ஏன் இந்த கொல வெறின்னு புருவத்த தூக்கிட்டு கேட்குற எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்குறேன்... உங்களுக்கும் இந்த உண்மைகளெல்லாம் தெரிஞ்சப்புரம்... எட்றா அருவாள... கட்டுறா வண்டியனு சொல்வீங்க... இல்ல என்ன மாதுரி புலம்புவீங்க...ஏனா நாம எல்லாம் அநியாயத்தை பாத்து பொங்கி எழும் சூடான சேம் ப்ளட்டு...
போன பதிவுல இயற்கையின் அருட்கொடைகள் பல பிரச்சனைக்கு தீர்வா இருக்குனு முடிவுரை சொல்லி என்னோட பதிவ முடிச்சேன்... அதுக்கப்புறம் இப்போ நான் கண்ட காட்சிகள் அதிர்ச்சி தரும் பல தகல்வல்கள பாத்து மனசு பத பதைக்க உங்க கிட்ட மறுபடி ஓடோடி வந்துருக்கேன் காரணம் பாலு விஷமாகுதாம், பயிறு விஷமாகுதாம், விளைச்சல் நிலம் மலடாகுதாம்,அப்புடியே விளைவிச்சாலும் அத சாப்பிடும் மனித இனம் மலடாகுதாம் இப்புடி எதை எடுத்தாலும் விஷம்னா என்னத்த தான் துன்னுறது....
இந்த பதிவும் வழக்கம் போல நம்ம இயற்கைய பத்தி அமைந்தது எதேச்சையாக தான்.... இப்புடியே போய்ட்டு இருந்தா நானும் இயற்கை ஆர்வலராகி அப்புறம் தீவிரவாதியா ஆய்டுவேணு நினைக்கிறேன்.... தீவிரவாதினா இயற்கைய வளங்களை காக்கும் பணியில் தீவிர வாதிப்பா எக்குத்தப்பா புரிஞ்சுகிட்டு என்கவுண்டர் வர இழுத்து விட்டுறாதீங்க பங்காளிங்களா.... எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...
நம் முன்னோர்கள் இயற்கையோட ஒன்றிய வாழ்கை நெறியை கடைபுடிச்சதாலும்... இயற்கை வளங்களுக்கு பாதிப்பில்லாத அழகான வாழ்கை முறையை அமைத்து கொண்டதாலும் ரொம்ப காலம் ஆரோகியமா வாழ்ந்தாங்க.... ஆனா அதுலாம் இப்போ STD(history) ஆகிபோச்சு.... வளரும் நம் குழந்தைங்க கிட்ட உங்க பாட்டி 100 வருஷம் வாழ்ந்தாங்கனு சொன்னா இதென்ன சக்திமான் பார்ட் 10 ஆனு கேப்பாங்க போல...
அப்போ இருந்த விளை நிலங்கள் இப்போ நாம வசிக்கும் அடுக்கு மாடிகுடியிருப்புகளாகி... அப்போ இருந்த நிதான உலகம் இப்போ அவசர உலகமாக மாறிப்போய்.... instant நூடுல்ஸ் மாதுரி இப்போ instant அரிசி கண்டு புடிக்கும் அளவுக்கு இழுத்துகிட்டு வந்துருக்கு.... அட ஆமாங்க இனிமே சோறு உன்ன அடுப்பே தேவை இல்லையாம்.... தண்ணில அரிசிய போட்டா சோறு ரெடி... (அப்போ ஆனம்னு (குழம்புன்னு) ஆர்வமா கேக்கும் மக்களுக்கு... கடைல வாங்கிக்கொள்ளவாம்... எப்புடி எல்லாம் சோம்பேரியாக்குரானுகப்பா ....)
போற போக்க பாத்தா பத்து மாசம் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தை செல்வங்களை கூட instantaa பெத்துபாங்க போல... இப்போவும் instant குழந்தைங்க பொறக்குது அது instant messengerla.... நிஜத்தில் பெற்றடுக்கும் காலம் ரொம்ப தொலைவில்இல்லைங்குறது வேதனையான விபரீதம்... இப்புடி வேகம் வேகம்னு எல்லாத்துலையும் வேகத்த கூட்டி கடைசில என்னாச்சு தெரியுமா.... இதுக்கு மேலநான் பேசினா சரியா வராது.... நீங்களே பாத்து நொந்துக்கோங்க....
நிலைமை இப்புடி இருந்தா வருங்காலத்துல formality க்கு கூட first night ல பால் வைக்க மாட்டாங்க போல.... ஹ்ம்ம்... ஏன் கவலை எனக்கு :-(((.... என்னத்தசொல்ல...
Videos Courtesy: Techsatish.net