Showing posts with label மெசேஜ். Show all posts
Showing posts with label மெசேஜ். Show all posts

Wednesday, March 31, 2010

ORIGINAL தூக்க மாத்திரை PLS?????

எனக்கு இப்போ வரும் கோவத்துக்கு தூக்க மாத்திரைய சாப்புட்டு கொஞ்ச நேரமாவது நிம்மதியா எல்லா எழவையும் மறந்துட்டு தூங்கனும் போல இருக்குங்க.... அது கூட எந்த கடைல வாங்கினா ஒரிஜினலா மாத்திரை கிடைக்கும்னு தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா..... :-(((

ஏன் இந்த கொல வெறின்னு புருவத்த தூக்கிட்டு கேட்குற எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்குறேன்... உங்களுக்கும் இந்த உண்மைகளெல்லாம் தெரிஞ்சப்புரம்... எட்றா அருவாள... கட்டுறா வண்டியனு சொல்வீங்க... இல்ல என்ன மாதுரி புலம்புவீங்க...ஏனா நாம எல்லாம் அநியாயத்தை பாத்து பொங்கி எழும் சூடான சேம் ப்ளட்டு...

போன பதிவுல இயற்கையின் அருட்கொடைகள் பல பிரச்சனைக்கு தீர்வா இருக்குனு முடிவுரை சொல்லி என்னோட பதிவ முடிச்சேன்... அதுக்கப்புறம் இப்போ நான் கண்ட காட்சிகள் அதிர்ச்சி தரும் பல தகல்வல்கள பாத்து மனசு பத பதைக்க உங்க கிட்ட மறுபடி ஓடோடி வந்துருக்கேன் காரணம் பாலு விஷமாகுதாம், பயிறு விஷமாகுதாம், விளைச்சல் நிலம் மலடாகுதாம்,அப்புடியே விளைவிச்சாலும் அத சாப்பிடும் மனித இனம் மலடாகுதாம் இப்புடி எதை எடுத்தாலும் விஷம்னா என்னத்த தான் துன்னுறது....

இந்த பதிவும் வழக்கம் போல நம்ம இயற்கைய பத்தி அமைந்தது எதேச்சையாக தான்.... இப்புடியே போய்ட்டு இருந்தா நானும் இயற்கை ஆர்வலராகி அப்புறம் தீவிரவாதியா ஆய்டுவேணு நினைக்கிறேன்.... தீவிரவாதினா இயற்கைய வளங்களை காக்கும் பணியில் தீவிர வாதிப்பா எக்குத்தப்பா புரிஞ்சுகிட்டு என்கவுண்டர் வர இழுத்து விட்டுறாதீங்க பங்காளிங்களா.... எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...

நம் முன்னோர்கள் இயற்கையோட ஒன்றிய வாழ்கை நெறியை கடைபுடிச்சதாலும்... இயற்கை வளங்களுக்கு பாதிப்பில்லாத அழகான வாழ்கை முறையை அமைத்து கொண்டதாலும் ரொம்ப காலம் ஆரோகியமா வாழ்ந்தாங்க.... ஆனா அதுலாம் இப்போ STD(history) ஆகிபோச்சு.... வளரும் நம் குழந்தைங்க கிட்ட உங்க பாட்டி 100 வருஷம் வாழ்ந்தாங்கனு சொன்னா இதென்ன சக்திமான் பார்ட் 10 னு கேப்பாங்க போல...


அப்போ
இருந்த விளை நிலங்கள் இப்போ நாம வசிக்கும் அடுக்கு மாடிகுடியிருப்புகளாகி... அப்போ இருந்த நிதான உலகம் இப்போ அவசர உலகமாக மாறிப்போய்.... instant நூடுல்ஸ் மாதுரி இப்போ instant அரிசி கண்டு புடிக்கும் அளவுக்கு இழுத்துகிட்டு வந்துருக்கு.... அட ஆமாங்க இனிமே சோறு உன்ன அடுப்பே தேவை இல்லையாம்.... தண்ணில அரிசிய போட்டா சோறு ரெடி... (அப்போ ஆனம்னு (குழம்புன்னு) ஆர்வமா கேக்கும் மக்களுக்கு... கடைல வாங்கிக்கொள்ளவாம்... எப்புடி எல்லாம் சோம்பேரியாக்குரானுகப்பா ....)



போற போக்க பாத்தா பத்து மாசம் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தை செல்வங்களை கூட instantaa பெத்துபாங்க போல... இப்போவும் instant குழந்தைங்க பொறக்குது அது instant messengerla.... நிஜத்தில் பெற்றடுக்கும் காலம் ரொம்ப தொலைவில்இல்லைங்குறது வேதனையான விபரீதம்... இப்புடி வேகம் வேகம்னு எல்லாத்துலையும் வேகத்த கூட்டி கடைசில என்னாச்சு தெரியுமா.... இதுக்கு மேலநான் பேசினா சரியா வராது.... நீங்களே பாத்து நொந்துக்கோங்க....













நிலைமை இப்புடி இருந்தா வருங்காலத்துல formality க்கு கூட first night பால் வைக்க மாட்டாங்க போல.... ஹ்ம்ம்... ஏன் கவலை எனக்கு :-(((.... என்னத்தசொல்ல...

Videos Courtesy: Techsatish.net

Sunday, March 7, 2010

படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!

அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!

எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!

பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட

ஐந்து விரல்களுக்கு நடுவே!

வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!

கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!

துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

நன்றி சகோதரர் Mohamed Riyaz:facebook

courtesy: http://nagoreflash.blogspot.com/2010/02/blog-post_26.html#comment-form

Tuesday, January 19, 2010

தன்னம்பிக்கை


முதல் படத்தை பார்த்த மாத்திரத்தில் மனிதனை பழித்து காட்டுவது போன்று அவன் செய்யும் வேலையை பார்த்து எவரும் புன்னகைதிருப்பர்
ஆனால் அதை தொடர்ந்து வந்த படங்களை பார்த்து நான் ஒரு பாடம் கற்றேன்

இது குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட செய்யும் சேட்டை இல்லை

வருங்கால சந்ததியினருக்கு பாடம் எடுக்கிறது
சற்று படத்தை உற்று நோக்குங்கள்


ஆம்..

இப்பொழுது புரிகிறதா இதன் பாடம்








அனைவரையும் ஆச்சரிய படவைத்து மனிதனை போல நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாக நடக்கும் இவனுக்கு மரியாதை தராமல் இருக்க முடியுமா என்ன

அவன் எங்கு சென்றாலும் வரவேற்பு தான்

அவன் தோல்தட்டி கொடுக்க எத்துனை பேருக்கு தான் ஆசை

தன சொந்த காலில் தனித்து நிற்க கற்று கொண்டான் இவன்

தன்னம்பிக்கை ஐந்து அறிவு படைத்த ஜீவிக்கும் கூட சுய மரியாதையை பெற்று தரும் என்பதற்கான வாழும் உதாரணம்
கால்கள் இழந்தும் கம்பீரமாய் நடக்கும் இவன்
நாம் கற்க வேண்டிய பாடங்களில் ஒருவன் இல்லையா


அன்புடன் உங்கள் தோழன்