Sunday, January 31, 2010

வரலாற்றில் நான் (எப்புடி டைட்டில்!!!!! ஹி ஹி)

ஒரு பதிவ போட்டுட்டு அடுத்து என்ன போடறதுன்னு யோசிக்ரதுகுள்ள சுறு சுறுன்னு ஒரு வாரம் ஒடிபோயிடுச்சு.... உண்மைய சொல்னும்னா இந்த பொழப்புக்கு வர்றதுக்கு முன்னாடி...(அதாங்க பிளாக்கர் ஆகறதுக்கு முன்னாடி) அட ப்ளாக் தானே..... அது வெட்டி பேச்சு பேசற எடம்னு (கோச்சுக்கபடாது பங்காளிங்க்லா) நெசமா அப்டி தான் நெனச்சுட்டு இருந்தேன் ....
ஆனா இப்போ தான் புரியுது.... இங்க இருக்ற ஒரு ஒரு பதிவும் ஒரு ஒருத்தவங்க்ளோட மனசு..... அதன் பிரதிபலிப்பு... அவங்கவன்ளோட வாழ்கை... எண்ணம்... எழுத்தாற்றல் இப்டி எல்லாம்.... ஒரு ஒரு ப்ளாகும் இப்போ ஏன் கண்ணனுக்கு ஏதோ ஒரு உயிருள்ள ஜீவன நேர்லயே சந்திச்சு பேசற மாத்ரி இருக்கு(போதும் மிதகாதீங்க சில மொக்கையும் இருக்கத்தான் செய்யுது ஹி ஹி....)
சரி... இப்போ மேட்டருக்கு வரேன்.. அதொண்ணும் இல்லே.... இந்த கூட்டத்துல திருஞ்சு நான் கண்ட பல முகங்கள்.... தங்களோட அனுபவங்கள சொல்றதும்..... அத ரசிச்சு படிக்றதும் பாத்தது கை அரிக்க ஆரம்பிச்சுடுச்சு... அதான்... சில காலங்களுக்கு முன் jeddah வை உலுக்கி போட்ட வரலாறு காணாத வெல்ல பெருக்கு அன்னிக்கி... நான் கொஞ்சம் கடமை உணர்ச்சில office கெளம்பி போயிட்டு... இறைவன் பேரருளால்... மறுபடி பத்திரமா உயிரோட வீடு வந்து சேந்து இப்போ உங்க கூட பேசிக்கிட்டு இருக்கும் இந்த gapla naasiyaa ஸ்டைல்ல சொல்னும்னா கொஞ்சம் கொசுவத்தி சுருள் சுத்தி பாக்றேன் அந்த பயங்கரத்த...
வழக்கம் போல அரை தூக்கத்தில தலைமாட்டில வெச்சுருந்த மொபைல் எடுத்து ஒத்த கண்ண லேசா தொறந்து டைம் பாத்தது தான் தாமதம்... ஆஆஹா... மணி 7.... அவசர கெதில அடிச்சு புடிச்சு எழுந்து balcony கதவ தொறந்தேன, காலைல சில்லுனு வீசுற அந்த காத்து வாங்கறது எனக்கு ரொம்ப புடிக்கும்... அன்னிக்கும் அதே மாத்ரி தொறந்த சில நொடிகள் என் கண்ண என்னாலேயே நம்ப முடில... இது கனவா இல்லலல...(அதுக்காக தமிழ் படம் ரேஞ்சுக்கு கில்லிலாம் பாக்கள)....
ஏதோ ஒரு புது உணர்வு... இதுவர அப்டி ஒரு வானம் நா பாத்ததே இல்ல... கடைசியா சென்னை விட்டு வந்ததோட சரி.. ஆனா கார் இருள் மெல்ல சூழ்ந்து கொல்வத மட்டும் கவனிச்சேன்... கடமை அழைக்க... அரக்க பறக்க office கெளம்பிட்டேன்... அன்று நான் கண்ட அந்த காட்சி இதோ...
மேகங்கள் மெல்ல மூல்கடிதுகொண்டிருந்தன வானத்தை..


