ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொது சுகாதாரத் துறை பேராசிரியர் சைமன் சாப்மேன். பன்றியின் ரத்தம் பயன்படும் பொருட்கள் குறித்து அவர் விரிவான ஆய்வு நடத்தினார். அதில் பல்வேறு வகையான 185 தொழில்களில் பன்றியின் ரத்தம் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.
பில்டர்(filter) சிகரெட்டில் உள்ள வடிகட்டும் (filter) பகுதியில் புகையிலை துகள்களை பஞ்சு வழியாக எளிதாக வடிகட்ட பன்றி ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் பயன்படுத்தப்படக் கூடும் என்று சைமன் கருத்து தெரிவித்துள்ளார்.
சிகரெட் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பட்டியலை நிறுவனங்கள் வெளியிடுவதில்லை. சில நிறுவனங்கள் இணைய தளத்தில் வெளியிட்டாலும், ‘பதப்படுத்தும் பொருட்கள்’ என சிலவற்றை பெயர் குறிப்பிடாமல் அறிவிக்கின்றன.
கிரீஸ் நாட்டின் ஒரு நிறுவனம் பன்றி ரத்தத்தின் ஹீமோகுளோபினை பில்டர்(filter) சிகரெட்டில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு...
பன்றி இறைச்சியை இறைவன் எவ்வாறு தடை (ஹராம்) செய்துள்ளானோ அது போல் பன்றி ரத்தத்தினால் செய்யப்பட்ட பில்ட்டர் சிகரட்டுக்களும் கூடாது தானே... பன்றியை விடுங்கள்... புகைப்பது உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடல்லாமல் உங்களை சுற்றி உள்ள அனைவரையும் அதுவும் உங்களை விட பன்மடங்கு அதிகம் பாதிப்பை உண்டாக்கும் என்கிறார்கள்... இந்த வெள்ளை விஷம் உங்களுக்கு தேவையா... உங்கள் உடலுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யா விட்டாலும் சரி..... அதற்க்கு தீங்கு விளைவித்தமைக்கு படைத்தவனிடம் என்ன பதில் கூறப்போகிறீர்கள்.... சிறப்பான உடலை உனக்கு தந்தேனே... இப்படி சல்லடையாகிப்போன நுரை ஈரலுடனும், புற்று நோயுடனும் கொண்டு வந்திருக்கிறாயே என்று உங்களிடம் கேட்கப்படும்போது என்ன சொல்வீர்கள்....
சொந்தங்களே.... வாழ்வின் 7 நிமிடத்தை புகையாக்கி விட்டு கொண்டிருக்கும் நாம் எத்தனை ஏழு நிமிடங்களை துளைத்துள்ளோம் என சற்று சிந்தித்து பாருங்கள்... அதில் ஒரு நிமிடத்தை இவ்வுலகில் உள்ள சர்வ பலம் பொருந்திய அத்துணை பேரும் சேர்ந்து முயற்சித்தாலும் மீட்டு தர முடியுமா? இதெற்கெல்லாம் பதில் சொல்ல போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணருமா உள்ளம்...???
நீங்கள் கரியாக்கும் காசு ஒரு ஏழை குழந்தையின் பசியை ஆற்றக்கூடும்..... ஒரு வேலை உணவுக்கு நாயாக உழைக்கும் எத்துனை எத்துனை மக்களை கடந்து செல்கிறீர்கள்.... உங்களின் வாயிலிருந்து ஊதப்படம் புகை அவர்களின் வயிற்று பசிக்கு உணவு....
புகைக்காமல் எவரும் உயிரை விட்டதாக சரித்திரம் இல்லை.... பசியால் நொடிக்கு நொடி உலகெங்கிலும் மரணங்கள் நிகழ்ந்த வண்ணமே இருப்பதை அறிந்தும் புகைத்துக்கொண்டே அடுத்ததை எடுத்து பற்றவைத்து புகைக்கும் அரக்க குணம் எங்கிருந்து வந்தது...???
என்னை எந்த விதத்திலும் இப்பதிவை இட தயார் படுத்தி கொள்ளாத காரணத்தினால்... அதிர்ச்சி தரும் பல புள்ளி விவரங்களை என்னால் சேகரித்து இங்கு தர இயலவில்லை என்பது வருத்தமே... விருப்பம் உள்ள நம் பதிவர்கள் யாராகிலும் இதை பற்றிய இன்னும் பல தகவல்களுடன் தொடரலாமே....
கடைசியாக ஒரு படத்துடன் இப்பாடத்தை முடிக்கிறேன்.....