Thursday, February 11, 2010

ரயில் பயண பாடம்

இது மெயிலில் வந்தது தான் இருந்தும் என் மனசை தொட்டதால் நமக்கேற்ற சில மாசாக்களை தூவி பகிர்ந்துகொள்கிறேன்...


பச்சை விளக்கு வண்டிக்கு உத்தரவிட... குபுக் குபுக் என்ற அதற்கே உரிய பாஷையில் நன்றி சொல்லி புறப்பட்டது ரயில்... ஆடவரும் பெண்களும் அடங்கிய கலவையாக கிளம்பிய ரயிலில், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக கலை கட்ட தொடங்கியது.... அந்த compartmentil காலேஜ் கும்பலும் உண்டென்பதால் அவர்களுக்கே உரிய கருத்துமிக்க சில பாடல்களை பாடிக்கொண்டும், கோரஸ் போட்டுக்கொண்டும் ஆரவாரத்துடன் தொடங்கியது பயணம்....

அந்த compartmentil ஜன்னலோரத்தில் ஒரு முதியவரும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அமர்திருந்தனர்...

அது வரை அமைதியாக இருந்த அந்த ஆண் முகத்தில் ரயில் செல்ல செல்ல ஒரு இனம் புரியாத பரவசம்...."அப்பா பாருப்பா.... மரம்லாம் பின்னாடி போது பாரு.... எவ்ளோ அழகா இருக்குல.... "அப்பா அத பாரேன் அப்பா இத பாரேன் என்று அந்த ஆண் பரவசத்தோடு சொல்லி மகிழ்வதை பார்த்த அனைவருக்கும் முப்பது வயதை கடந்துவிட்ட ஒருவனின் செயலாக அது படவில்லை என்பதால் அனைவருமே சற்று முகம் சுழித்தனர்.... சிலர் அவர்களின் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் முனு முனுக்கவும் கூட செய்தனர்...."சரியான லூசு போல அணு.... " புதிதாக திருமணமான சுரேஷ் தன் மனைவி அனுவிடம் சொன்னான்....

திடீரென வெளியில் மழை கொட்ட தொடங்கின.... மழைச்சாரல் திறந்து வைக்கப்பட்டிருக்கும் சன்னலின் வழியாக பட்டு தெறிக்க தொடங்கியது.... அனைவரும் அவசர அவசரமாக சன்னல்களை மூடிக்கொண்டிருந்தார்கள் அந்த compartmentil.... ஆனால்... அந்த இளைஞன் தற்போது மேலும் உற்சாகமடைந்தவனாய்.... சன்னலின் வெளியில் கையை நீட்டி மழை துளியின் மெல்லிய ஸ்பரிசத்தை தொட்டு ரசித்து கொண்டே..... கண்களில் பிரமிப்புடன்...."அப்பா.... இது எவ்ளோ அழகா இருக்குல...." தன் மகிழ்ச்சியை தன் தந்தையிடம் சொல்லிப்பகிர்ந்து கொண்டான்.....தொடர்ந்து வெளியில் கை நீட்டி மலையில் கையை ஆட்டி விளையாடிகொண்டிருந்தான் அவன், மழைச்சாரல் வண்டியின் உள்ளே அடித்துகொண்டிருக்க..... எதிரில் அமர்ந்திருந்த அணுவின் மேல் பட்டு அவளின் உடைகள் நனையவே சீற்றத்துடன் சுரேஷ் அந்த முதியவரை பார்த்து....
"யோ கெழவா, உன் பையனுக்கு தான் அறிவில்லனா உனக்குமா.. வெளில மழை பேயுறது உன் கண்ணனுக்கு தெரில...

உன் பையன் லூசுனா ஏதாது மெண்டல் ஆஸ்பத்திரில போய் சேத்துவிடு.... அத விட்டுட்டு இப்டி publicla கூட்டிட்டு வந்து எல்லார் உயிரையும் வாங்காத..."கோவத்தை கொட்டி முடித்த சுரேஷிடம் தயங்கி மெல்லிய குரலில் முதியவர் பேசத்தொடங்கினார்...
"மன்னிச்சுடுங்க தம்பி..... ஆஸ்பத்திரிலேந்து தான் வந்துட்டு இருக்கோம்.... அவனுக்கு பிறவிலேந்தே பார்வை தெரியாதுப்பா... இப்போதான் அறுவை சிகிச்ச முடிஞ்சு பார்வை கெடச்சு ஊர் திரும்பிட்டு இருக்கோம்... இந்த இயற்கைலாம் இவனுக்கு புதுசு அதான் இப்டி நடந்துக்கறான் மன்னிச்சுடு..." என்றார்...


Matter:

The things we see may be right from our perspective until we know the truth. But when we know the truth our reaction to that will hurt even us. So try to understand the problem better before taking a harsh action.


5 comments:

 1. எழுத்து நடையில் நல்ல முன்னேற்றம், Keep it up. கதையின் கடைசி பகுதி மனதை தொட்டது.

  ReplyDelete
 2. எழுத்து நடையில் நல்ல முன்னேற்றம், Keep it up

  நன்றி சகோதரரே...

  ReplyDelete
 3. கதையில மசாலா மிக்ஸ் பண்ணது நல்லாருக்கு. ஏற்கனவே கதைய வாசிச்சுருந்தாலும், இடையில உங்க சொந்தக் கற்பனைகளும் சரியான இடத்துல வந்தது பொருத்தமாருக்கு. படங்கள் தேர்வும் அழகு.

  ReplyDelete
 4. மெயில் அனுப்புனேன். மெயில் ஐடி சந்தேகமாருந்துது. கிடைச்சிதா இல்லையான்னு சொல்லுங்க.

  ReplyDelete
 5. அடடே... வாங்க வாங்க.... மெயில் வந்துச்சு ஹுஸைனம்மா.... அது ஏன் ஐடி தான்விரைவில் பதில் அனுப்புறேன்....

  ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...