Tuesday, February 9, 2010

மேட்டர் மாணிக்கம் (முதல் உதவி = First Help)

ஹ்ம்ம்.... வர வர ரொம்பத்தான் வெட்டிபேச்சு பேசுரோமோனு நேத்துலாம் ஒரே யோசனை..... பேசறதும் தான் பேசறோம் எதுக்கு STD (History) இசட் பத்தி பேசிக்கிட்டு.... எதுனா உருபடியா பேசுனா. மக்களோட டைம் கொஞ்சம் உபயோகமா இருக்குமேன்னு தான்.... உசுர காக்கும் முதலுதவி பத்தின மேட்டர் தான் இப்போ சொல்ல போறேன்.... இது என் முன்னால் கம்பெனில சொல்லிகுடுத்தது....

அதாவது....

If you have ever been faced with an injury, no matter how small, you will probably know the value of first aid. By fine tuning your first aid skills, you can react more calmly and confidently when assistance is needed.

முதல் பத்தில இன்னா சொல்லிக்ராங்கோனா..... காயம் பெர்சு சின்னதுன்றது முக்கியம் இல்ல.... எதுவா இருந்தா இன்னாபா காயம் காயம் தானே (எப்டி நம்ம தத்துவம்).... ok மேட்டருக்கு வருவோம், காயத்துக்கு தேவையான முதலுதவி மட்டும் தெரிஞ்சு வெச்சுக்நீங்கோனு வெச்சுகோங்க.... அப்பால ஒன்னியும் problem இல்ல.....

Applying first aid can range from cleaning a simple cut on a finger to performing CPR (Cardiopulmonary Resuscitation) for a heart attack victim. First aid is the initial assistance given to a person until medical help arrives.


முதலுதவின்றது தம்மாத்துண்டு வெட்டு காயத்துலேந்து ஆர்ட்டு அடைச்சுக்ற வரைக்கும் ஊட்டாண்டகீற டாக்டர் வர்ர வரைக்கும் உபயோகமா இருக்கும்ன்றாங்கோ....

First aid for burns: நெர்ப்புல சுட்டுகினா

Call for help. - கத்தி ஊர கூட்டு...

Take off any clothes or jewellery around the burned part of the body. - துணி கினி எதுனா இருந்தா கல்டிட்னும்ட்ராங்கோ (சில வில்லங்கமான ஆட்களுக்கு பி. கு : சுட்ட எடத்தாண்ட புண்ல பட்ரத மட்டும் தான்)....

Use cold running water to cool the burn for 20 minutes. - சில்லுனு ஓடினுக்குற தண்ணில 20 நிம்சம் கழுவுனும்....

Do not use ice. - சோக்காகீதுனு ஐஸ் ல கண்டி வெச்சேன்னு வெச்சுக்கோ அப்பால அவ்ளோ தான்

Do not break blisters. - பல்பு ஓடைகர மாத்ரி பல்ப ஓடைக்கப்டாது

Putting cool wet cloths on is okay - சில்லுனுக்கீர தண்ணில முக்கின துணில வேணா வெச்சுக்லாம்பா....


See a doctor or health professional of the burn is bigger than a large coin. - ஒர்ருபா காய்ன கண்டியும் காயம் பெர்சாந்துதுனு வை.... ஒட்னே ஒரு எட்டு ஊட்டாண்ட கீற டாக்டர பாத்துன்னு வந்துரு....

It is important to cool the burn for at least 20 minutes to stop damage to the tissue under the skin - ரொம்ப முக்கியம்.... சுட்ட எடத்துல தோளுக்கு உள்ளகீரதுக்கு ஒன்னியும் ஆகபுடாதுனா, அட்லீஸ்ட் இருவது நிம்ச்சமாது சில்லுனுகீர தண்ணில வெக்கணும்...


First aid for Cuts: வெட்டிகினா

Minor cuts and scrapes usually don't require a trip to the emergency room. Yet proper care is essential to avoid infection or other complications. These guidelines can help you care for simple wounds:

சின்ன வெட்டுகுத்துகுலாம் டாக்டராண்ட போவேனா.... இருந்தும் கொஞ்சம் கவனமாகீறது உசுருக்கு நல்லதுன்றாங்கோ.... கீழ சொல்லிகிற மேட்டரு சின்ன காயத்துக்கு use ஆவுமாம்.....


Stop the bleeding. Minor cuts and scrapes usually stop bleeding on their own. If they don't, apply gentle pressure with a clean cloth or bandage. Hold the pressure continuously for 20 to 30 minutes.

முதல்ல நிர்த்துனும்.... எல்லாத்தையும் நிர்த்துனும்.... சிகப்பா உள்ளேந்து வர்து பாரு ரத்தம் அத நிர்த்னும்... சிராய்ப்பு.... சின்ன வெட்டு.... இதலாம் அதுவா ரத்தம் நின்னுடும்.... நிக்லேனா இருபதுலேந்து முப்பது நிம்ச்சம் வர அமுக்கி புட்ச்சுனுக்னும்....


Clean the wound. Rinse out the wound with clear water. Soap can irritate the wound, so try to keep it out of the actual wound. If debris remains embedded in the wound after cleaning, see your doctor.


