நானும் கைய கட்டிட்டு அப்டியே வேடிக்க பாத்துட்டு காலத்த ஓட்டலாம்னு பாத்தா ஜலீலா அக்கா அவர்கள் உடமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு விருத ஒன்னு குடுத்து உசுப்பேத்தி விட்டாங்க.... இது வர போட்ட பதிவுகள் எப்படி இருந்துச்சோ தெரில... ஆனா இனிமே வரும் பதிவுகள் சுவாரசியமா எதாச்சும் உருப்படியா சொல்லணும்னு சொல்லியே அந்த விருத குடுத்தாங்க.... அதான் ஒரு சில நல்ல மேட்டரோட இதோ வந்துட்டோம்ல.....
சரி விஷயத்துக்கு வருவோமா...
சில பேருக்கு சில விஷயம் புடிக்காது... அதுபோன்றவர்கள் கிட்ட டீல் பண்றபோ அவங்களுக்கு ஏத்த மாதுரி அவங்க பேச்சில் தெரியும் விருப்பு வெறுப்புகளை வைத்து manage பண்ணிருவோம்... ஆனா இந்த கான்சப்ட எப்புடி எறும்புக்கு அப்ளை பண்றதுன்னு ரூம் pottu யோசிச்ச பிறகு... என்னங்க அப்புடி ஒரு லுக்கு... சரி சரி விஷயத்துக்கு வரேன்.... அதாவதுங்க எந்த பயபுள்ள ஏறும்புகிட்ட போயி பேச்சுவார்த்த நடத்துச்சோ தெரில..... எறும்புக்கு வெள்ளரிக்காய் விதைனா ஆகாதாம்... ஆகவே.. எறும்பு தொல்லையினால் அவதிப்படும் மக்களே.... எங்க எறும்பு இருக்கோ அங்க வெள்ளரி விதைகள போட்டு வெச்சா... எறும்பு குடும்பத்தோட எஸ்கேப் ஆய்டுமாம்... கெமிகல் உள்ள எறும்பு பொடிக்கு இது ஆரோக்கியமான ஒன்னு தானே... உபயோகிச்சப்புரம் காசு குடுத்தா போதும்.... ஹி ஹி....
கோடைகாலம் தொடங்கிடுச்சு.... பெரும்பாலான வீடுகளில் அதுவர பயன் படுத்தாத ஐஸ் ட்ரேய உபயோக படுத்த தொடங்கிருப்பீங்க.... பொதுவா நம்ம வீட்டுக்கு வருபவர்களுக்கு ஐஸ் வாட்டர் குடுக்க ஐஸ் கியூப்ஸ் எடுத்து க்ளாஸ்ல உள்ள தண்ணீர்ல போட்டு குடுத்தா வெள்ளையா ஏதோ மிதக்கும்... குடிக்கபோரவங்க கைல வாங்கிட்டு ஏதோ நாம ஒழுங்கா கிலாச கழுவாம ஊத்தி குடுத்த மாதுரி ஒரு லுக் விடுவாங்க... உங்களுக்கு சுத்தமான ஐஸ் வேணும்னா ஐஸ் வைப்பதற்கு முன்னாடி தண்ணிய கொதிக்க வெச்சுட்டு... கொதிக்கவச்ச தண்ணீர்ல ஐஸ் போட்டா இந்த பிரச்சனை வராதாம்...
அடுத்து வாஷ் பேசினுக்கு மேல இருக்குற கண்ணாடி இருக்கு பாருங்க..... அது ஒரு பெரிய கவுருவ பிரச்சன எல்லார் வீட்லயும்... சில வீடுகளில் அங்க நின்னு பிரஷ் பண்ணும்போது தெறிச்ச நுரை அப்டியே புள்ளி புள்ளியா போயி பாக்கவே ஒரு மாதுரி இருக்கும்.... திடீர் விருந்தாளிங்க யாராவதும் கை கழுவ போனா நமக்கே சங்கட்டமா இருக்கும்... இதுக்கு ஒரே தீர்வு.... ஸ்பிரிட்... ஸ்பிரிட்... ஸ்பிரிட்.... ஆமா இத போட்டு சுத்தம் செய்யணுமாம்... அதுக்கப்பறம் பாருங்க அப்டியே கண்ணாடி சும்மா டால் அடிக்குமாம்... அப்பறம் என்ன வீட்ட கண்ணாடி மாதுரி வெச்சுருக்கீங்கனு எல்லாரும் அவார்ட் குடுத்துட்டு போவாங்க...(குடுக்கலேனா என்ன கேக்கப்புடாது ஹ ஹ )
இன்னொரு முக்கியமான பிரச்சன ச்சிவிங்கம்... பயபுள்ளைங்களுக்கு போனா போதேனு அத வாங்கி குடுத்தா... மென்னுட்டு சில நேரம் உக்கார எடமா பாத்து கரெக்டா துப்பி வெச்சு... அதுல நாம உக்காந்து... நாம ஆச ஆசையா வெச்சுருந்த துணில அது ஒட்டி... இப்டி ஆய்டுச்சேன்னு அப்புடியே சும்மா உச்சில சுர்ருங்கும்... இனிமே நோ டென்சன்... ச்சிவிங்கம் பட்ட துணிய freezerla ஒரு ஒன் hour வெக்கணுமாம்... அப்பறம் பாருங்க....
