//இப்படித்தான் பெரியவங்களுக்கு ஏதாவது ஒண்ணோட ரொம்ப செண்டிமென்அல் அட்டாச்மெண்ட் இருக்கும். அதை நம் சௌகரியத்துக்காக துறக்கணுன்னா ரொம்ப வருத்தமாத்தான் இருக்கும்.//
ஹுஸைனம்மாவோட இந்த பின்னூட்டத்தை இப்போ தான் பார்த்தேன்... இதை அவர்கள் சொல்லும்போது சில நாட்களுக்கு முன் படித்த ஒரு விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது....
விஷயம் சற்று பெரியதாக இருப்பதால் பதிலாக போடுவதைவிட பதிவாக போடுவது தான் உகந்தது என்பதால் பதிகிறேன்...
நாட்கள் நொடிகளாய் மாறி நம்மை விட்டு கடந்து சென்று கொண்டிருப்பதற்கு நேற்று வந்த வார விடுமுறையே சாட்சி... இன்னும் மூன்றே நாளில் இந்த வாரம் முடிய போவதும், அட இப்போ தான் வந்துச்சு அதுக்குள்ள ஒருவாரம் ஓடிபோச்சா என்று நாம் நம் நட்பு வட்டத்தில் அடிக்கடி சொல்லிக்கொள்வதும், இரண்டாம் குழந்தை பருவத்தை நோக்கி காலம் நம்மை விரைவாக இழுத்துச்செல்வதை உணர்ந்த ஒவ்வொருவரும் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கின்றோமோ என்று ஒருமுறையாவது எண்ணி பார்த்திருப்பர்...
அப்படி இருக்க நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா.... அப்படியானால் இதை கடைப்புடியுங்கள் என்று சொல்ல பட்டிருந்தது அக்கட்டுரையில்...
அது என்னவென்றால் யார் தங்களுடைய முதுமை காலங்களில் (அதாவது ரிடைர்மன்ட்டிர்க்கு பிறகும்), ரிடைர் ஆகிவிட்டோம் எல்லாம் முடிந்தது என்று முடங்கி விடாமல் தங்களுக்கு விருப்பமான ஒன்றை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நீண்ட ஆயுள் வாழ்வதாக ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக்கிறார்களாம்....
அவை தங்களுக்கு விருப்பமான தொழிலாகவோ செயலாகவோ எதுவாகவும் இருக்கலாம்......
(ஒடனே வேலை வெட்டி இல்லாதவன் கூட தான் ரொம்ப நாள் வாழ்ரானு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க புடாது, படிச்சத சொல்றேன் அவ்ளோ தான்)
ஆக ரிடைர் ஆகிட்டோம்னு சும்மா இருக்காம எதையாது செஞ்சுட்டு இருக்க சொல்லி விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள்....
அது தங்கள் விருப்பமான மனதிற்கு உகந்த செயலாக இருக்கும் பட்ச்சத்தில் உடலையும் மனதையும் அது சோர்வடையாமல் வைத்துகொள்ள உதவுவதாகவும். இப்படி தொடர்பவர்கள் தங்களுக்கு வயதாவதையும் மறந்து புத்துணர்ச்சியுடன் வாழ்வதாகவும் சொல்கிறார்கள்......
இதோ இவரை போல
அதுவே retirementku பிறகு தங்களுக்கு தெரியாத விஷயங்களை செய்கிறவர்களுக்கு எதிர்மறை விழைவுகள் உண்டாகி சீக்கிரமே போயி சேர்ந்து விடுவதாகவும் சொல்கிறார்கள்....
கஷ்டப்பட்டு உழைத்த காசை ரிஸ்க் எடுத்துவிட்ட கட்டாயத்தினாலும், தொடங்கிய அந்த செயலோ தொழிலோ வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதால் அதிக உழைப்பும் கவனமும் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடுவதாலும்... மன அழுத்தம் உண்டாகி எதிர்மறை விழைவுகளையே உண்டாக்குவதால் அவை ஆயுளை குறைப்பதாகவும் சொல்கிறார்கள்...