viru virunu lift pudichu erangi konja dhooram nadandhen... சாரல் மழை வந்து நெனைக்க.... மொபைல் எடுத்து ஒடனே எங்க மேனேஜர்கு போன் போட்டு... சார்... நெலம மோசமாகிட்டு இருக்கு.... என்னால வர முடியுமான்னு தெரிலன்னு சொல்லான்னு தான் பண்ணேன்.... பட் சொல்லல....
"சார் நா வர கொஞ்சம் லேட் ஆகலாம்" சொல்லி போன் வெச்சுட்டேன்.. (again கடமை உணர்ச்சி ஹா ஹா no no அழப்டாது )
ஹான் சொல்ல மறந்துட்டேன் பாருங்க... இதுல மேட்டர் என்னன்னா.... நா பஸ்ல தான் டெய்லி ஆபீஸ் போவேன்... எப்டியும் 1 hour ஆகும் நா போயி சேர... சோ வீட்ல தூங்க வேண்டிய தூக்கத்த பஸ்ல compensate பண்ணிடுவோம்ல...
அதே மாத்ரி அன்னிக்கும் ஏறி கொஞ்ச நேரத்துல கனவு காண ஆரம்பிச்சுட்டேன்.... நல்லா டூயட் பாடிட்டு இருந்த ஏன் கனவு கரெக்டா ஆபீஸ் நெருங்க்ரபோ ஸ்டாப்... அதென்னவோ தெரில யாரோ எழுப்பி விடற மாதரியே ஒரு பீலிங்கு, திடீர்னு கண் முழிச்சு பாத்தேன்.... ஆபீஸ் விட்டு வீட்டுக்கு போற மாத்றி இருந்துச்சு... இதுவும் கனவோனு கண்ண கசக்கி பாத்தேன்... அது நிஜம் தான்... நெஜமாவே தான்...
ஆம் அப்டி ஒரு மை இருட்டு சூல்ந்துட்டு இருந்தத கண்டு அரண்டு போய்டேன்... ஈவினிங் வீட்டுக்கு வர்றபோ இருக்ற மாதரியே தெருவிழக்குலாம் பளிச்சுன்னு எரிய... கடைகளோட boardum ஜோடி சேந்து திகுலூட்டியது... ஏதோ உலக அழிவின் அடையாளத்த காண்பது போல, எனக்கு mattum தான் இப்டியோனு கொஞ்சம் திரும்பி பாத்தா பஸ்ல இருந்தவன் எல்லாம் பேயறஞ்ச மாத்ரி வெறிச்சு வெளியவே பாத்துட்டு இருந்தாய்ங்க... வந்து சேர வேண்டிய இடம் வந்தது... வானத்தையே வெறிச்சு பாத்தவன வெளில எறங்கினேன்... கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க... இருள் கவ்விக்கொள்ள... எடுத்தேன் சில படங்கள்... அவை இதோ...


இவ்ளோ பெரிய இந்த ரோட டெய்லி கடந்து போறதுக்குள்ள ஒரு கணம் மொத்த குடும்பமே கண் முன்னாடி தோன்றி மறையும்... பாத்து போப்பான்னு சொல்ற மாத்ரி இருக்கும்.


அசுர வேகத்துல வர்ற வண்டிய வெறிச்சு பாத்து... இதுல ஒரு வண்டிக்கு பிரேக் failure ஆனாலோ அல்லது நான் சற்று கிராஸ் பண்ண தாமதிச்சாலோ.... நொடி பொழுதில் முடிந்து விடும் அனைத்தும்... நிரந்தரம் இல்லா இவ்வாழ்க்கையை நித்தம் உணர்த்தும் நெடுஞ்சாலை இது...