முடி பள பளன்னு இருக்கணும்னா ஒரு ஸ்பூன் வினிகர் முடில தேச்சு அப்பறம் வாஷ் பண்ணனுமாம்.....
இந்த கோடை காலத்துக்கு ஜூஸ் அதிகமா தேவைப்படும்.... இதுவர நீங்க வாங்கின அதே அளவு எழுமிச்சைல அதிக ஜூஸ் கிடைச்சா வேணான்னு சொல்லுவீங்க... ஜூஸ் புளிவதர்க்கு ஒரு மணி நேரம் முன்னாடி சுடு தண்ணீர்ல எலுமிச்சைய ஊற போட்டு அப்பறம் புளிஞ்சா.... அதிக ஜூஸ் கிடைக்குமாம்... எப்பூடி....?????
மீன் சாப்பாடு சாப்புடறவங்க என்ன தான் மாங்கு மாங்குன்னு எத போட்டு கழுவினாலும் மீன் வாசன கையை விட்டு அவ்வளவு சீக்கிரம் போகாது... அதுக்கு ஒரே சிறந்த தீர்வு.. ஆப்பிள் விநிகராம்... கொஞ்சூண்டு போட்டு கழுவினாலே போதுமாம்.... ட்ரை பண்ணி தான் பாப்போமே....
நம் இல்லத்தரசிகள் எல்லாருக்கும் தினம் தினம் ஒரே கண்ணீர் தான்... அட சமைக்கும்போதுதாங்க சொல்றேன்... காரணம் வெங்காயம்.... சோ.. இனிமே உங்க கண்ணுலேந்து ஒரு சொட்டு கண்ணீர் வருவதை இந்த அன்புத்தோழன் அனுமதிக்க மாட்டான் ஹி ஹி... ஆகவே எப்போலாம் வெங்காயம் வெட்டுகிறீர்களோ அப்போலாம் சிவிங்கம் மென்னுகிட்டே வெட்டி தள்ளலாம்... நோ கண்ணீர்.....
அவசரத்துக்கு முட்டை அவிக்க நினைக்கிறவங்க நீங்க வேக வைக்க போற தண்ணீர்ல கொஞ்சம் உப்பு சேத்துக்கிட்டா போதுமாம்.... இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதுரி..... இன்ஸ்டன்ட் முட்டை ரெடி... இதெப்புடி இருக்கு... :-)
சட்டைல இன்க் பட்டுருச்சுனு வருத்தப்படும் வாலிபர் சங்கத்துக்கு... இனிமே கவலைய விடுங்க... இருக்கவே இருக்கு பல் துளக்குற பேஸ்டு... இன்க் பட்ட எடத்துல பேஸ்ட் போட்டு அத காய விட்டு பிறகு துவைச்சா சரி ஆய்டுமாம்..... ஆனா பயபுள்ள பேஸ்டு ப்ராண்ட சொல்லாம விட்டானுங்க பங்காளிங்களா... எதுக்கும் கொஞ்சம் உஷாராவே ட்ரை பண்ணுங்க ...
அடுத்து நம்ம இல்லத்தரசிங்களுக்கு.... சக்கரவள்ளி கிழங்கு தோல் எளிதா உரிக்க... அவிச்ச பிறகு ஒடனே சில்லுனு இருக்கும் சாதா தண்ணீர்ல போட்டா சுலபமா உரிக்கலாமாம்.... எல்லாம் கேள்வி ஞானம் தான்... ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.... ஏதாது ஏடா கூடமாய்ட்டா ரொட்டி கட்ட எடுத்துட்டு வராம இருந்தா சரி...