காயம் பட்ட எடத்த நல்லா சுத்தம் செய்னும்... சோப் போட்டேனா சுர்ருன்னு இர்க்கும் அதனால சோப் காயத்துலேந்து அப்பாலவே இருக்கட்டும்.... உள்ள எதுனா சிக்கினுக்குதுனா டாக்டர போய் பாத்துட்னும்.....

Thorough wound cleaning reduces the risk of infection.Apply an antibiotic. After you clean the wound, apply a thin layer of an antibiotic cream or ointment to keep the surface moist. The products don't make the wound heal faster, but they can discourage infection and allow your body's healing process to close the wound more efficiently. If a rash appears, stop using the ointment.

நல்லா சுத்தம் பண்றது, இன்பக்க்ஷன்லேந்து காக்க உதவும்... antibiotico இல்ல டாக்டர் குட்த்த கிரீமோ அவசியம் போட்டுக்கணும்.... இதனால காயம் ஒன்னியும் சீக்ரம் ஆரபோறதில்ல.... இர்ந்தும்.... காசுகுட்த்து வாங்கிட்டோம்ல.... அதுகாண்டி மட்டும் இல்ல இன்பக்க்ஷன் ஆகாதுருக்கும்ல.... அதுக்குதான்... கிரீமால அரிப்பு கிரிப்பு எட்த்தா ஒட்னே க்ரீம் use பண்றத நித்திட்னும்.....

Cover the wound. Bandages can help keep the wound clean and keep harmful bacteria out.
Change the dressing. Change the dressing at least daily or whenever it becomes wet or dirty.
Get stitches for deep wounds. A wound that is more than 1/4 inch (6 millimeters) deep usually requires stitches. Proper closure within a few hours reduces the risk of infection.


காய்த்த சுத்தமா வெச்சுக்க மூடிவெச்சுக்னும்... பிளாஸ்திரி அந்த வேலைய சோக்கா செய்யும்பா....

ஈரம் ஆயட்டாலோ, அல்க்கு புட்ச்சாலோ ஒரு நாளைக்கு ஒருதபாவதும் டிரஸ் மாத்தனும்.... (பி.கு காயத்துக்கு போட்டிகிற கட்ட சொல்லிக்ராங்கோ ).... கால் இன்ச், அதாவது... ஆறு மில்லி (குடிமகன்கள் தெளிவாக படிக்கவும்) மீட்டர் ஆழத்துக்கு வெட்டுக்காயம் இருந்தா டாக்டராண்ட போய் தச்சுகினு வந்துரணும்....

Watch for signs of infection. See your doctor if the wound isn't healing or you notice any redness, increasing pain, warmth or swelling.


மேல சொல்லிகிற எல்லாத்தையும் ஒழுங்கா கடபுட்ச்சும், வலியோ , வெதனமோ அல்லது வீக்கமோ இருந்துகினு காயம் ஆர்லேன்னு வெச்சுகோங்க.... மவனே ஒட்னே டாக்டர பாத்து, இன்னாயா மர்ந்து குத்தணு அவசியம் போய் பாத்து கேக்னும்....

If you learn first aid, you may have the opportunity to save a life one day - maybe even your own.

இதுபோல சில மேட்டர மண்டைல வெச்சுக்கினா.... நாலுபேருக்கு நல்லது பன்லாம்ல... ஏன் நமக்கே கூட பண்ணிகினு சீக்ரம் நல்லான நல்லது தானே..... இன்னா நான்ஜொர்றது.....


நான் கண்ட சில கோமெடிகள்idhe smileoda irunga
next meet panren..... he he.....

4 comments:

 1. ........... வர வர ரொம்பத்தான் வெட்டிபேச்சு பேசுரோமோனு நேத்துலாம் ஒரே யோசனை............

  ..........பேசுங்க, வேண்டாங்கல. வெட்டி பேச்சுனு சொல்லாதீங்க. எல்லாம் நல்லாத்தான் பேசுறீங்க.

  இப்படிக்கு "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா.

  ReplyDelete
 2. "கொஞ்சம் வெட்டி பேச்சு" - ஆமா இந்த டைட்டிலு மேடத்தோட காப்பி ரைட்டு & ட்ரேடு மார்க்கு!! ஹி..ஹி.

  ReplyDelete
 3. //பேசுங்க, வேண்டாங்கல. வெட்டி பேச்சுனு சொல்லாதீங்க. எல்லாம் நல்லாத்தான் பேசுறீங்க//

  அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய வெட்டி பேச்சு சங்கத்தலைவி சித்ரா அவர்களின் தாழ்மையான வேண்டுகோளுக்கிணங்க.... இப்பணியை செம்மையாக ஆற்றுவேன் என்பதனை வருத்ததோடு சிரிச்சுகிட்டே சொல்லிக்கறேன்.... இப்படிக்கு

  அன்பான இம்சை அன்புத்தோழன்.... ஹி ஹி..... இதெப்பூடி....? ;-)

  ReplyDelete
 4. //ஆமா இந்த டைட்டிலு மேடத்தோட காப்பி ரைட்டு & ட்ரேடு மார்க்கு!! ஹி..ஹி//

  அதான் மேடம சங்கத்தலைவி ஆக்கிப்புட்டோம்ல பிரதர்... இனி சங்கத்து உறுப்பினர்களுக்கும் அது சொந்தம்.... ஹி ஹி...

  ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...