Monday, February 8, 2010

நீங்களுமா?

பாசம் பொதுவானது, அது சில சமயம் நம்மள லூசா கூட காட்டும் மத்தவங்க கண்ணுக்கு ...
உயிரற்ற சிலதுக மேல உள்ள பாசத்த பத்தி தாங்க பேசுறேன்....


சின்ன வயசுல முதல் முதல்ல வாங்கின சைக்கிள், அது நம்மள சுமந்துட்டு ஊரு பூரா சுத்தினதும், அதுல உக்காந்து போறப்ப ஏதோ ரோல்ஸ் ராய்ஸ்ல போற மாத்ரி நடந்து போறவங்கள அப்டியே ஒரு ரேஞ்சா லுக் விட்டுட்டு... என்னவோ சைக்கிளுக்கு லைசென்ஸ் வாங்க போற மாத்ரி ரோட்ல S போட ட்ரை பண்ணி, விழுந்து சில்ற வார்னாலும் கூட அடங்காம வேற யாரும் பாக்ளயேனு சுத்தி முத்தி பாத்துட்டு ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சுட்டு மறுபடி அதே கெத்தோட ஏறி போறதும்.... என்ன பொறுத்த வர என்னோட சைக்கிள என்கூட சேந்து பல அடிவாங்கினதாலையோ என்னவோ அது ஒரு தோழனாக தெரிஞ்சுச்சு எனக்கு...



போதும்பா... வண்டி ரொம்ப பலசாகிடுச்சு.... இத வித்ரலாம்னு வீட்ல சொன்னா கூட... இல்ல வேணா இதுவே இருக்கட்டும்னு சொல்றதன் பின்னாடி ஏதோ ஒரு உணர்வு... அப்டியே மல்லுகட்டி அத வித்துட்டாலும் அதுக்கப்றம் அத எங்க பாத்தாலும் மனசுக்குள்ள ஒரு பத பதைப்பு நம்ம வண்டிய யாரோ சுட்டு ஓட்டிக்கிட்டு போற மாத்ரி இருக்கும் ...


ஏ!!! அங்க பாத்தியா, அது ஏன் வண்டி தெர்யுமானு வண்டி வாங்கினவனுக்கு வெளங்காத அளவுக்கு பக்கத்துல இருக்றவங்க்கிட்ட சொல்லிகாட்டுரதுண்டு...

இது சைக்கில் தாண்டி எல்லாத்துக்கும் பொருந்தும்...


காலேஜ் படிக்ரப்போலேந்து வெச்ருந்த மொபைல பல வருஷம் கழிச்சு விக்ரபோ கூட same feeling.... நாம தங்கிருந்த வீடு, ஊரு, தெரு, ஸ்கூல் , கிளாஸ், கிளாஸ் பெஞ்ச் இப்டி உயிரில்லாத எதுமேளையும் பாசம் வெக்ர லூசு நாமட்டும் இல்லேன்னு நெனக்றேன்...

ஒரு தடவ நா ஆச ஆசையா வளத்த செடிக்கு தண்ணி ஊத்தாம அதன் இளைலாம் காய தொடங்கிருப்பத பாத்துட்டு ஊருக்கு போய்ட்டு வந்த அதே வேகத்துல வீட்ல எல்லார்கிட்டயும் ஆய் ஊய்ன்னு குதிச்சது இன்னிக்கும் பசுமையான நினைவுகள் தான்...




ரோட்ல கெடந்த குட்டி பூனைய நாய் கடிச்ரும்னு எங்க வீட்டு கொள்ள புறத்துல வெச்சு, அட்டைல அதுக்கு வீடு கட்டிகொடுத்து... பால் ஊட்டி... அது போன உச்சாலாம் கிளீன் பண்ணி... பத்து நாள் கழிச்சு அதுவா செத்து போனதும்... ஏதோ பெரிய கொல பண்ணிட்ட மாத்ரி அதுக்காக அழாத கொறையா feel பன்னதுலாம் நாம என்ன அம்புட்டு வெள்ளந்தியாவா இருந்தோம்னு நெனச்சு பாக்ரதுண்டு

( அட நம்புங்கப்பா நா இப்பவும் அப்டி தான் ஹி ஹி)...


இந்த பொலம்பல்ஸ் of indiaku காரணம் வேற ஒன்னும் இல்ல பங்களிங்க்லா.... சமீபத்துல அடிச்சுட்டு வந்த ஒரு விசிட் தான்... பக்கத்து ஊராண்ட ஏன் வயசு கடைய ஒன்னு வெச்சுட்டு அமைதியா இருந்தாங்க ஏன் அப்பா... கடைக்கு ரெண்டு பக்கமும் கடைக்கு வாசல்ன்க்ராதாள, பாவிங்க ஏதோ சாமான் வாங்க போற மாதரியே வந்து டாட்டா காமிச்சுட்டு இந்த பக்கம் ஏறி அந்த பக்கம் போறானுங்கனு பாதி கடைய குடுத்துட சொல்லி நாங்கல்லாம் சேந்து வற்புறுத்தி குடுக்க வெச்சோம்....


