாம்னு பாத்தா ஜலீலா அக்கா அவர்கள் உடமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு விருத ஒன்னு குடுத்து உசுப்பேத்தி விட்டாங்க.... இது வர போட்ட பதிவுகள் எப்படி இருந்துச்சோ தெரில... ஆனா இனிமே வரும் பதிவுகள் சுவாரசியமா எதாச்சும் உருப்படியா சொல்லணும்னு சொல்லியே அந்த விருத குடுத்தாங்க.... அதான் ஒரு சில நல்ல மேட்டரோட இதோ வந்துட்டோம்ல.....
சரி விஷயத்துக்கு வருவோமா...
சில பேருக்கு சில விஷயம் புடிக்காது... அதுபோன்றவர்கள் கிட்ட டீல் பண்றபோ அவங்களுக்கு ஏத்த மாதுரி அவங்க பேச்சில் தெரியும் விருப்பு வெறுப்புகளை வைத்து manage பண்ணிருவோம்... ஆனா இந்த கான்சப்ட எப்புடி எறும்புக்கு அப்ளை பண்றதுன்னு ரூம் pottu யோசிச்ச பிறகு... என்னங்க அப்புடி ஒரு லுக்கு... சரி சரி விஷயத்துக்கு வரேன்.... அதாவதுங்க எந்த பயபுள்ள ஏறும்புகிட்ட போயி பேச்சுவார்த்த நடத்துச்சோ தெரில..... எறும்புக்கு வெள்ளரிக்காய் விதைனா ஆகாதாம்... ஆகவே.. எறும்பு தொல்லையினால் அவதிப்படும் மக்களே.... எங்க எறும்பு இருக்கோ அங்க வெள்ளரி விதைகள போட்டு வெச்சா... எறும்பு குடும்பத்தோட எஸ்கேப் ஆய்டுமாம்... கெமிகல் உள்ள எறும்பு பொடிக்கு இது ஆரோக்கியமான ஒன்னு தானே... உபயோகிச்சப்புரம் காசு குடுத்தா போதும்.... ஹி ஹி....
கோடைகாலம் தொடங்கிடுச்சு.... பெரும்பாலான வீடுகளில் அதுவர பயன் படுத்தாத ஐஸ் ட்ரேய உபயோக படுத்த தொடங்கிருப்பீங்க.... பொதுவா நம்ம வீட்டுக்கு வருபவர்களுக்கு ஐஸ் வாட்டர் குடுக்க ஐஸ் கியூப்ஸ் எடுத்து க்ளாஸ்ல உள்ள தண்ணீர்ல போட்டு குடுத்தா வெள்ளையா ஏதோ மிதக்கும்... குடிக்கபோரவங்க கைல வாங்கிட்டு ஏதோ நாம ஒழுங்கா கிலாச கழுவாம ஊத்தி குடுத்த மாதுரி ஒரு லுக் விடுவாங்க... உங்களுக்கு சுத்தமான ஐஸ் வேணும்னா ஐஸ் வைப்பதற்கு முன்னாடி தண்ணிய கொதிக்க வெச்சுட்டு... கொதிக்கவச்ச தண்ணீர்ல ஐஸ் போட்டா இந்த பிரச்சனை வராதாம்...
அடுத்து வாஷ் பேசினுக்கு மேல இருக்குற கண்ணாடி இருக்கு பாருங்க..... அது ஒரு பெரிய கவுருவ பிரச்சன எல்லார் வீட்லயும்... சில வீடுகளில் அங்க நின்னு பிரஷ் பண்ணும்போது தெறிச்ச நுரை அப்டியே புள்ளி புள்ளியா போயி பாக்கவே ஒரு மாதுரி இருக்கும்.... திடீர் விருந்தாளிங்க யாராவதும் கை கழுவ போனா நமக்கே சங்கட்டமா இருக்கும்... இதுக்கு ஒரே தீர்வு.... ஸ்பிரிட்... ஸ்பிரிட்... ஸ்பிரிட்.... ஆமா இத போட்டு சுத்தம் செய்யணுமாம்... அதுக்கப்பறம் பாருங்க அப்டியே கண்ணாடி சும்மா டால் அடிக்குமாம்... அப்பறம் என்ன வீட்ட கண்ணாடி மாதுரி வெச்சுருக்கீங்கனு எல்லாரும் அவார்ட் குடுத்துட்டு போவாங்க...(குடுக்கலேனா என்ன கேக்கப்புடாது ஹ ஹ )
இன்னொரு முக்கியமான பிரச்சன ச்சிவிங்கம்... பயபுள்ளைங்களுக்கு போனா போதேனு அத வாங்கி குடுத்தா... மென்னுட்டு சில நேரம் உக்கார எடமா பாத்து கரெக்டா துப்பி வெச்சு... அதுல நாம உக்காந்து... நாம ஆச ஆசையா வெச்சுருந்த துணில அது ஒட்டி... இப்டி ஆய்டுச்சேன்னு அப்புடியே சும்மா உச்சில சுர்ருங்கும்... இனிமே நோ டென்சன்... ச்சிவிங்கம் பட்ட துணிய freezerla ஒரு ஒன் hour வெக்கணுமாம்... அப்பறம் பாருங்க....
அப்பறம் வெள்ளை துணி சும்மா வெள்ள வெளேர்னு இருக்க துணி ஊற வைக்கும்போது ஒரு துண்டு எழுமிச்சையை வெட்டி போட்டு வைக்கணுமாம்... அப்பறம் பாருங்க... விளம்பர பட டையலாக்க எழுதி குடுக்காமலே பேசுவாங்க எல்லாரும் உங்கள பாத்து....
