Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Wednesday, March 24, 2010

மனைவியின் நேர்மை

தலைப்பை பார்த்து இப்படி ஒரு அற்புத நிகழ்வா...... உலகில் எங்கு நடந்திருக்கும் இந்த அதிசயம் என்று பார்க்க ஓடோடி வந்த மனைவிபோபியாவால் பாதிக்கப்பட்டு (ஒருசிலர் மட்டும்) தினமும் வருத்தெடுக்கப்படும் கணவன்மார்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.... ;-) ஹி ஹி....

இது உங்களுக்கான நற்ச்செய்தி ஒன்றும் இல்லை.... மாறாக உங்களை போன்று பாதிக்கப்பட்ட ஒருவனின் சோகக்கதை.... ;-))) உங்களின் மன ஆறுதலுக்காக.... (you are not the only one)...


(அய்யா
இன்னும் பேச்சளருனு இப்படி கலாய்க்றீங்களா, இருக்கட்டும் இருக்கட்டும்.... அம்மிணி வந்தப்பறம் தெர்யும்னு மனதுக்குள் சாபம் எதுவும் குடுத்து விட வேண்டாமென்று இல்லத்தரசிகளின் சங்கத்திற்கு இதன் மூலம் தாழ்மையான வேண்டுகோளை வைத்து..... ஆரம்பிக்குறேன்....)


come on start music...... :-)

A man who was driving a car with his wife was stopped by a police officer.
The following exchange took place.

The man says, "What's the problem, officer?"

Officer: "You were going at least 75km speed in a 55km zone."

Man: "No sir, I was going 65km."

Wife: "Oh, Harry. You were going 80." (The man gave his wife a dirty look.)

Officer: "I'm also going to give you a ticket for your broken taillight. "

Man: "Broken taillight? I didn't know about a broken taillight!"

Wife: "Oh Harry, you've known about that taillight for weeks." (The man gave his wife another dirty look.)

Officer: "I'm also going to give you a citation for not wearing your seat belt."

Man: "Oh, I just took it off when you were walking up to the car."

Wife: "Oh Harry, you never wear your seat belt."

The man turned to his wife and yelled, "SHUT YOUR MOUTH!"

The officer turned to the woman and asked, "Ma'am, does your husband talk to you this way all the time?"

The wife said, "No, only when he's drunk."



(டமார்ர்ர்ர்ர்ர்..... ஹி ஹி... )

என்ன ஒரு உண்மையான மனைவி பாத்தீங்களா..... :-) ஒரு வேலை அரிச்சந்திரன் பரம்பரையா இருந்திருப்பாகளோ ;-)))) இல்லே நம் சித்ரா அவர்கள் சொன்ன மாதுரி வளையல் வாங்கி தராததின் விளைவோ....?? என்ன இருந்தாலும் சொல்லுங்க.... சிறு ஊடலுக்கு பின் வரும் கூடலின் சுகமே தனி தான் இல்ல.... எபெக்ட்ஸ் எல்லாம் பலமாக இருக்குமல்லவா.....

( அட என்ன இது லுக்கு... நம்புங்கப்பா.... அனுபவமெல்லாம் இல்ல ;-).... படிப்பறிவு தான்.... :-)) ....)


Thursday, February 11, 2010

ரயில் பயண பாடம்

இது மெயிலில் வந்தது தான் இருந்தும் என் மனசை தொட்டதால் நமக்கேற்ற சில மாசாக்களை தூவி பகிர்ந்துகொள்கிறேன்...


பச்சை விளக்கு வண்டிக்கு உத்தரவிட... குபுக் குபுக் என்ற அதற்கே உரிய பாஷையில் நன்றி சொல்லி புறப்பட்டது ரயில்... ஆடவரும் பெண்களும் அடங்கிய கலவையாக கிளம்பிய ரயிலில், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக கலை கட்ட தொடங்கியது.... அந்த compartmentil காலேஜ் கும்பலும் உண்டென்பதால் அவர்களுக்கே உரிய கருத்துமிக்க சில பாடல்களை பாடிக்கொண்டும், கோரஸ் போட்டுக்கொண்டும் ஆரவாரத்துடன் தொடங்கியது பயணம்....