நாலு பொண்ணுங்கள கட்டி குடுத்து கற சேத்தது, உங்கள இப்டி படிக்க வெச்சு ஒரு ஆளாக்கினது எல்லாமே அந்த ஒரு கடைய வெச்சு தான்.... அது எனக்கு மூத்த புள்ள மாத்ரின்னு அடிகடி சொல்வாரு... இப்போ பாதிய குடுத்தப்றம்... போன வாரம் நா போயிருந்தப்போ.... கட இப்டி ஆய்டுச்சுன்னு அவர் சொல்றபோ கண் கலங்கினத பாத்ததும்.... என்ன சொல்ல.... என் அப்பா மனசு எனக்கு தெரியாத என்ன...


"வயசாகிட்டே இருக்குல.... டெண்சன கொறைக்க வேணா... ரெஸ்ட் எடுங்க.... டைம் பாசுக்கு பிசினஸ் பாத்தா போதும்.... "அதான் குடுக்க சொன்னேன்னு சொல்லி ஒரு மாத்ரி ஆறுதல் சொல்லிட்டு வந்த்ருகேன்..... வந்ததுலேந்து அதே போல நா feel பண்ணின சில கனா கண்ட காலங்கள ரிவைண்ட் பண்ணி பாத்துட்டு.... ஹ்ம்ம்... எல்லாருமே அப்டிதானோன்னு யோசுசுட்டே இருந்தேனா.... சரி அதையே பதிவா போட்டு கேட்டு தான் பாத்ருவோமே காசா பணமானு தான் இந்த பதிவு... ஏங்க நீங்களும் அப்டியா.....?

(எனனவோ போங்க மக்கா வர வர ரொம்ப வெள்ளந்தியா ஆகிற்றுக்கேனோ....? அட என்னாதிது, அப்படியெல்லாம் பாக்கப்டாது ஹி ஹி...)





9 comments:

  1. வெள்ளந்தியான அன்பு தோழரின் லூசுத்தனமான அன்புக்கு வணக்கம்.

    ReplyDelete
  2. /லூசுத்தனமான அன்புக்கு/

    குசும்பு தானே....

    ;-)ஏன்....?
    இந்த மாத்ரி லூசு வேலை நீங்கல்லாம் பண்ணதே இல்லையோ?

    ReplyDelete
  3. //லூசுத்தனமான அன்புக்கு வணக்கம்//

    எது லூசா....?

    ஆஹா..... நம்ம weakness வீனாவுல போச்சு....

    ReplyDelete
  4. இடுகையில் சொல்லப் பட்ட கருத்துக்கள், வட்டார மொழி கலந்து நல்லா இருக்கு (எழுத்துப் பிழைகளை சரி செய்ய முயற்சிக்கவும்) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. /எழுத்துப் பிழைகளை சரி செய்ய முயற்சிக்கவும்/

    என்ன செய்றது பிரதர்.... தங்லிஷில் type பண்ணியே பலக்கமாய்டுச்சு....

    தமிழ் மறந்து போச்சு....

    பெரும்பாலான எழுத்துபிழைகள் உதாரணதுக்கு...
    நான் -க்கு பதிலா நா,
    வைத்திருந்த-க்கு பதிலா வெச்ருந்த,
    பார்பதற்கு பதிலா பாக்றது

    இது போன்றவை பேசும் நடையிலே பதிவு இருக்கட்டும் என்பதற்காக தெரிந்தே உருவாக்கியது.... மற்றவை என் அறியாமையே என்பதில் எனக்கும் வறுத்தம் தான்...

    ReplyDelete
  6. thozha:) unga anba nenachu pularichittu kai ellamm....chel time miss pannuronu thonum aana ennatha kadaisila kondu poporomnu peelingsa apdiyae vitturathu....

    malarum ninaivugal thondi thuruvi eduthuteenga:)

    ReplyDelete
  7. //aana ennatha kadaisila kondu poporomnu peelingsa apdiyae vitturathu//

    இவ்ளோ சின்ன வயசுல இவ்ளோ ஒரு ஞானமா...? ;-)(இப்போ இங்க அரிக்குது)

    //malarum ninaivugal thondi thuruvi eduthuteenga:)//

    கடைசில கார்பரேசன் வேல (தோண்டுறது), சமையல்காரன் வேலைலாம்(துருவுறது) பண்ணிட்டேனு எவ்ளோ நாசூக்கா சொல்லிட்டீங்க.... இருந்தும் தங்கள் முதல் வருகைக்கு டேங்க்ஸ்ங்கோ... :-)

    ReplyDelete
  8. உங்க நகைச்சுவை நல்லாருக்கு. உதாரணமா,

    //அம்புட்டு வெள்ளந்தியாவா இருந்தோம்னு நெனச்சு பாக்ரதுண்டு(அட நம்புங்கப்பா நா இப்பவும் அப்டி தான்//

    நம்புறோம்!!

    இப்படித்தான் பெரியவங்களுக்கு ஏதாவது ஒண்ணோட ரொம்ப செண்டிமென்அல் அட்டாச்மெண்ட் இருக்கும். அதை நம் சௌகரியத்துக்காக துறக்கணுன்னா ரொம்ப வருத்தமாத்தான் இருக்கும்.

    ReplyDelete
  9. அது நகைச்சுவையா..... ஆனாலும் உங்களுக்கு ஓவர் குசும்பு ஹுஸைனம்மா.... உண்மைய சொன்னா ஒத்துக்க மாட்டீங்களே...

    ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...