கடைசியா ஒன்னு சொல்லி முடிச்சுக்குறேன்.... போன பதிவுல நம்ம ஹுஸைனம்மா சொன்னாங்க பூச்சிக்காக அடிக்கப்பட்ட மருந்துல சில பிஞ்சு உயிர்கள் அநியாயமா இறந்து போச்சுன்னு... நெஞ்சை உருக்கிய அந்த துயர சம்பவத்தை மறக்க முற்படும்போது தான்... இதை கண்டேன்... பெரும்பாலான வீடுகளில் எலித்தொல்ல சகஜமான ஒண்ணா ஆய்டுச்சு.... அத ஒழிக்க கண்ட கெமிகல் போட்ட எலி மருந்து வாங்கி வைக்கிறாங்க... சும்மா வீணா வம்ப விலை குடுத்து வாங்குற மாதுரி தாங்க இது... அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு சொல்லவே வேணா... இதுக்கு இயற்கை தந்திருக்கும் அருமையான ஒரு விஷயம் தான்... மிளகு... கருப்பு மிளகை எங்க எல்லாம் எலி புலங்குதோ அங்கெல்லாம் போட்டு வெச்சுட்டா போதும்...... எலியின் தொல்லை இனிமே பக்கத்து வீட்டுக்காரர் பாத்துப்பார்... ஹி ஹி... முடிஞ்சா அவங்க கிட்டயும் இதை சொல்லி கெமிகல் கலந்த கண்ட எலி மருந்தின் உபயோகத்தை தவிர்க்கலாம்...
இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனிதன் ஒதுக்கும்போது தான் விபரீதங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன நம்மையும் அறியாமல்.... இயற்கை தந்த பற்பல அருட்கொடைகளே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு விடையளிக்கும்போது..... செயற்கையின் மீது நாட்டம் எதற்கு... செயற்கையான பலவற்றின் மீதுள்ள நமது நாட்டத்தை குறைத்து..... இயற்கை வளங்களை பேணி பாதுகாத்து, அவற்றை பெருக்கி வளமான வாழ்வு வாழ முற்படுவோமே....
இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனிதன் ஒதுக்கும்போது தான் விபரீதங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன நம்மையும் அறியாமல்.... இயற்கை தந்த பற்பல அருட்கொடைகளே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு விடையளிக்கும்போது..... செயற்கையின் மீது நாட்டம் எதற்கு...
ReplyDelete......அன்பு தோழரே, ஏதோ வேடிக்கையாக பயனுள்ள குறிப்புகளை தந்து விட்டீர்கள் என்று பார்த்தால், இந்த தத்துவம் # 10456 முத்தாய்ப்பாக வந்து முடிவுரை சொல்லி இருக்குது. நச்.
அட என்னாப்பா நீ, செமையா கலாயிக்கலாம் அப்படின்னு நினச்சா, கடைசில ஒரு சீரியஸ் மேட்டர் போட்டு இப்படி கலாயிக்க கலாயிக்க முடியாம பண்னிட்ட
ReplyDelete//அன்பு தோழரே, ஏதோ வேடிக்கையாக பயனுள்ள குறிப்புகளை தந்து விட்டீர்கள் என்று பார்த்தால், இந்த தத்துவம் # 10456 முத்தாய்ப்பாக வந்து முடிவுரை சொல்லி இருக்குது. நச்//
ReplyDeleteThanks.... என்ன பண்றது, அதுவா வருது... :-)
//அட என்னாப்பா நீ, செமையா கலாயிக்கலாம் அப்படின்னு நினச்சா, கடைசில ஒரு சீரியஸ் மேட்டர் போட்டு இப்படிசீரியஸ் மேட்டர் போட்டு இப்படி கலாயிக்க முடியாம பண்னிட்ட//
ReplyDeleteஅட விடுங்க மங்கு சார்.... இந்த வாட்டி இல்லேனா அடுத்த வாட்டி முயற்சி பண்ணுங்க.... இதுக்குலாம் போயி பீல் பண்ணிக்கிட்டு ;-) ஹ ஹ...
எல்லாமே செம சூப்பரான தகவல்கள்.
ReplyDelete//எல்லாமே செம சூப்பரான தகவல்கள்//
ReplyDeleteஎனது பதிவுகளுக்கு வரும் வழக்கமான பின்னூட்டத்தில் ஒன்றை பல நாட்களுக்கு பின் மீண்டும் பெற்றது மகிழ்ச்சி.... நன்றி சகோ...