(ஐ, நல்லாருகுல, ப்ளாக் எழுத ஆரம்பிச்சாலே இப்டி தான் punchaa வருமோ )




வெது வெதுப்பான வெயில் வெளுத்து கட்ட துவங்கும் காலை 8.30 மணின்னு சொன்னா நம்ப முடியுதா... இன்னும் பல நம்ப முடியாத கதைகளை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.....

அழிவின் சுவடுகளுடன்....

Monday, January 25, 2010

கவிதை கொத்து

கீழே கொடுகபட்டுள்ள கவிதைகள் அனைத்தும் நாந்தான் எழுதினதுன்னு சொன்னா உதைக்க பல பேரு உருட்டு கட்டையோட ரெடியா நிப்பீங்கன்னு தெர்யும்.....


அதனால உண்மைய சொல்லிடறேன் சொந்த கார பங்காளிங்க்லா... இங்க கொடுகபட்டுள்ள கவிதைகளுக்கு சொந்தகாரனோ / காரியோ யார்னு தெரில...


இருந்தும் நான் ரசித்த சில வரிகள் சொந்தங்களின் ரசனைக்கும்......


இதோ...


(இந்த பையன பாக்க என்ன மாதரியே இல்ல, இல்லேம்பீங்க்லே... பொறாம பொறாம)

(உண்மையிலும் உண்மை..... )



(ஒத்த வரில சேரன் படம் பாத்தாப்ல ஆகிடுச்சுப்பா, என்ன கொடும சார் இது )





(இப்டி நான் எழுதனும்னு நெனக்ரதலாம் எழுதிட்டா, அப்றம் நா என்ன தான்யா எழுதறது)



கடைசி இந்த வரிகள் என்னால மறக்கவே முடியாது....

அந்த கதைகளை dairyin பக்கங்களாக விரைவில்..
எழுதுலானு இருக்கேன்.....
நோ நோ அளப்டாது....

Saturday, January 23, 2010

எங்கள வெச்சு காமெடி கீமெடி பன்லியே



கைப்புள்ள: உருட்டி விளாட மண்டைய விட்டா வேற ஒண்ணுமே கெடைக்ளையாடா உங்களுக்கு , கொலைகார பாவிகளா.... அம்புட்டு பயலும் accusteah இருக்காயங்க்லே இந்த ஊருல அவ்வவ்வ்வ்வ்......






கைப்புள்ள: அடப்பாவிகளா, நா குதிக்க போற எடத்துக்கு எதித்தாப்ல தானா இப்டி ஒரு போர்டு வெக்கணும்.... எம்புட்டு கொல வெறி நம்ம மேல....








டிசோசா: டார்லிங், எப்டி இருக்கு நம்ம டின்னெர்? உனக்குனே speciala தவளை கால் சூப் ஆர்டர் பண்ணேன்?

மேடம்: என்னங்க ஏதோ சத்தம்?

தவளைகள்: போராடுவோம் போராடுவோம் இழப்பீடு கிடைக்கும் வரை போராடுவோம்.... எல்லாரும் அப்டியே உக்காருங்க.... சாகும் வரை தர்ணா இருப்போம்... இந்தியால aahna oohna இப்டி தான் இருப்பாய்ங்கலாம் .....



சேவல்: ஏண்டி.... ஏன் இப்புடி.... உனக்கு நா என்ன கோர வெச்சேன்.....?
சண்டாளி.... இப்டி பண்ணிட்டியே.... அடியே உன்ன கொல்லாம விட மாட்டேனடி...





ஆமை: ஆஆஹா.... இத்தா தண்டில இருக்ற இவன் குடும்பத்துக்கே இந்த நிலமணா அப்போ நாமலாம் சூப் தானா? sssssssஅப்பா இப்போவே கண்ண கட்டுதே.....



