Showing posts with label கவுஜ = கவிதை. Show all posts
Showing posts with label கவுஜ = கவிதை. Show all posts

Sunday, March 7, 2010

படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!

அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!

எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!

பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட

ஐந்து விரல்களுக்கு நடுவே!

வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!

கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!

துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

நன்றி சகோதரர் Mohamed Riyaz:facebook

courtesy: http://nagoreflash.blogspot.com/2010/02/blog-post_26.html#comment-form

Monday, January 25, 2010

கவிதை கொத்து

கீழே கொடுகபட்டுள்ள கவிதைகள் அனைத்தும் நாந்தான் எழுதினதுன்னு சொன்னா உதைக்க பல பேரு உருட்டு கட்டையோட ரெடியா நிப்பீங்கன்னு தெர்யும்.....


அதனால உண்மைய சொல்லிடறேன் சொந்த கார பங்காளிங்க்லா... இங்க கொடுகபட்டுள்ள கவிதைகளுக்கு சொந்தகாரனோ / காரியோ யார்னு தெரில...


இருந்தும் நான் ரசித்த சில வரிகள் சொந்தங்களின் ரசனைக்கும்......


இதோ...


(இந்த பையன பாக்க என்ன மாதரியே இல்ல, இல்லேம்பீங்க்லே... பொறாம பொறாம)

(உண்மையிலும் உண்மை..... )



(ஒத்த வரில சேரன் படம் பாத்தாப்ல ஆகிடுச்சுப்பா, என்ன கொடும சார் இது )





(இப்டி நான் எழுதனும்னு நெனக்ரதலாம் எழுதிட்டா, அப்றம் நா என்ன தான்யா எழுதறது)



கடைசி இந்த வரிகள் என்னால மறக்கவே முடியாது....

அந்த கதைகளை dairyin பக்கங்களாக விரைவில்..
எழுதுலானு இருக்கேன்.....
நோ நோ அளப்டாது....