அப்பாடா ஒரே மூச்சில் படித்துட்டேன், பொருப்பா பதிவு எழுதுவீங்கன்னு நினைத்தேன், ஆனா உங்க தங்ஸ் வரதுக்குள்ள இவ்வளவு பொருப்பா இருப்பீங்கன்னு எதிர்பாக்கல,
ReplyDeleteஎல்லாம் சில தெரிந்த டிப்ஸா இருந்தாலும் அதை நீங்க சொல்லிய விதம் அருமை, எலிக்கு சொன்ன குறிப்பு புதுமை, நானும் யாரெல்லாம் எலி தொல்லை என்று சொல்கீறார்க்ளோ அவர்களுக்கெல்லாம் சொல்கிறேன்.// வாழ்த்துக்கள்.
ஜலீலாக்கா விருது கொடுத்தாங்கன்னு, டிப்ஸ் எழுதி, அவங்க இடத்தப் பிடிக்க முயற்சியா? விருது கொடுத்தவங்களுக்கே ஆப்பா? அதெல்லாம் நடக்காது!!
ReplyDelete/நம் இல்லத்தரிகள் எல்லாருக்கும்// நரி மாதிரி அதென்னா அரி??
எலிமருந்து - மிளகு - புது தகவல்; யாராவது செஞ்சுப் பாத்து, வொர்க் ஆவுதான்னு சொல்லுங்கப்பா.
//அப்பாடா ஒரே மூச்சில் படித்துட்டேன், பொருப்பா பதிவு எழுதுவீங்கன்னு நினைத்தேன், ஆனா உங்க தங்ஸ் வரதுக்குள்ள இவ்வளவு பொருப்பா இருப்பீங்கன்னு எதிர்பாக்கல//
ReplyDelete:-) ஹ ஹ.... தேங்க்ஸ் ஜலீலாக்கா.... எல்லாம் உங்க வலை பதிவுகளை மேஞ்சதோட விளைவுன்னு நினைக்குறேன்....
//ஜலீலாக்கா விருது கொடுத்தாங்கன்னு, டிப்ஸ் எழுதி, அவங்க இடத்தப் பிடிக்க முயற்சியா? விருது கொடுத்தவங்களுக்கே ஆப்பா? அதெல்லாம் நடக்காது!!//
ReplyDeleteவில்லங்கமான ஆளுதான் நீங்க.... கோத்துவிடுறீங்க பாத்தீங்களா... :-))
///நம் இல்லத்தரிகள் எல்லாருக்கும்// நரி மாதிரி அதென்னா அரி??//
ReplyDeleteஉண்மையா சொல்றேன்... பத்து வாட்டிக்கு மேல proof பாத்துட்டு தான் பப்ளிஷ் பண்ணேன்... அதெப்புடினே தெரில.... உங்க கண்ணுக்குனு சிக்குது ஹுஸைனம்மா... உங்கள டீச்சரம்மானு நான் சொல்வது சரி தாணு அப்பப்போ இப்டி மண்டைல கொட்டு வெச்சு ப்ரூவ் பண்ணிட்டு இருக்கீங்க.... ஹ ஹ.. தேங்க்ஸ் சு(கு)ட்டி காமிச்சதுக்கு... :-)...
நான் சொல்ல வந்தத நீங்க சொல்லிட்டீங்கள், ஆனால் நானும் சின்ன புள்ள ஆசை பட்டு சின்சியரா அதுவும் பொருப்பா படத்துடன், எழுதியிருக்காரேன்னு விட்டு விட்டேன்.
ReplyDeleteயோசித்து பார்த்தா எலிக்கு மிளகை வைத்தால் அது வந்து சாப்பிடும் அதன் சின்ன தொண்டைக்கு காரம் தாங்க முடியாமல் அந்த நேரத்தில் தன்ணீரும் கிடைக்கலன்னா அம்பேல் தான்.
ReplyDeleteஹுஸைனாம்மா எனக்கா ஒரு வார்த்த கேட்டீங்களே ரொம்ப தாங்க்ஸு
அட அட அட இது தானா மேட்டரு
ReplyDelete//சின்ன புள்ள ஆசை பட்டு சின்சியரா அதுவும் பொருப்பா படத்துடன், எழுதியிருக்காரேன்னு விட்டு விட்டேன்//
ReplyDeleteசின்ன புள்ள ஓகே.. பொறுப்பா எழுதிருக்கேன்னு சொன்னதும் ஓகே... ஆனா அதுனால தான் விட்டேன்னு ஒரு போடு போட்டீங்க பாருங்க....