Matter: Although pain of everything goes wrong against us might sound unbearable, But just learn to pretend as if nothing can win over you. You'll seem to be damn confident to win your hurdles.

மேல உள்ள காமெடிக்கும் கீழ உள்ள மேட்டருக்கும் எதாதும் சம்மந்தம் இருகாடானு நீங்க பாக்றது புரியுது... அப்டிலாம் பாக்க படாது.... என்னங்க பண்றது என்னத்த சொல்றதுன்னு தெரில எதையாது சொல்லி வேப்போமே, காசா பணமா.... ஹி ஹி எப்டி நம்ம புத்திசாலித்தனம்

(நானும் எவ்ளோ நேரம் தான் ஏதோ உருப்படியா சொல்ற மாதரியே நடிகரதுதுதுது)





Tuesday, January 19, 2010

தன்னம்பிக்கை


முதல் படத்தை பார்த்த மாத்திரத்தில் மனிதனை பழித்து காட்டுவது போன்று அவன் செய்யும் வேலையை பார்த்து எவரும் புன்னகைதிருப்பர்
ஆனால் அதை தொடர்ந்து வந்த படங்களை பார்த்து நான் ஒரு பாடம் கற்றேன்

இது குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட செய்யும் சேட்டை இல்லை

வருங்கால சந்ததியினருக்கு பாடம் எடுக்கிறது
சற்று படத்தை உற்று நோக்குங்கள்


ஆம்..

இப்பொழுது புரிகிறதா இதன் பாடம்








அனைவரையும் ஆச்சரிய படவைத்து மனிதனை போல நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாக நடக்கும் இவனுக்கு மரியாதை தராமல் இருக்க முடியுமா என்ன

அவன் எங்கு சென்றாலும் வரவேற்பு தான்

அவன் தோல்தட்டி கொடுக்க எத்துனை பேருக்கு தான் ஆசை

தன சொந்த காலில் தனித்து நிற்க கற்று கொண்டான் இவன்

தன்னம்பிக்கை ஐந்து அறிவு படைத்த ஜீவிக்கும் கூட சுய மரியாதையை பெற்று தரும் என்பதற்கான வாழும் உதாரணம்
கால்கள் இழந்தும் கம்பீரமாய் நடக்கும் இவன்
நாம் கற்க வேண்டிய பாடங்களில் ஒருவன் இல்லையா


அன்புடன் உங்கள் தோழன்

Monday, January 18, 2010

Free Tamil Nadu State Board Books Online


நானும் ஒரு வார காலமா என்னத்த இட்ரதுனு யோசுச்சு யோசுச்சு ஒன்னும் சிக்காம ஒரு வழியா என் புலம்பலையே ஒரு பொது அறிவிப்பா இட்டதும்.

அதற்கும் ஒரு நல்ல உள்ளம் இட்ட முதல் கமெண்டும் என்னத்த சொல்றது போங்க. ஏதோ சாதிச்சுபுட்ட மாதுரி ஒரு feeling.

முதன் முதலில் உச்சரிக்கும் வார்த்தையில் தொடங்கி, முதல் ஸ்கூல், முதல் வகுப்பறை, முதல் நட்பு, முதல் பாடம், முதல் காதல் இப்படி பல முதல்களில் ஏற்படக்கூடிய அற்புதமான உணர்வு முதல் மரணம் வரை நீடித்திருக்கும் அல்லவா.

அது போல் இந்த முதல் blogin முதல் இடுகை முதல் கமெண்ட் போன்ற உணர்வை அனுபாவிச்சவனாய் உருப்டியா ஏதாது எழுதுங்கன்னு எனக்கு அன்பு கட்டளை இட்ட முதல் தோழிக்கு நன்றி சொல்லி இதோ என் முதல் உருப்படி.

சமீபத்தில் எனது சகாக்களிடம் இருந்த வந்த மெயில்.

தமிழக அரசின் வெப்சைட் ஒன்றில் Tamil Nadu State Board Books ஆன்லைனில் இலவசமாக கொடுக்கபட்டிருப்பதாக ஒரு தகவல். உடனே அந்த linkai சொடுக்கி இலவசமாக கொடுக்க பட்டிருந்த புத்தகங்களை டவுன்லோட் செய்து பார்த்தேன். PDF இல் கொடுத்திருக்கிறார்கள் அணைத்து வகுபிற்குமாய். முதல் வகுப்பில் தொடங்கி 12 ஆம் வகுப்பு வரையிலான அணைத்து பாடங்களும் கொடுக்க பட்டிருந்தது உண்மை தான். வரவேற்க தக்க விஷயம்.

நல்ல உள்ளம் படைத்த நாலு சொந்த கார பங்காளிங்க கைல கெடச்சா, சிலர் அதை பிரிண்ட் செய்து விநியோகிக்கலாம் அல்லவா என்ற எண்ணத்தினால் எனக்கு தெரிந்த அனைவர்க்கும் mailil அனுப்பியதை இந்த இடுகையின் மூலம் பகிருந்து கொள்கிறேன்.

அன்பும் பண்பும் கூடவே வசதியும் வாய்க்க பெற்ற நல்ல உள்ளம் கொண்ட நம் சொந்தங்கள் யாரேனும் ஒரு அனாதை ஆசிரமத்திற்கோ அல்லது தேவை உள்ள ஏழை மாணவர்களுக்கோ பிரிண்ட் செய்து விநியோஹிக்கலாமே.

இதோ http://www.textbooksonline.tn.nic.in/ இதுதான் அந்த லிங்க்

இரண்டாவது இடுகை இம்புட்டு seriousa போகும்னு கனவுல கூட நெனக்ள பங்காளிங்க்லா. அடுத்து ஒரு இடுகையில் இனிப்பான சந்திப்பிற்காக காத்திருக்கும்

அன்பு தோழன்

பொது அறிவிப்பு

இதனால் எல்லா சொந்த கார பங்காளிங்க எல்லாத்துக்கும் அறிவிப்பது என்னன்னா......

உங்க பாச கார பயபுள்ள முதல் முதல் ல ப்ளாக் ல குதிசுருகாப்ள.....

என்னதான் வாய் கிழிய ஊருக்குள்ள பஞ்சாயத்து பண்ணிட்டு திருன்ஜாலும்......

ப்ளாக்னு வந்துட்டா என்னத்தையாது உருபடியா எழுதிர்னும்னு நானும் ஒரு வாரமா ரூம் போடாத கொறையா உக்காந்து யோசிக்றேன் பங்காளிங்க்லா ஒன்னும் வர மாட்டேன்குது.....

செரி... அப்டியே விட்டுபுட்டு கருமம் வந்ததும் தான் ஆரம்பிக்ளமேனு பாத்தாலும்... பங்காளிங்க யாராதும் வந்து பாத்துபுட்டு வைய புடாதுல....

மனசு கேக்காம இந்த இடுகை.... என நாம தான் பாச கார பயபுள்ளயாச்சே....

இதை படிகிற உங்க எல்லோருக்கும் அணைத்து வளமும் நலமும் பெற்று சுகமான சந்தோஷம் நிறைந்த வாழ்க்கைய இந்த வருஷம் மட்டும் இல்ல இனி வரபோகும் எல்லா வருஷமும் இறைவன் அருள் புரியணும்னு வேண்டிக்கிட்டு....

நேரத்தை வீனடிதமைக்கு......
.
.
.
வருத்தமே படமாட்டேன்.....
இது என் உரிமை பங்காளிங்க்லா...

இதுகப்ர்மாது பயனுள்ள இடுகைகள் இட தங்கள் வாழ்த்துகளுடன் விடை பெறுவது வேற யாரு
உங்க அன்பு தோழன் தானுங்கோ.