ஆகவே சொந்தகார பங்களிங்களா..... நமக்கு பிடித்த பழக்கப்பட்ட விஷயங்களை இளமையிலும் சரி முதுமையிலும் சரி சந்தோசமாக முழு மனதுடன் தொடர்ந்து செய்வோம்.... நீடூழி வாழ்வோம்....
நமக்கு பிடித்த பழக்கப்பட்ட விஷயங்களை இளமையிலும் சரி முதுமையிலும் சரி சந்தோசமாக முழு மனதுடன் தொடர்ந்து செய்வோம்.... நீடூழி வாழ்வோம்....
ReplyDelete...........சரியா சொல்லி இருக்கீங்க. Active life-style keeps one young at any age. :-)
உபயோகமான பகிர்வு, கவனத்தில் வச்சுக்குவோம்.
ReplyDeleteஅப்ப நீங்களும் ஒரு முழு பிளாக்கர் ஆகிட்டீங்க!! ஆமா, பின்னூட்டத்துக்கான பதிலையே ஒரு பதிவாக்கிட்டீங்களே!!
ReplyDeleteஅதுசரி, என் கமெண்டை ரெஃபர் பண்ணிப் போடும்போது அதிலுள்ள எழுத்துப்பிழையைச் சரி செஞ்சுட்டுப் போட்டிருக்கக்கூடாதா? :-)
//Active life-style keeps one young at any age. :-)//
ReplyDeleteobsolutely...
//உபயோகமான பகிர்வு,கவனத்தில் வச்சுக்குவோம்//
ReplyDeleteThanks Bro, கண்டிப்பா வருங்காலத்தில் நமக்கும், தற்போது முதுமையில் அடி எடுத்து வைக்கும் நம் பெற்றோரை அவர்களின் விருப்பப்படி கவனித்து கொள்ளவும் உதவும்....
//ஒரு முழு பிளாக்கர் ஆகிட்டீங்க!! //
ReplyDeleteநெசமாத்தான் சொல்றீங்களா....???? :-)
(என்ன வெச்சு காமெடி கீமெடி பன்லியே) ;-)
//அதுசரி, என் கமெண்டை ரெஃபர் பண்ணிப் போடும்போது அதிலுள்ள எழுத்துப்பிழையைச் சரி செஞ்சுட்டுப் போட்டிருக்கக்கூடாதா? :-)//
செய்திருக்கலாம்...
ஆனால் தங்கள் எழுத்திற்கு உரிமையாளர் தாங்கள் தானே... அதை உங்கள் அனுமதி இன்றி என் விருப்பப்படி திருத்துவது அநாகரீகமாக இருக்கக்கூடுமோ என்று தான் செய்யவில்லை....
Whatever originality always looks best....
Nice Article, Machan... Nee ippailam romba kalakura po... Unfortunately correct time ku un pathivukku comments poda mudila... Soolnilai apdi machan...
ReplyDelete//Nice Article, Machan... Nee ippailam romba kalakura po... Unfortunately correct time ku un pathivukku comments poda mudila... Soolnilai apdi machan...//
ReplyDeleteThat's k machan... I can understand you... Am really happy that you've been following ma blog... comment doesn't matter machan...
But ipdi appappo edhaadhum comment varrapo... next idha vida nalla irukanumengra kadamai unarchi varudhu... ;-) ha ha....
போங்க கலக்கிட்டிய, மைண்ட்ல வச்சுக்குறேன்
ReplyDelete//போங்க கலக்கிட்டிய//
ReplyDeleteஎத பிரதர்????இப்டி மொட்டையா சொன்னா எப்டி....? ஹ ஹ....(சுத்தி இருக்ரவக எல்லாம் வில்லங்கமான ஆளுக.... உஷார்....)
ஆகா அசத்தல். பதிலுக்கு பதிவேபோட்டாச்சே பேஷ் பேஷ்..
ReplyDeleteநல்ல பதிவு, வயதான காலத்தில் அவரவருக்கு பிடித்த தொழில் அல்லது விளையாட்டுகளில் ஈடுபட்டு மனதை சந்தோஷமாய் வைத்து கொள்வது ( இது கண்டிப்பாக சரியே
ReplyDelete"ஆகா அசத்தல்"
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.... தொடரட்டும் சொந்தம்....
//நல்ல பதிவு//
ReplyDeleteரொம்ப நன்றி...