எப்பா...
இனிமே இந்த department பக்கம் வரவே கூடாது.... போனா போதுனு விடுறேன், இல்லே மவனே துபாய் ஆட்டோ வருமாக்கும்னு சொல்லாம சொல்ற மாதுரி இருக்கு.... ஹ ஹ...
//யோசித்து பார்த்தா எலிக்கு மிளகை வைத்தால் அது வந்து சாப்பிடும் அதன் சின்ன தொண்டைக்கு காரம் தாங்க முடியாமல் அந்த நேரத்தில் தன்ணீரும் கிடைக்கலன்னா அம்பேல் தான்//
ReplyDeleteR&D வேலைய ஆரம்பிச்சுட்டாங்க ஜலீலாக்கா..... அடுத்து கொசுவுக்கு என்னத்த வெக்கலாம்னு அப்டியே நூல் புடிச்சு... கண்டு புடிச்சு விரைவில ஒரு பதிவு எதிர் பாக்கலாம் கொசுத்தொல்லைக்கு....
//ஹுஸைனாம்மா எனக்கா ஒரு வார்த்த கேட்டீங்களே ரொம்ப தாங்க்ஸு//
ReplyDeleteஅட அவங்க தான் சும்மா ஏதோ விளையாட்டா கோத்துவிட்டாங்கனா நீங்க வேற ஜலீலாக்கா.... அதென்ன அவங்க சொல்றது... அதெல்லாம் நடக்கதுன்னு... நான் சொல்றேன் அதுலாம் நடக்கவே நடக்காது போதுமா..... :-))
//அட அட அட இது தானா மேட்டரு//
ReplyDeleteஅடடே வாங்க வாங்க புதுவரவு... முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...
நல்ல பதிவு ,டிப்ஸ் உடன் படங்கள் அருமை.முடிவாய் முத்தான கருத்து.
ReplyDelete//நல்ல பதிவு ,டிப்ஸ் உடன் படங்கள் அருமை.முடிவாய் முத்தான கருத்து//
ReplyDeleteஐ... புது சொந்தம்... தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி....
சூப்பர் மச்சான், எனக்கு ஆபீஸ் மாற்றதால முன்ன மாதிரி நெட் பாக்க முடில, வேலைக்கே டைம் சரியாய் இருக்கு, அந்த gapeளையும் எப்டியோ படிச்சிட்டேன், கலக்குற போ...
ReplyDeleteநல்ல உபயோகமான தகவல்கள், எறும்பு போல பல்லிக்கு எதும் இல்லையா?
ReplyDeleteதுணியில் பான்பராக்கு கறை போக என்ன செய்யனும் இது போல இன்னமும் தகவல் தாருங்கள்.
நன்றி
//சூப்பர் மச்சான், எனக்கு ஆபீஸ் மாற்றதால முன்ன மாதிரி நெட் பாக்க முடில, வேலைக்கே டைம் சரியாய் இருக்கு, அந்த gapeளையும் எப்டியோ படிச்சிட்டேன், கலக்குற போ...//
ReplyDeleteஅடடே வா மச்சான்... வராதவாக வந்துருக்கீக!!!! என்ன சாப்புட்ரிய...??? ஹ ஹ... எல்லாம் ஒரு காமன் கர்டசி தான்... அப்பப்ப வந்து போங்க எம்புட்டு நாளைக்கு தான் மாடா உழைக்கிறது...
//நல்ல உபயோகமான தகவல்கள், எறும்பு போல பல்லிக்கு எதும் இல்லையா?//
ReplyDeleteஏன் இல்ல!? பள்ளி மிட்டாய் வெச்சு பாருங்க... பட் மிட்டாயில வெசத்த தடவி வைக்கணும்..... ;-) ஹ ஹ.....
(என்னா... கொல வெறி... விட்டா ஊருல இருக்குற எல்லா பூச்சிக்கும் கேப்பீங்க போல...:-))) )
//துணியில் பான்பராக்கு கறை போக என்ன செய்யனும்//
ReplyDeleteஆராய்ச்சியாளர்கள் ரொம்ப தீவிரமா முயற்சி பண்ணிட்டு இருக்காங்க... கூடிய விரைவில் சொல்லுவாங்க.... ஹி ஹி...