அந்த compartmentil ஜன்னலோரத்தில் ஒரு முதியவரும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அமர்திருந்தனர்...

அது வரை அமைதியாக இருந்த அந்த ஆண் முகத்தில் ரயில் செல்ல செல்ல ஒரு இனம் புரியாத பரவசம்....



"அப்பா பாருப்பா.... மரம்லாம் பின்னாடி போது பாரு.... எவ்ளோ அழகா இருக்குல.... "



அப்பா அத பாரேன் அப்பா இத பாரேன் என்று அந்த ஆண் பரவசத்தோடு சொல்லி மகிழ்வதை பார்த்த அனைவருக்கும் முப்பது வயதை கடந்துவிட்ட ஒருவனின் செயலாக அது படவில்லை என்பதால் அனைவருமே சற்று முகம் சுழித்தனர்.... சிலர் அவர்களின் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் முனு முனுக்கவும் கூட செய்தனர்....



"சரியான லூசு போல அணு.... " புதிதாக திருமணமான சுரேஷ் தன் மனைவி அனுவிடம் சொன்னான்....





திடீரென வெளியில் மழை கொட்ட தொடங்கின.... மழைச்சாரல் திறந்து வைக்கப்பட்டிருக்கும் சன்னலின் வழியாக பட்டு தெறிக்க தொடங்கியது.... அனைவரும் அவசர அவசரமாக சன்னல்களை மூடிக்கொண்டிருந்தார்கள் அந்த compartmentil.... ஆனால்... அந்த இளைஞன் தற்போது மேலும் உற்சாகமடைந்தவனாய்.... சன்னலின் வெளியில் கையை நீட்டி மழை துளியின் மெல்லிய ஸ்பரிசத்தை தொட்டு ரசித்து கொண்டே..... கண்களில் பிரமிப்புடன்....



"அப்பா.... இது எவ்ளோ அழகா இருக்குல...." தன் மகிழ்ச்சியை தன் தந்தையிடம் சொல்லிப்பகிர்ந்து கொண்டான்.....



தொடர்ந்து வெளியில் கை நீட்டி மலையில் கையை ஆட்டி விளையாடிகொண்டிருந்தான் அவன், மழைச்சாரல் வண்டியின் உள்ளே அடித்துகொண்டிருக்க..... எதிரில் அமர்ந்திருந்த அணுவின் மேல் பட்டு அவளின் உடைகள் நனையவே சீற்றத்துடன் சுரேஷ் அந்த முதியவரை பார்த்து....




"யோ கெழவா, உன் பையனுக்கு தான் அறிவில்லனா உனக்குமா.. வெளில மழை பேயுறது உன் கண்ணனுக்கு தெரில...

உன் பையன் லூசுனா ஏதாது மெண்டல் ஆஸ்பத்திரில போய் சேத்துவிடு.... அத விட்டுட்டு இப்டி publicla கூட்டிட்டு வந்து எல்லார் உயிரையும் வாங்காத..."



கோவத்தை கொட்டி முடித்த சுரேஷிடம் தயங்கி மெல்லிய குரலில் முதியவர் பேசத்தொடங்கினார்...




"மன்னிச்சுடுங்க தம்பி..... ஆஸ்பத்திரிலேந்து தான் வந்துட்டு இருக்கோம்.... அவனுக்கு பிறவிலேந்தே பார்வை தெரியாதுப்பா... இப்போதான் அறுவை சிகிச்ச முடிஞ்சு பார்வை கெடச்சு ஊர் திரும்பிட்டு இருக்கோம்... இந்த இயற்கைலாம் இவனுக்கு புதுசு அதான் இப்டி நடந்துக்கறான் மன்னிச்சுடு..." என்றார்...


Matter:

The things we see may be right from our perspective until we know the truth. But when we know the truth our reaction to that will hurt even us. So try to understand the problem better before taking a harsh action.