முடி பள பளன்னு இருக்கணும்னா ஒரு ஸ்பூன் வினிகர் முடில தேச்சு அப்பறம் வாஷ் பண்ணனுமாம்.....
இந்த கோடை காலத்துக்கு ஜூஸ் அதிகமா தேவைப்படும்.... இதுவர நீங்க வாங்கின அதே அளவு எழுமிச்சைல அதிக ஜூஸ் கிடைச்சா வேணான்னு சொல்லுவீங்க... ஜூஸ் புளிவதர்க்கு ஒரு மணி நேரம் முன்னாடி சுடு தண்ணீர்ல எலுமிச்சைய ஊற போட்டு அப்பறம் புளிஞ்சா.... அதிக ஜூஸ் கிடைக்குமாம்... எப்பூடி....?????
மீன் சாப்பாடு சாப்புடறவங்க என்ன தான் மாங்கு மாங்குன்னு எத போட்டு கழுவினாலும் மீன் வாசன கையை விட்டு அவ்வளவு சீக்கிரம் போகாது... அதுக்கு ஒரே சிறந்த தீர்வு.. ஆப்பிள் விநிகராம்... கொஞ்சூண்டு போட்டு கழுவினாலே போதுமாம்.... ட்ரை பண்ணி தான் பாப்போமே....
நம் இல்லத்தரசிகள் எல்லாருக்கும் தினம் தினம் ஒரே கண்ணீர் தான்... அட சமைக்கும்போதுதாங்க சொல்றேன்... காரணம் வெங்காயம்.... சோ.. இனிமே உங்க கண்ணுலேந்து ஒரு சொட்டு கண்ணீர் வருவதை இந்த அன்புத்தோழன் அனுமதிக்க மாட்டான் ஹி ஹி... ஆகவே எப்போலாம் வெங்காயம் வெட்டுகிறீர்களோ அப்போலாம் சிவிங்கம் மென்னுகிட்டே வெட்டி தள்ளலாம்... நோ கண்ணீர்.....
அவசரத்துக்கு முட்டை அவிக்க நினைக்கிறவங்க நீங்க வேக வைக்க போற தண்ணீர்ல கொஞ்சம் உப்பு சேத்துக்கிட்டா போதுமாம்.... இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதுரி..... இன்ஸ்டன்ட் முட்டை ரெடி... இதெப்புடி இருக்கு... :-)
சட்டைல இன்க் பட்டுருச்சுனு வருத்தப்படும் வாலிபர் சங்கத்துக்கு... இனிமே கவலைய விடுங்க... இருக்கவே இருக்கு பல் துளக்குற பேஸ்டு... இன்க் பட்ட எடத்துல பேஸ்ட் போட்டு அத காய விட்டு பிறகு துவைச்சா சரி ஆய்டுமாம்..... ஆனா பயபுள்ள பேஸ்டு ப்ராண்ட சொல்லாம விட்டானுங்க பங்காளிங்களா... எதுக்கும் கொஞ்சம் உஷாராவே ட்ரை பண்ணுங்க ...
அடுத்து நம்ம இல்லத்தரசிங்களுக்கு.... சக்கரவள்ளி கிழங்கு தோல் எளிதா உரிக்க... அவிச்ச பிறகு ஒடனே சில்லுனு இருக்கும் சாதா தண்ணீர்ல போட்டா சுலபமா உரிக்கலாமாம்.... எல்லாம் கேள்வி ஞானம் தான்... ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.... ஏதாது ஏடா கூடமாய்ட்டா ரொட்டி கட்ட எடுத்துட்டு வராம இருந்தா சரி...
கடைசியா ஒன்னு சொல்லி முடிச்சுக்குறேன்.... போன பதிவுல நம்ம ஹுஸைனம்மா சொன்னாங்க பூச்சிக்காக அடிக்கப்பட்ட மருந்துல சில பிஞ்சு உயிர்கள் அநியாயமா இறந்து போச்சுன்னு... நெஞ்சை உருக்கிய அந்த துயர சம்பவத்தை மறக்க முற்படும்போது தான்... இதை கண்டேன்... பெரும்பாலான வீடுகளில் எலித்தொல்ல சகஜமான ஒண்ணா ஆய்டுச்சு.... அத ஒழிக்க கண்ட கெமிகல் போட்ட எலி மருந்து வாங்கி வைக்கிறாங்க... சும்மா வீணா வம்ப விலை குடுத்து வாங்குற மாதுரி தாங்க இது... அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு சொல்லவே வேணா... இதுக்கு இயற்கை தந்திருக்கும் அருமையான ஒரு விஷயம் தான்... மிளகு... கருப்பு மிளகை எங்க எல்லாம் எலி புலங்குதோ அங்கெல்லாம் போட்டு வெச்சுட்டா போதும்...... எலியின் தொல்லை இனிமே பக்கத்து வீட்டுக்காரர் பாத்துப்பார்... ஹி ஹி... முடிஞ்சா அவங்க கிட்டயும் இதை சொல்லி கெமிகல் கலந்த கண்ட எலி மருந்தின் உபயோகத்தை தவிர்க்கலாம்...
இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனிதன் ஒதுக்கும்போது தான் விபரீதங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன நம்மையும் அறியாமல்.... இயற்கை தந்த பற்பல அருட்கொடைகளே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு விடையளிக்கும்போது..... செயற்கையின் மீது நாட்டம் எதற்கு... செயற்கையான பலவற்றின் மீதுள்ள நமது நாட்டத்தை குறைத்து..... இயற்கை வளங்களை பேணி பாதுகாத்து, அவற்றை பெருக்கி வளமான வாழ்வு வாழ முற்படுவோமே....