//இன்னமும் தகவல் தாருங்கள்.
ReplyDeleteநன்றி//
முயற்சி பண்றேன், தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி...
இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனிதன் ஒதுக்கும்போது தான் விபரீதங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன நம்மையும் அறியாமல்.... இயற்கை தந்த பற்பல அருட்கொடைகளே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு விடையளிக்கும்போது..... செயற்கையின் மீது நாட்டம் எதற்கு... செயற்கையான பலவற்றின் மீதுள்ள நமது நாட்டத்தை குறைத்து..... இயற்கை வளங்களை பேணி பாதுகாத்து, அவற்றை பெருக்கி வழமான வாழ்வு வாழ முற்படுவோமே//
ReplyDeleteமிக அருமையான் விசயங்கள்.வாழ்த்துக்கள்.
[வழமான வாழ்வு வாழ முற்படுவோமே] [வளமான]
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் தொடர்ந்து நல்லவிசயங்கலை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நீரோடையில் நாட்டுப்புறப்பாட்டு
எழுதியிருக்கேன் பாருங்க.
முதன்முதலாய் வந்தேன் உங்க பக்கம் பயனுள்ள தகவல்கள் கை நிறைய தந்தீர்கள் நன்றி தோழா...
ReplyDeleteஅன்புடன் மலிக்கா said...
ReplyDelete//மிக அருமையான் விசயங்கள்.வாழ்த்துக்கள்.
[வழமான வாழ்வு வாழ முற்படுவோமே] [வளமான]//
வாங்க வாங்க மலிக்கா... தாங்கள் சொன்ன திருத்தத்திற்கு மிக்க நன்றி... உள்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தரவேண்டும்.... இதோ வரேன் உங்கள் பக்கத்திற்கு...
ஜெய்லானி said... //உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி பங்காளி... உங்களோட முதல் பின்னூட்டமே விருதாக அமைந்தது கூடுதலான மகிழ்ச்சி... மத்ததை உங்கள் பக்கத்திற்கு வந்து சொல்றேன்.....
தமிழரசி said...
ReplyDelete/முதன்முதலாய் வந்தேன் உங்க பக்கம் பயனுள்ள தகவல்கள் கை நிறைய தந்தீர்கள் நன்றி தோழா//
அட!!!! மழை கிழை வரப்போதா.... வராதவகல்லாம் வந்துருக்கீக.... உங்களோட வருகைக்கும், முதல் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க... காபி கீப்பி எதாதும்??? :-) ஹி ஹி...
//ஹுஸைனம்மா--//எலிமருந்து - மிளகு - புது தகவல்; யாராவது செஞ்சுப் பாத்து, வொர்க் ஆவுதான்னு சொல்லுங்கப்பா//
ReplyDeleteஒர்க் அவுட் ஆயிடுச்சே! மங்கு எலி வந்து ஒன்னும் சொல்லாமலேயே போய்டுச்சு. அப்ப மிளகு மேட்டர் சக்ஸஸ்.
சூப்பர் தகவல்கள்.. அனைத்தும் உபயோகப் படும்..
ReplyDeleteஎங்கே போனாலும் கடைசியில் இங்கு வந்து விட்டீர்..
//இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனிதன் ஒதுக்கும்போது தான் விபரீதங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன //
நச் வரிகள் தல...
ஜெய்லானி said... /ஒர்க் அவுட் ஆயிடுச்சே! மங்கு எலி வந்து ஒன்னும் சொல்லாமலேயே போய்டுச்சு. அப்ப மிளகு மேட்டர் சக்ஸஸ்//
ReplyDelete;-))))
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ReplyDelete//சூப்பர் தகவல்கள்.. அனைத்தும் உபயோகப் படும்..//
//நச் வரிகள் தல...//
வாங்க பிரகாஷ்... தங்கள் மீண்டும் வந்தது மிக்க மகிழ்ச்சி.... பின்னூட்டத்துக்கு நன்றி... ...
இயற்கை தந்த பற்பல அருட்கொடைகளே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு விடையளிக்கும்போது.....//
ReplyDeleteஉண்மை ..நல்ல பகிர்வு அன்புதோழன் நன்றீ
thenammailakshmanan said... /நல்ல பகிர்வு//
ReplyDeleteவாங்க சகோ தேனம்மை... உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி...