Saturday, February 27, 2010

சிலிர்த்த சில பொழுதுகள்

தலைப்பை பார்த்து ரொம்ப சுவாரசியமா ஏதாவது ரொமேன்ஸு மேட்டரு கிடைக்குமோன்னு தேடி வந்த அன்பு உள்ளங்களுக்கு ரொம்ப சாரி... கிடைக்கும்ம்ம்ம்..... ஆனா கிடைக்காது....

என்னடா இது இப்டி குழப்புரானேனு ஒரு மார்க்கமா லுக்கு விடும் லேடிஸ் & ஜென்டில் மென்க்கு.... அதொண்ணும் இல்லீங்க வருங்காலத்துல போடும் பதிவுல வரும் ஆனா இப்போ இந்த பதிவுல வராதுங்குரத தான் அப்டி சிம்பாலிக்கா சொன்னேன்....

சரி!!!! ஒடனே கோவப்பட்டு இந்த சின்னவிஷயத்துக்குலாமா அரைகல்ல எடுக்கிறது.... எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாதான் இருக்கனும் ஆமா.....

ஒகே வள வளன்னு பேசாம விஷயத்துக்கு வரேன்.... சொந்தமா யோசுச்சு ஏதாவது போட சோம்பேறித்தனம்.... அதான் இம்புட்டு நாளா இந்த பக்கம் வரவே இல்ல.... அதுக்காக அப்டியே விட்டுப்புட்டா மறந்துடுவீங்கலோனு ஒரு சின்ன பயம்.... அதான் சோம்பேறித்தனத்த கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு.... வலைகுடும்பத்திற்குள் நுழையும்போது எடுத்துக்கொண்ட உறுதி மொழிய மீராம... (அதாங்க எதாதும் உருப்படியா சொல்லுவேன்னு சொன்னேனே) அந்த வேலைய பாக்க வந்துட்டேன்ன்ன்!!!!!!

என்னை சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைத்த சில விடியோக்கள் இதோ....

நான் இந்தியாஅருகில் இருப்பவைகளின் மதிப்பை என்றுமே அறியாதவர்கள் தானே நாம்... நம்மை விட வெளிநாட்டவர்கள் நம் நாட்டை அணு அணுவாக அனுபவிக்கிறார்கள் என்பதில் சற்று பொறமை தான் வந்தது இந்த வீடியோ பார்த்துகுறை கூறுவதை விட்டு விட்டு குறையை நிவர்த்தி செய்ய முயற்சி எடுப்போம்... இச்சிறுவனை போல்... நெகில்தேன் இதை கண்டு...நம் தேசத்தை நாம் மதிக்க கற்று கொள்வோம்... கற்றும் கொடுப்போம்... சொல்ல வார்த்தை இல்லை ... இதை கண்டதும்....நம் தேசத்தின் ஒருமைப்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்போம்... இச்சிறுவனின் வாக்குறுதி நம் அனைவருக்கும் தான்....
ஸ்டார்டிங் ஒரு மாத்ரி இருந்தாலும் மேட்டரு ரொம்ப சீரியஸா போச்சோ.... அதொண்ணும் இல்ல சொந்தங்களா நாட்டு நியாபகம் வந்துருச்சு அதான்.....


(எவனோ எடுத்த விடியோவ பதிவா போட என்னவோ சொந்த பதிவு போடுற மாதுரி பில்டப்பு குடுத்து, என்னாதிதுனு நீங்கல்லாம் என்ன பாத்து கேள்வி கேட்குற மாதுறியே ஒரு பீலிங்கு.... எதுவா இருந்தா என்ன பங்காளிங்களா சொல்ற மேட்டரு தானே முக்கியம்.... ஹி ஹி... வர்டா)8 comments:

 1. //Jai Hind!//

  ஆமா இத ஏன் எழுந்து நின்னுட்டு சொல்றீங்க.... உக்காந்துட்டே சொல்லிருக்கலாம்..... ;-) ஹி ஹி...

  ReplyDelete
 2. எல்லாமே டச்சிங்.. டச்சிங்..

  அந்த மரத்த தள்ற வீடியோவை நானும் சுட்டு, பிரண்ட்ஸுக்கு அனுபிட்டேன், தேங்ஸ்!!

  ReplyDelete
 3. //எல்லாமே டச்சிங்.. டச்சிங்//

  அப்பாடா, அப்போ இந்த பதிவு ஹிட்டு தான் போல.... நீங்க எதுக்கு ஹுஸைனம்மா தேங்க்ஸ் சொல்றீங்க... என் கிறுக்கல்களுக்கு தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டமைக்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்...

  ReplyDelete
 4. அருமை, அருமையிலும் அருமை.

  ReplyDelete
 5. //அருமை, அருமையிலும் அருமை//

  Thanks you, thank you...

  ReplyDelete
 6. மறுபடியும் யூடியுப்பா? அப்போ ஹோம் ஒர்க் தான!!

  ReplyDelete
 7. அடடே... வாங்க வாங்க.... எங்க போனீங்க சகோ, ஆளையே காணோம்?

  //மறுபடியும் யூடியுப்பா?//

  என்ன பண்றது எழுத்து பிழை இல்லாமல் பதிவு போட எனக்கு தெரிஞ்ச ஒரே வலி இதான்..... ஹ ஹ.....(நாங்களும் யோசிப்போம்ல..)

  //அப்போ ஹோம் ஒர்க் தான//

  நல்ல timing jok... ஹி ஹி....

  ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...