இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!
வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!
கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;
உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!
நன்றி சகோதரர் Mohamed Riyaz:facebook
courtesy: http://nagoreflash.blogspot.com/2010/02/blog-post_26.html#comment-form
உருக வைக்குது. சில சமயம் அப்படித்தான் தோணும், சிலரின் வாழ்வைப் பார்க்கும்போது. இறைவனுக்கு நன்றி.
ReplyDeleteமலையாளத்தில் ஒரு பாடல் உண்டு “உப்பாயல்ல..” என்று தொடங்கும். வெளிநாட்டிலிருக்கும் வாப்பாவுக்கு மகள் பாடும் பாடல் அது; கேட்டால் கரையாமல் இருக்க முடியாது.
பலரது வாழ்க்கை இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது, ’என்ன செய்ய’ என்ற ஏக்கப் பெருமூச்சே இதற்கு பின்னூட்டம்!!
ReplyDelete//உருக வைக்குது//
ReplyDeleteஉலக மகளிர் தினத்தன்று... இது எல்லோருக்கும் இனிய பெண்கள் தினம் இல்லை என்பதை உணர்த்துவதாகவே வாடி வதங்கும் இம்மலர்களின் சோகம் நெஞ்சை சுட்டது.... இவர்களின் சோகம் தீர பிரார்த்திப்போம்....
//’என்ன செய்ய’ என்ற ஏக்கப் பெருமூச்சே இதற்கு பின்னூட்டம்!!//
ReplyDeleteஇறைவனிடம் இவர்களுக்காக பிரார்த்திப்பதை தவிர வேறென்ன செய்ய இயலும் சகோ... சில காலம் பின்னோக்கி சென்றால் இது நம் ஒவ்வொரு வீட்டின் சோக கதை, இன்றும் சில குடும்பங்களின் நிலை இதுவே... வார்த்தைகளில் சொல்லி முடிக்க முடியாத அவலம்...
கனதி நிறைந்த கவிதை.......
ReplyDeleteஇதுதான் பலரின் வாழ்க்கையாகி விட்டது
வலிக்குதுங்க..........
/வலிக்குதுங்க/
ReplyDeleteவிடிவெள்ளி தங்களின் முதல் வருகைக்கு நன்றி.... வலிகளும் வேதனைகளும் ஆற இறைவனை பிரார்த்திப்போம்... வருத்தப்படாதீங்க சொந்தமே....
நீங்க நம்மள மாத்ரியே வெள்ளந்தியான ஆளா இருக்றீங்க போங்க..... :-)
கொடுமையிலும் கொடுமை..
ReplyDeleteஎனவே தான் என் தங்கைக்கு வரும் இது போன்ற வரங்களை நான் வேண்டாம் என்கிறேன்.. கொஞ்சம் சம்பாரித்தாலும் இங்கேயே இருக்கட்டுமே...
சந்தோஷத்துடன்..
அப்புறம்..//பாலாய்ப்போன வெளி நாடு!!/
இதைப் பாழாய்ப் போன என்று மாற்றுங்கள்.. அழகான ஒரு கவிதையில் இதை மட்டும் ஒரு கரும்புள்ளியாக விட்டு வைப்பானேன்...?
நன்றி..
முதல் வருகைக்கும், பிழை திருத்தியமைக்கும் நன்றி...
ReplyDelete//கொஞ்சம் சம்பாரித்தாலும் இங்கேயே இருக்கட்டுமே...சந்தோஷத்துடன்..//
நிச்சயமாக... தங்கள் சந்தோசங்கள் மென்மேலும் பெருக இறைவனிடம் வேண்டிகொள்கிறேன் பங்காளி....